என் மலர்
மதுரை
- மருது எஸ்ஸார் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
- அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி ஐடா ஸ்கட்டர் திருமண மண்ட பத்தில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. முக்கிய பிரமுகர் தெய்வத்திரு
பி. நல்ல மருது - மாரீஸ்வரி தம்பதியின் மகன் சூரிய வர்மாவுக்கும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மதுரை மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்து-சித்ரா தம்பதியின் மகள் அபர்ணாவுக்கும் நாளை 13-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்துகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி, வில்லா புரம் பகுதி செயலாளர் கவுன்சிலர் போஸ் முத்தையா, அவனியாபுரம் பகுதி தி.மு.க. செயலாளர் ஈஸ்வரன், பகுதி துணை செயலாளர் பிரபாகர், 84- வது வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிர மணியம், வட்ட துணைச் செயலாளர் வக்கீல் விஜயன் ஆகியோர் செய்து வருகின்ற னர்.
- டாக்டர் சரவணன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு- நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
- எடப்பாடி பழனிச்சாமி-முன்னாள் அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றார்.
மதுரை
மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு னரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான டாக்டர் சரவணன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டா டப்பட்டது.
இதையொட்டி மதுரை யில் உள்ள முக்கிய கோவில்களில் டாக்டர் சரவணன் பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை டாக்டர் சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வை சந்தித்து டாக்டர் சரவணன் வாழ்த்து பெற்றார்.
மேலும் முன்னாள்
எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செய லாளர் வெற்றிவேல், மாந கராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா ஆகியோர் டாக்டர் சரவணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாளை முன்னிட்டு சதீஷ் ஏற்பாட்டில் தொழிலதிபர் ரகுநந்தன் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
மத்திய 3-ம் பகுதி செயலாளர் மாணிக்கம், விளாங்குடி பகுதி செய லாளர் ஜித்தன், வாடிப் பட்டி ஒன்றிய பொறுப் பாளர் ஆவியூர் ராதா கிருஷ்ணன், வடக்கு 2-ம் பகுதி செயலாளர் கணே சன், பழங்காநத்தம் பகுதி செயலாளர் பிரிட்டோ, அம்மன் குரூப்ஸ் உரிமை யாளர் லட்சுமணன், இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்திக், தமிழக முன்னேற்ற கழகம் நிறு வனர் ராஜ்குமார், மருது தேசிய கழகம் சார்பில் மருதுபாண்டி, அகமுடை யார் கல்வி மைய நிர்வாகி கள் ஆகியோர் டாக்டர் சரவணன் சந்தித்து பொன் னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த னர்.
டாக்டர் சரவணனின் சூர்யா அறக்கட்டளை மூலம் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மாற்று கால்கள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும் ஏராள மானோருக்கு இலவச இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
- நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் உள்ள 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ‘நியோ மேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மதுரை
மதுரையை தலைமை யகமாக கொண்டு 'நியோ மேக்ஸ்' பிராபர்ட்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்பட பலர் உள்ளனர்.
இவர்கள், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதந் தோறும் அதிக வட்டி கிடைக்கும் என்றும், திட்டத்தின் முடிவில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் ஆசையை தூண்டும் வகையில் விளம்பரப் படுத்தினர்.
இதை நம்பி ஆயிரக் கணக்கானோர் தங்களது பணத்தை இந்த நிறுவ னத்தில் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் கூறியபடி உரிய தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஏராளமானோர் புகார் செய்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இந்த வழக்கில் சில இயக்குநர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். மேலும் சிலர் தலைமறை வாக உள்ளனர்.
இந்த நிலையில் இவ் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இசக்கிமுத்து, சகாய ராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜோதி முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நாள்தோறும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.
- வி.பி.எம்.பி.வடிவேல்-வி.சுதா இல்ல திருமண விழாவில் மணமக்களை திரளானோர் வாழ்த்தினர்.
- சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது.
