என் மலர்
கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
போச்சம்பள்ளி அருகே உள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 24). கடந்த 6 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாமல்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
சாமல்பட்டி அருகே கல்குமாரம்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாடிக்கொண்டு இருந்த அதே கிராமத்தை சேர்ந்த குமார், காமலாபுரத்தை சேர்ந்த சகாதேவன், அய்யம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன், சின்னகுன்னத்தூரை சேர்ந்த பாபு ஆகிய 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17,780 பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஜிஞ்சம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் மனைவி, மகளுடன் திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க மாணவியுடன் அவரது சித்தி சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கடந்த 9-ந் தேதி மீண்டும் மேல்செங்கத்திற்கு செல்ல மத்தூர் பஸ் நிலையத்திற்கு அவர்கள் வந்தனர். அப்போது மாணவி திடீரென மாயமானார். இது குறித்து அவரது சித்தி மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னுடன் வந்த சிறுமியை, திருவண்ணாமலை மாவட்டம் நாகனூர் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் சரண்ராஜ் (31) என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து சிறுமியை மீட்டுத்தர வேண்டும் என புகார் அளித்தார்.
அதன் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் சரண்ராஜை கைது செய்தார். அந்த சிறுமியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சூளகிரி அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி:
சூளகிரி தாலுகா மேலுமலை அருகே உள்ள இம்மிடிநாயக்கனப்பள்ளியை சேர்ந்தவர் சின்னமாரப்பா (வயது 60). விவசாயி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் சின்ன மாரப்பா சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கந்திகுப்பம் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள சுண்டம்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ். ராணுவ வீரர். இவருடைய மனைவி வீணா (வயது 30). இவர் கடந்த 8-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று முன்தினம் மாலை அவர் மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து வீணா கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். இது தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிங்காரப்பேட்டையில் சரக்கு வேனில் கடத்திய 1,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை வழியாக சரக்கு வாகனத்தில் எரிசாராயம் கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சிங்காரப்பேட்டையில் போலீசார் திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை பக்கம் இருந்து சிங்காரப்பேட்டை நோக்கி வந்த சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் கேன்களில் 1,000 லிட்டர் எரிசாராயம் இருந்தது. இதையடுத்து போலீசார் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் செஞ்சி தாலுகா விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த நடராஜ் (வயது 25) என்பதும், திருவண்ணாமலையில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் எரிசாராயம் மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் நடராஜை கைது செய்தனர்.
ஊத்தங்கரை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சக்திவேல் (வயது 35). விவசாயி. இவர் நேற்று சாலமரத்துப்பட்டி கிராமத்தில் இருந்து தனது மாமியார் வீடான பாரண்டப்பள்ளி புதூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஓலைப்பட்டி வழியாக சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன் மோதியதில் சக்திவேல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள கால்வேஹள்ளி பக்கமுள்ள கத்தேரிமேல்கொட்டாயை சேர்ந்தவர் காவேரி (வயது 60). விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் சட்டமன்றத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயசந்திர பானுரெட்டி சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
கெலமங்கலம் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி தடிக்கல் அருகே உள்ள குடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். விவசாயி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த மாதேவியம்மா மகள் சந்திரம்மாவை (வயது 21) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் சந்திரம்மாவிடம் வரதட்சணையாக பணம் மற்றும் நகை வாங்கி வரச்சொல்லி மாதேவன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்து வந்துள்ளார். இதேபோல் கடந்த வாரமும் தாயார் அனுப்பிவைத்தார்.
கடந்த 6-ந் தேதி இரவு8 மணிக்கு கணவருடன் சண்டை போட்டு விட்டு சந்திரம்மா வீட்டை விட்டு சென்றார். அவர் தாயார் வீட்டுக்குத்தான் போயிருப்பார் என்று நினைத்து கணவர் வீட்டினர் தேடாமல் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் மறுநாள் சந்திரம்மா உடல் அவர்களது விவசாய கிணற்றில் மிதந்தது.
இதுபற்றி சந்திரம்மா தாயார் மாதேவியம்மா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது மகள் வரதட்சணை கொடுமையால் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து சந்திரம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரம்மாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஓசூர் உதவி கலெக்டர் குணசேகரன் விசாரணை நடத்திவருகிறார்.
ஓசூரில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே பேடரப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோபாலப்பா (வயது 65). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோபாலப்பா இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கெலமங்கலம் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி தடிக்கல் அருகே உள்ள குடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். விவசாயி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த மாதேவியம்மா மகள் சந்திரம்மாவை (வயது 21) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் சந்திரம்மாவிடம் வரதட்சணையாக பணம் மற்றும் நகை வாங்கி வரச்சொல்லி மாதேவன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்து வந்துள்ளார். இதேபோல் கடந்த வாரமும் தாயார் அனுப்பிவைத்தார்.
கடந்த 6-ந் தேதி இரவு 8 மணிக்கு கணவருடன் சண்டை போட்டு விட்டு சந்திரம்மா வீட்டை விட்டு சென்றார். அவர் தாயார் வீட்டுக்குத்தான் போயிருப்பார் என்று நினைத்து கணவர் வீட்டினர் தேடாமல் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் மறுநாள் சந்திரம்மா உடல் அவர்களது விவசாய கிணற்றில் மிதந்தது.