என் மலர்
மதுரை
- அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.
- காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி முதல் களமாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மது அருந்திவிட்டு போட்டியில் பங்கேற்ற 4 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் உடற்தகுதி பெறாத 3 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் 26 காளைகளும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக மைதானத்திற்கு வெளியே எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளது.
- காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவனியாபுரம்:
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது.
அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக மைதானத்திற்கு வெளியே எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் கண்டு களித்து வருகின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சேலத்தை சேர்ந்த 3 வயது சிறுமி டோரா அவிழ்த்த காளை வெற்றிபெற்றது.
- ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும்.
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கியது.
அவனியாபுரம்:
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.
ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கியது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- இன்றைய தலைமுறை இளைஞர்கள் கல்வி, எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
- ராமேசுவரத்தில் சேது சமுத்திர திட்டம் நடைமுறைக்கு வந்தால் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அடையும்.
மதுரை:
மதுரையில் இன்று ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர்களுக்கு சினிமா ஆர்வம் இருப்பது தவறு அல்ல. இதற்காக அவர்கள் மோதல் போக்கை கையாளக்கூடாது. நடிப்பு என்பது ஒரு கலை. நானும் ஒரு காலத்தில் ரசிகனாக இருந்தவன் தான். அதற்காக மோதல் போக்கை கையாளுவது சரியல்ல.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் கல்வி, எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் சேது சமுத்திர திட்டம் குறிப்பிடத்தக்கது.
இது நேரு காலத்தில் இருந்தே தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் நடந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பேசி உள்ளார்.
ராமேசுவரத்தில் சேது சமுத்திர திட்டம் நடைமுறைக்கு வந்தால் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அடையும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, சனாதான மதவாதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். தமிழகத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்காக கலைஞர் வழியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக கவர்னர் ரவி பாரதிய ஜனதா தலைவராக செயல்பட்டு வருகிறார். இங்கு பா.ஜனதாவுக்கு இரட்டை தலைவர்கள் உண்டு. ஒருவர் அண்ணாமலை, இன்னொருவர் கவர்னர் ரவி. தமிழகத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ உள்ளன. ஆனால் கவர்னர் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாளை தைப்பொங்கல் நாளில் 5 பெரிய மண்பானைகளில் பொங்கல் வைக்கப்படுகிறது.
- சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும் பொங்கல் படைத்து பூஜை நடக்கிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு தைப்பொங்கல் நாளில் ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் மண்பானையில் பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. அதன்படி நாளை(ஞாயிற்றுக்கிழமை) தைப்பொங்கல் நாளில் 5 பெரிய மண்பானைகளில் பொங்கல் வைக்கப்படுகிறது.
பிறகு உற்சவர் சன்னதியில் இருந்து கருவறைக்கு மேளதாளங்கள் முழங்க பொங்கல் வைத்த மண்பானைகள், மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை மூங்கில் தட்டில் வைத்து எடுத்து செல்லப்படுகிறது.
இதனையடுத்து கருவறையில் தெய்வானையுடன் முருகப்பெருமான், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்திய கீரிஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகளிலும் பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும் பொங்கல் படைத்து பூஜை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- மதுரையில் இன்று போகி பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
- இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர்.
மதுரை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, போகி, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் என்று 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதல் நாளான இன்று போகி பண்டிகை அதிகாலை முதல் உற்சாகமாக அனுசரிக்கப்பட்டது. போகி பண்டிகை என்பது பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகும். அதாவது பழையனவற்றை வெளியேற்றும் நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர். அதன் பிறகு தீயை சுற்றிலும் நின்று சிறுவர்கள் மேளம் கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போகி பண்டிகையின் ஒரு பகுதியாக 'நிலைப் பொங்கல்' அனுசரி க் கப்பட்டது. அப்போது பெரியவர்கள் வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, கூரைப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்தும் அழகுபடுத்தினர். இதனைத்தொடர்ந்து தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நிலைப்பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்தபடியாக வடை, பாயாசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைத்து, மதுரை மாவட்டத்தில் நிலை பொங்கல் அனுசரிக்கப்பட்டது.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
- இதில் ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் இன்று போக்குவரத்துத்துறை சார்பாக அமைச்சர் முர்த்தி சாலை பாதுகாப்பு தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு சாலை விபத்துகளை தவிர்த்திடும் நோக்கில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர்பாராமல் நடக்கும் ஒரு சாலை விபத்தின் மூலம் எதிர்பாராத மருத்துவ செலவு, உயிரழப்பு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டு பொது மக்கள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் 11.01.2023 முதல் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த பேரணி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் தொடங்கி கே.கே நகர் தோரண வாயில் வழியாக மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் , இணை போக்குவரத்து ஆணையர் பொன் செந்தில் நாதன், வட்டார போக்கு வரத்து அலு வலர்கள் சிங்கார வேலன், சித்ரா உள்பட வட்டார போக்கு வரத்து ஆய்வா ளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை மாவட்டத்தில் படித்து முடித்து வேலை இல்லாதோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழக அரசின் வேலை வாய்ப்பு துறை சார்பில் படித்து முடித்து வேலை இல்லாதோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
அதன்படி வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்த பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் குடும்ப வருமானம் உடையோர், 45 வயதுக்கு உட்பட்ட பட்டியல் இனத்தவர், 40 வயது இதர வகுப்பினர் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெறுபவர் தமிழகத்தில் பள்ளி-கல்லூரி படித்து இருக்க வேண்டும். ஊதியம் பெறும் எந்தப் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது.
