வேலை இல்லாதோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் படித்து முடித்து வேலை இல்லாதோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
வேலை இல்லாதோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

மதுரை

தமிழக அரசின் வேலை வாய்ப்பு துறை சார்பில் படித்து முடித்து வேலை இல்லாதோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

அதன்படி வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்த பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் குடும்ப வருமானம் உடையோர், 45 வயதுக்கு உட்பட்ட பட்டியல் இனத்தவர், 40 வயது இதர வகுப்பினர் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெறுபவர் தமிழகத்தில் பள்ளி-கல்லூரி படித்து இருக்க வேண்டும். ஊதியம் பெறும் எந்தப் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது.

அரசு மூலம் நிதி உதவி பெறுபவராக இருக்கக் கூடாது. பள்ளி- கல்லூரிக்குச் சென்று படிப்பவராக இருக்கக் கூடாது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிந்த- எழுத படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் வருமானம், வயது வரம்பின்றி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த தொழில் கல்வி படித்தவர்கள் உதவித் தொகை பெற இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிந்தவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com