என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சுங்கச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற தங்கமணி (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். பேரிகை போலீசார், பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நாராயணம்மா (50) என்பவரை கைது செய்தனர். இவர்களது கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஓசூர் அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர் பேரண்டப்பள்ளி போயர் காலனியை சேர்ந்தவர் பூநேசன் (வயது 45). பெயிண்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த பூநேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகரசம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகரசம்பட்டி போலீசார், வீரமலை ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய நாகரசம்பட்டி தமிழ்வாணன் (வயது 38), என்.தட்டக்கல் வைரமணி (45), மூர்த்தி (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஓசூரில் சிகரெட் நிறுவன மேலாளர் கடத்தல் வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பீட்டர் லூயிஸ் (வயது 45). இவர் ஓசூரில் இயங்கி வரும் ஐ.டி.சி. சிகரெட் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2-ந்தேதி நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்த பீட்டர் லூயிசை மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய காரிலேயே கடத்தி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதையறிந்த அந்த நபர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலத்திற்கு அருகே காருடன் பீட்டர் லூயிசை இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் தேன்கனிக்கோட்டை அடுத்த பெரியபூதக்கோட்டையை சேர்ந்த அமரேஷ் (28), முகலூரை சேர்ந்த தியாகராஜ் (32), குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த குருபிரசாத் (26), சூளகிரி அடுத்த சினிகிரிப்பள்ளியை சேர்ந்த வினோத்குமார் (30), கிருஷ்ணகிரி குப்பண்ணன் தெருவை சேர்ந்த நதீம் அகமது (22), அதே பகுதியை சேர்ந்த பவித்ரன் (20), தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளியை சேர்ந்த அருண்குமார் (20), கிருஷ்ணமூர்த்தி (20) ஆகிய 8 பேர் பீட்டர் லூயிசை கடத்தி சென்றது தெரியவந்தது. இதில் அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த அமரேஷ் உள்ளிட்ட 6 பேரை சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர்.
    சூளகிரி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    திருப்பத்தூர் மாவட்டம் எஸ்.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 23). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் கோபசந்திரம் பகுதியில் சென்றார். அப்போது சாலையில் வைத்திருந்த டிரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழையபேட்டையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சவுகத் (வயது52) என்பவரை கைது செய்தனர். இதேபோல் பாலேப்பள்ளி பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற காளியப்பன் (30), சோனாரஅள்ளி பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த தனசேகர்(42) ஆகிய 2 பேரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடம் இருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஊத்தங்கரை அருகே வாகனம் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே உள்ள கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). டிரைவர். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் கோவிந்தாபுரம்-திருப்பத்தூர் சாலையில் பெருமாள் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பாகலூர் போலீசார், வெங்கடேசபுரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பெக்கிலி கிராமத்தை சேர்ந்த முனிகிருஷ்ணா (வயது 37), சங்கரப்பா(45), ராமமூர்த்தி(36), எல்லப்பன்(31), நரசிம்மன்(27) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் தேன்கனிக்கோட்டை போலீசார், பென்னாங்கூர் அருகில் உள்ள ஒரு கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கோகுல்நகர் அண்ணாதுரை(45), சின்னபென்னாங்கூர் பெருமாள்(43), ஆசாத் தெரு நூருல்லா(54) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தண்ணீரை திறந்து வைத்தார்.

    பின்னர் கலெக்டர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து தற்போது உள்ள நீர் அளவை கொண்டும் நீர்வரத்தை எதிர்நோக்கியும், அணையின் வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கனஅடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கனஅடி வீதமும் என மொத்தம் 180 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பர்அள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருகிற 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீரை விவசாயத்திற்கு சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். அத்துடன் நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், ஒன்றியக்குழு தலைவர்கள் அம்சா ராஜன், பையூர் ரவி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜமுனா கிருஷ்ணன், பச்சிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கன்னியப்பன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சங்கீதாகேசவன், ஜெயாஆஜி, கால்வேஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார், ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அம்பிகா சரவணன், பெரியமுத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் கற்பகவள்ளி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், போச்சம்பள்ளி தாசில்தார் ஆஞ்சநேயலு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்கள் வினாடிக்கு 70 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு, முதல் 5 நாட்களுக்கு நாற்று விட தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் போச்சம்பள்ளி தாலுகாவில் 6 ஊராட்சிகளின் பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 1583.75 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால் பாரூர், அரசம்பட்டி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி மற்றும் தாதம்பட்டி ஆகிய ஊராட்சிகள் பயன்பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பொதுப்பணித்துறையினருக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று உதவி கலெக்டர் கூறினார்.
    போச்சம்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் பின்புறம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அரசம்பட்டியை சேர்ந்த மாதேஷ் (வயது 46), முருகன் (30), சக்திவேல் (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஓசூர் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அஸ்வந்த் (வயது 18). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. 

    இதனால் காதல் தோல்வியால் மனமுடைந்து காணப்பட்ட அஸ்வந்த், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    போச்சம்பள்ளி அருகே உள்ள பென்டரஅள்ளியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி பார்கவி (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பார்கவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×