அரசு மூலம் நிதி உதவி பெறுபவராக இருக்கக் கூடாது. பள்ளி- கல்லூரிக்குச் சென்று படிப்பவராக இருக்கக் கூடாது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிந்த- எழுத படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் வருமானம், வயது வரம்பின்றி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த தொழில் கல்வி படித்தவர்கள் உதவித் தொகை பெற இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிந்தவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
- மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை ரெயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 80.67 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வருமானம் ரூ.280.80 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 78 சதவீதம் அதிகரித்து ரூ.502.05 கோடி வருமானம் ஈட்டப் பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ரூ.191.44 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருமானம் 27 சதவீதம் அதிகரித்து, நடப்பாண்டில் ரூ.242.60 கோடியாக உயர்ந்துள்ளது.
மதுரை கோட்ட ரெயில்களில் கடந்த ஆண்டு 9.2 மில்லியன் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 24.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.654.41 லட்சம் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் பயணச்சீட்டு இல்லாத, டிக்கெட் இன்றி வர்த்தக சரக்குகள் கொண்டு சென்ற, ரெயிலில் புகை பிடித்த, ரெயில் நிலையத்தை அசுத்தப்படுத்தி யவர்களிடம் இருந்து ரூ.834.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில்களில் 21 ஆயிரத்து 358 டன் சரக்குகளும், சரக்கு ரெயில்களில் 2.20 மில்லியன் டன் சரக்குகளும் கையாளப்பட்டு உள்ளன.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கத் தேர் இழுத்தனர்.
- திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.
மதுரை
தமிழக முன்னாள் முதல்வர்-அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின்
72-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாவட்டச் செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ.,முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபாகர், ஜி.ராமமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் உசிலை பிரபு , உசிலம்பட்டி நகர செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தேர் இழுத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், கொம்பையா, முத்துராஜ், சிவா, சுந்தரா, துதி.திருநாவுக்கரசு, குருசாமி, கீழமாத்தூர் தங்கராஜ்,சக்திவேல், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள் பீரோ கட்டில் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
- காயம் அடையும் வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளையும் (15-ந் தேதி), 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டி ஆகிய இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை நிலவியது. இது தொடர்பான வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி சமாதான கூட்டம் நடந்தது. இதில் முடிவு எதுவும் எட்டப்படாதால் இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக மாநகராட்சி சார்பில் ரூ.17 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நேற்று வாடிவாசல் அமைப்பது, தடுப்பு வேலிகள், பார்வையாளர் மேடை, கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்தில் நடக்கும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு இணையதளம் மூலம் கடந்த 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9, 699 காளைகளும் 5,399 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை சிவகங்கை திண்டுக்கல் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாடுபிடி வீரர்களும், 800 காளைகளும் களம் காண்கின்றன. இதில் மாடுபிடி வீரர்கள் சுழற்சி அடிப்படை அடிப்படையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள் பீரோ கட்டில் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. காயம் அடையும் வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கண்டிப்பாக உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி செயல்படுபவர்கள் களத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் தலைமையில் துணை ஆணையர் சாய் பிரணீத் மேற்பார்வையில் 15 உதவி கமிஷனர்கள் 45 இன்ஸ்பெக்டர்கள் 150 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- இரு குழுவினருக்கு இடையே கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடைபெற்றது.
- ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை புதிதாக அமைக்கப்பட்ட கமிட்டி வழங்கும்
மதுரை:
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடா்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து சமுதாயக் குழுக் கூட்டத்தை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டது. அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக் குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.
இதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு குழுவினருக்கு இடையே கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்தை நடைபெற்றது. மொத்தம் 62 பேர் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து சமூதாயத்தினர் கொண்ட 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ளவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.






