அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கத் தேர் இழுத்து வழிபாடு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கத் தேர் இழுத்தனர்.திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.
மாவட்டச் செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் தங்கதேர் இழுத்து வழிபாடு செய்தனர். 
மாவட்டச் செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் தங்கதேர் இழுத்து வழிபாடு செய்தனர். 
Published on

மதுரை

தமிழக முன்னாள் முதல்வர்-அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின்

72-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாவட்டச் செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ.,முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபாகர், ஜி.ராமமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் உசிலை பிரபு , உசிலம்பட்டி நகர செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தேர் இழுத்தனர்.

இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், கொம்பையா, முத்துராஜ், சிவா, சுந்தரா, துதி.திருநாவுக்கரசு, குருசாமி, கீழமாத்தூர் தங்கராஜ்,சக்திவேல், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com