மதுரை
மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி தாலுகா கருமாத் தூர் கிராமம் வடக்கம்பட்டி தொழிலதிபர் வி.பி.எம்.பி.வடிவேல்-வி.சுதா தம்ப தியரின் மகள் வி.கீர்த்திகா–வுக்கும், ஈரோடு குன்னூர் தொழிலதிபர் வி.மகேஸ்வ ரன்-எம்.பானுமதி ஆகியோ ரது மகனுமான எஸ்.வி.எம்.அருண் என்பவ ருக்கும் பெரியோர்களால் திரும ணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி வி.கீர்த்திகா -எஸ்.வி.எம்.அருண் ஆகி யோரது திருமண விழா நேற்று முன்தினம் (10-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கருமாத் தூர் மூணாண்டிபட்டி, மதுரை தேனி மெயின் ரோடு, அருள் ஆனந்தர் கல்லூரி அருகிலுள்ள வி.கே.எஸ்.வடிவேல் ஹைடெக் மகாலில் நடைபெற்றது.
விழாவுக்கு எட்டுநாடு இருபத்தி நான்கு கிராமம், கருமாத்தூர் பதினெட்டுப் பட்டி கிராம பொதுமக்கள், வடக்கம்பட்டி இரண்டு தகப்பன் மக்கள் தலைமை தாங்கினர். வ.பால்ச்சாமி நாடார்-பா.மஞ்சனை அம்மாள் மகன்கள், தொழி லதிபர்கள் பி.துரைப்பாண்டி -டி.பெத்தம்மாள், பி.வெள்ளையப்பன்-வி.அனுசுயா தேவி, ஈரோடு, குன்னூர் நாடார் உறவின் முறை சங்க தலைவர் எஸ்.வேலுச்சாமி நாடார்-வி.காளீஸ்வரி மற்றும் தாய்மா மன்கள் முன்னிலை வகித்த னர்.
திருமண விழாவில் அரசி யல் கட்சியினர், தொழிலதி பர்கள், உற்றார், உறவினர் கள், கல்வியாளர்கள், முக் கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவு டி.வி. புகழ் மூக்குத்தி முருகன், பூஜா, ஸ்ரீநிதி, மீத்துஸ்ரீ, ஸ்ரீநிதி ஆனந்த் ஆகியோர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடு களை வி.கே.எஸ்.பட்டாசு தொழிற்சாலை தொழிலா ளர்கள், வி.கே.எஸ். கம்பி மத்தாப்பு கம்பெனி தொழி லாளர்கள், வி.கே.எஸ். விவசாய பண்ணை தொழி லாளர்கள், வி.கே.எஸ். வடி வேல் ஹைடெக் திருமண மண்டப தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
- இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்திற்கு தி.மு.க. சார்பில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், நகர செயலாளர்-வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செய லாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச் சந்திரன், வார்டு கவுன்சி லர்கள் குருசாமி, நிஷா கவுதம ராஜா, முத்து செல்வி சதீஷ், ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா சரவணன்,
முள்ளிபள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி, திருவாலவாய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் பழனி யம்மாள், மாவட்ட பிரதி நிதிகள் பேட்டை பெரிய சாமி, சுரேஷ், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் சோழ வந்தான் அருகே கண்ணு டையாள்பு ரத்தில் தியாகி இமானுவேல் சேகரின்
66-ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவி யருக்கு நோட்டு புத்தகம் வழங்குவிழா நடந் தது. தொடர்ந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட து. டாக்டர். பாலமுருகன், தமிழர் தேசிய கழக தலைவர் வழக்கறிஞர் வையவன் தலைமை தாங்கி னார். இதில் நிர்வாகிகள் குமார், முத்துப்பா ண்டி, சரவணன், மணிகண்டன், கார்த்திக், பாலமுருகன், அஜித் மற்றும் தமிழர் தேசிய கழக மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சோழவந்தான் தொகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூ்டடம் நாளை நடக்கிறது.
- இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
மதுரை
மதுரை வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (13-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
மேற்படி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான பவ்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்று கோல், காதொலி கருவி போன்ற உதவி உபகர ணங்கள், பலி பாஸ், மாதாந்திர உதவித் தொவை மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் அளித்திடலாம்.
மேற்கண்டவாறு நடை பெறும் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மதுரை வரு வாய் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை மேற்கு வட்டம், மதுரை வடக்கு வட்டம் மற்றும் வாடிப்பட்டி வருவாய் வட்டங்களைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை (UD ID-Card) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகிய வற்றுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கி பயனடை யுமாறு தெரிவிக்கப்படு கிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மேலூரில் வருகிற 14-ந்தேதி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கையில் கூறி உள்ளார்.
