என் மலர்
வழிபாடு

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு மண்பானைகளில் பொங்கல் படையல்
- நாளை தைப்பொங்கல் நாளில் 5 பெரிய மண்பானைகளில் பொங்கல் வைக்கப்படுகிறது.
- சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும் பொங்கல் படைத்து பூஜை நடக்கிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு தைப்பொங்கல் நாளில் ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் மண்பானையில் பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. அதன்படி நாளை(ஞாயிற்றுக்கிழமை) தைப்பொங்கல் நாளில் 5 பெரிய மண்பானைகளில் பொங்கல் வைக்கப்படுகிறது.
பிறகு உற்சவர் சன்னதியில் இருந்து கருவறைக்கு மேளதாளங்கள் முழங்க பொங்கல் வைத்த மண்பானைகள், மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை மூங்கில் தட்டில் வைத்து எடுத்து செல்லப்படுகிறது.
இதனையடுத்து கருவறையில் தெய்வானையுடன் முருகப்பெருமான், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்திய கீரிஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகளிலும் பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும் பொங்கல் படைத்து பூஜை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.






