என் மலர்
கிருஷ்ணகிரி


கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நாள்தோறும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். அணையில் 41.33 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,060 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையில் அதிகளவு நீர் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அணையில் ரசாயன கழிவுகள் கலந்து மலை போல் நுரை குவிந்ததால், தரைப்பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
தரைப்பாலத்தில் குவிந்த நுரையை, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி படித்து சுத்தம் செய்தனர். இதனிடையே, நுரை பொங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்ததால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், நுரை பொங்கி காணப்படுவதை ஆர்வத்துடன் செல்போனில் போட்டோ எடுத்தனர்.
விழா நாட்களில் காலை-மாலையில் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள்.
பெரியகார்த்திகையான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி, சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.
பின்னர் அவர்கள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளினார்கள். அங்கு இரவு 7 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது., தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை 6 மணிக்கு கோவிலில் தீபம் ஏற்பட்டது. பின்னர் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடந்து. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பூந்தமல்லி:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி 7-ந் தேதி 5 கண் மதகு வழியாக முதற்கட்டாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் வந்துகொண்டிருந்தால் உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக உயர்ந்த்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2717 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 20.46 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஏரியில் இருந்து நேற்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கன மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2700 கனஅடி தண்ணீர் வருகிறது. இதையடுத்து ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. 651 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. எனினும் ஏரியை சுற்றிள்ள பகுதிகளிலிருந்து மழை நீர் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
அதன்பிறகு கருவறையில் அகண்டம், குலசேகரபடி, ராமுலவாரி மேடை, துவார பாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜசாமி சன்னதி, வகுளமாதா சன்னதி, பங்காருபாவி, கல்யாண மண்டபம், பாஷ்யங்கார்ல சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, தங்க வாசல், தங்கக் கொடிமரம், பலிபீடம், ரெங்கநாயகர் மண்டபம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராஹசாமி கோவில் உள்பட பல இடங்களில் நெய்தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீப உற்சவத்தில் பெரிய ஜீயர், கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சூலூர்:
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு நேற்று சுமார் 150 டயர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
சூலூர் அருகே எல்என்டி புறவழிச்சாலையில் அந்த லாரி இரவு சுமார் 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. லாரியை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கண்சாம்நாத் ஓட்டி வந்தார். இந்நிலையில் சிந்தாமணிப்புதூர் அருகே சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தபோது திடீரென லாரி தீப்பற்றிக் கொண்டது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். லாரி தீ பற்றிய செய்தியை அறிந்த சூலூர் தீயணைப்பு படையினர் தீயணைப்பு அலுவலர் கோபால் தலைமையில் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அதற்குள்ளாக லாரியின் முன்பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
தீயணைப்பு படையினர் லாரியின் பின் கதவை உடைத்து திறந்து அதில் இருந்த டயர்களை கீழே இறக்கினர். பின்னர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் சுமார் இருபது டயர்கள் தீயினால் சேதமடைந்தன. தீயணைப்பு படையினரின் முயற்சியால் மற்ற டயர்கள் சேதமின்றி தப்பின. லாரியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
விபத்து நடந்த நேரம் மழை கொட்டியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் லாரியில் இருந்த அனைத்து டயர்களும், லாரியும் எரிந்து சேதம் ஆகி இருக்கும்.






