search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறையில் உள்ள 2 பேருக்கு நிபந்தனை ஜாமின்
    X

    சிறையில் உள்ள 2 பேருக்கு நிபந்தனை ஜாமின்

    • நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் உள்ள 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • ‘நியோ மேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரையை தலைமை யகமாக கொண்டு 'நியோ மேக்ஸ்' பிராபர்ட்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்பட பலர் உள்ளனர்.

    இவர்கள், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதந் தோறும் அதிக வட்டி கிடைக்கும் என்றும், திட்டத்தின் முடிவில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் ஆசையை தூண்டும் வகையில் விளம்பரப் படுத்தினர்.

    இதை நம்பி ஆயிரக் கணக்கானோர் தங்களது பணத்தை இந்த நிறுவ னத்தில் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் கூறியபடி உரிய தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஏராளமானோர் புகார் செய்தனர்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இந்த வழக்கில் சில இயக்குநர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். மேலும் சிலர் தலைமறை வாக உள்ளனர்.

    இந்த நிலையில் இவ் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இசக்கிமுத்து, சகாய ராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி ஜோதி முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நாள்தோறும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.

    Next Story
    ×