என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் திம்மாபுரம் ஏரிக்கரை பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற நாகராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர். நாகரசம்பட்டி போலீசார் பொன்னிஅம்மன் கோவில் அருகில் ரோந்து சென்ற போது, அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற அரசம்பட்டி செந்தில்குமார் (56), எம்.ஜி.ஹள்ளி ஹரிகரன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மத்தூர் போலீசார் அத்திகானூர் கூட்டுரோடு அருகில் ரோந்து சென்றபோது அங்கு லாட்டரி சீட்டு விற்ற அத்திகானூர் தங்கவேல் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் சேதம் அடைந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை நட்சத்திர ஓட்டல் எதிரில் தினேஷ் (வயது32) என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது.
இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல் ஷோரூமை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவு திடீரென ஷோரூமில் இருந்து புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கரமாக தீ பற்றி எரிந்தது. தீ மளமளவென்று நாலாபுறமும் பரவியது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தீயணைப்புத்துறை, போலீசார் மற்றும் கடையின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஷோரூமில் சர்வீசுக்காக விடப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தீயில் கருகின.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை நட்சத்திர ஓட்டல் எதிரில் தினேஷ் (வயது32) என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது.
இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல் ஷோரூமை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவு திடீரென ஷோரூமில் இருந்து புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கரமாக தீ பற்றி எரிந்தது. தீ மளமளவென்று நாலாபுறமும் பரவியது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தீயணைப்புத்துறை, போலீசார் மற்றும் கடையின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஷோரூமில் சர்வீசுக்காக விடப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தீயில் கருகின.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே தனியார் பால் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ளது கெங்கபிராம்பட்டி. இங்கு தனியார் பால் நிறுவனத்தில் கீழ்மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாது (வயது 23) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பால் நிறுவன வளாகத்தில் உள்ள புளிய மரத்தில் மாது நேற்று தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் மாதுவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், தாசில்தார் தண்டபாணி, இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மாதுவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நேற்று 72 பஸ்கள் இயக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி:
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் சேவை தொடங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கியது.
இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 3 பஸ்கள், வேலூருக்கு 5 பஸ்கள், திருவண்ணாமலைக்கு 7 பஸ்கள், திருப்பத்தூருக்கு 6 பஸ்கள், ஓசூரில் இருந்து 40 பஸ்கள், தர்மபுரிக்கு 8 பஸ்கள், கோவைக்கு 2 பஸ்கள், திருச்சிக்கு ஒரு பஸ், ஒகேனக்கலுக்கு ஒரு பஸ் என மொத்தம் 72 பஸ்கள் இயக்கப்படுகிறது.
பயணிகள் பஸ்களில் பின்புறமாக ஏறி, முன்புறமாக இறங்க வேண்டும். பச்சை நிற பஸ்களில் 34 மற்றும் நீல நிற பஸ்களில் 33 பயணிகள் என 60 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கண்டக்டர்கள் பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சானிடைசர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
5 மாதங்களுக்கு பிறகு ஓசூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை என பல்வேறு பகுதிகளுக்கு ஓசூரில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.
பஸ்கள் புறப்படும் முன்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பயணிகள் சானிடைசர் பயன்படுத்தி பஸ்சில் ஏற அறிவுறுத்தப்பட்டனர். மேலும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், அமர அறிவுறுத்தப்பட்டனர். 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டதால் ஓசூர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி:
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,792 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,976 விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 1,816 விவசாயிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சேலம் மாவட்டத்தில் நேற்று 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று ஓசூர் பகுதியில் அதிக அளவில் பரவி வருகிறது.