மதுரை
மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க கலைஞர் நூற் றாண்டு விழா கோலாகல மாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையிலும், டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் கழக இளைஞ ரணி இரண்டாவது மாநில மாநாட்டில் இளைஞர் அணியினர், கழகத்தினர் என 50 ஆயிரத்துக்கு மேற் பட்டோர் பெரும் திரளாக பங்கேற்பது மற்றும் 20-ந்தேதி மேலூரில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை சிறப்புற நடத்து வது உள்ளிட்டவை தொடர் பாக வடக்கு மாவட்ட தி.மு.க. கழகம் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 14.09.2023 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு மேலூரில் உள்ள கலைஞர் திடலில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட கழக மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி நிர்வா கிகள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகி கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், கிளைச் செயலாளர்கள், நிர்வாகி கள், உள்ளாட்சி பிரதிநிதி கள், கழகத்தினர் என பெரும் திரளானோர் பங் கேற்று சிறப்பிக்க வேண்டு மென கேட்டுக்கொள்கி றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
- 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
நாளை மறுநாள் 14-ந் தேதி ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (12-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதோஷ நாளான இன்று காலை சதுரகிரிக்கு செல்ல அதிகாலையிலேயே அடி வாரத்தில் ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறை அலுவலர்கள் பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்டு மலையேற அனுமதித்தனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக்கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.
- கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
- ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசார் அழைத்து வந்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
மதுரை:
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிய சிலர் தங்களது கோரிக்கைகளுக்காக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி கடந்த 2016 ஆம் ஆண்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களை கைது செய்து ஆஜர்படுத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசார் அழைத்து வந்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
- ஆசிரியர்கள் மோதலால் மாணவர்களை அரசு பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்தனர்.
- கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராயபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 42 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர்க ளுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயில்விக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தங்கள் பெற்றோர்களிடம் அவர்கள் கூறினர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஆசிரியர் களிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தனர். ஆனால் மோதல் முடிந்த பாடில்லை. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப் பட்டது.
இதனை கண்டித்தும் மாணவ, மாணவிகள் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராமத்தில் உள்ள சாவடியில் அமர வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, உதவி கல்வி அலுவலர் சின்ன வெள்ளைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை பின்பு சம்பந்தப் பட்ட ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்தப் பள்ளியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 400-க்கும் மேற்பட்டோர் பயின்று வந்தனர். ஆனால் தற்போது திருமங்கலம், ஆலம்பட்டி மீனாட்சிபுரம் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தங்களு டைய பிள்ளைகளை அங்கு அனுப்பியதால் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அடிக்கடி ஆசிரியர்களுக்குள் மோதல் நடப்பதால் பிள்ளைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டது. ஆதலால் கல்வி அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார்.
மதுரை
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுய நிதிப் பிரிவில் "ஆய்வு வடிவமைப்பு" என்னும் தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்" நடந்தது. அமெரிக்கன் கல்லூரி இணைப் பேரா சிரியர் டாக்டர். சாமுவேல் அன்புச் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முது கலை மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி எப்படி ஆராய்ச்சி நடத்துவது என்பது பற்றிய நுண்ணறிவு குறித்து விளக்கினார். மேலும் ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வடிவ மைப்பு, அறிக்கை எழுதுதல், நூல் பட்டியல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரித் தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் டாக்டர்.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு ஆகியோர் வாழ்த்தினர். மாணவர் கார்த்திக் வரவேற்றார். மாணவர் சம்யுக்தா நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார். உதவிப் பேராசிரியர்கள் ராஜாமணி, பாரதி, தினேஷ் குமார் ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர்.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு கோட்டபொறியாளர் (பொறுப்பு) வரலட்சுமி, உதவிக்கோட்டபொறியாளர் சாந்தினி, உதவிபொறியாளர்கள் காவியமீனா, கீதா ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் பற்றி விளக்கி பேசினர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் தங்கழகு, விவசாயஆசிரியர் சுரேஷ், ஸ்டாலின், கணினிஆசிரியர் செந்தில்குமரன் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.