இந்தநிலையில் ஓசூர் பகுதியில் 27 ஆண்கள், 2 வயது சிறுமி உள்பட 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி பகுதியில் 12 ஆண்கள், 8 பெண்கள் என 20 பேருக்கும், ஊத்தங்கரை பகுதியில் 5 ஆண்கள், 4 பெண்கள் என 9 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
வேப்பனப்பள்ளி பகுதியில் 4 ஆண்கள், 3 பெண்கள் என 7 பேருக்கும், பர்கூர் பகுதியில் 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பேருக்கும், காவேரிப்பட்டணம் பகுதியில் 3 ஆண்கள், ஒரு பெண் என 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் போச்சம்பள்ளி பகுதியில் ஒரு ஆணுக்கும், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், பெங்களூரை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 89 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் வசித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதனால் நேற்று மாலை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் கூறுகையில் பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவது புகார்கள் அதிக அளவு வந்தன. இதனால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதனால் நேற்று மாலை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் கூறுகையில் பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவது புகார்கள் அதிக அளவு வந்தன. இதனால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
குருபரப்பள்ளி அருகே மின் சாதன பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே உள்ள பண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 71). விவசாயி. இவரது தோட்டத்தில் பாசனத்திற்காக ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் அமைத்திருந்தார். சம்பவத்தன்று இவரது விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டார் உள்ளிட்ட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து முனுசாமி குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தம்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (21) என்பதும், முனுசாமியின் தோட்டத்தில் இருந்த மின்சாதன பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேன்கனிக்கோட்டையில் கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் தொட்டமஞ்சு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு முதியவர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் காலிகுட்டை கிராமத்தை சேர்ந்த பெருமாள் (வயது 60) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை மாநில எல்லையில் தீவிரமாக கண்காணித்து, அவர்களுடைய இ-பாஸ் விவரங்களை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து நியமிக்கப்பட்ட அலுவலர்களின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை மாநில எல்லையில் தீவிரமாக கண்காணித்து, அவர்களுடைய இ-பாஸ் விவரங்களை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். மாநில எல்லையில் உள்ள 7 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். நோய் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து வட்டாரங்களிலும் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நடத்திட வேண்டும். மூன்று நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று ஏற்படும் பகுதிகளை சுற்றி ஒரு கி.மீ சுற்றளவில் தடுப்பு பணிகளையும், கிருமி நாசினி பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தற்போது பருவ மழை காலமாக உள்ளதால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏதேனும் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை படியே மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மேலும் நன்கு காய்ச்சிய குடிநீரை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில், அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் முத்துசெல்வன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ஜெயசங்கர், ஓசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திரா, மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர். வெங்கடேஷ், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முத்துமாரியப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தனி தாசில்தார் சத்யா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரியில் கல்லூரி விடுதியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
தென்காசி மாவட்டம் தேவிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 18). இவர் கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவர் தேவிப்பட்டிணம் கிராமத்தில் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கிருஷ்ணகிரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி ஐஸ்வர்யா நேற்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி பகுதியில் உள்ள மாணவியின் உறவினர் பிரிதீவிராஜ் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக ஜெயசந்திரபானு ரெட்டி பதவியேற்று கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த பிரபாகர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக, பழனி தண்டாயுதபாணி கோவிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை பிரபாகர் ஒப்படைத்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, டாக்டர். என்.டி.ஆர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டார். இவர் கடலூர் மாவட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆக நியமிக்கப்பட்டு, பின்னர் திருச்சி மாவட்டம் லால்குடி உதவி கலெக்டராக பணிபுரிந்தார்.
அதன்பின்னர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனராகவும், மருத்துவம் மற்றும் குடும்ப நலப்பணிகள் துறையின் துணை செயலாளராகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் துணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். அதை தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி கோவிலின் செயல் அலுவலராக பணியாற்றி வந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். கலெக்டராக பொறுப்பேற்ற ஜெயசந்திரபானு ரெட்டி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் தற்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். இந்த மாவட்டம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற கண்டிப்பாக முழு முயற்சி செய்வேன். அரசு திட்டங்கள் அனைவரையும் சென்றடைய பாடுபடுவேன். அரசு வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வேன் என்று கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் உடனிருந்தார்.






