search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவிலில் மங்கள வாத்தியங்கள் இசைக்க நடந்த கார்த்திகை தீப உற்சவம்
    X
    திருப்பதி கோவிலில் மங்கள வாத்தியங்கள் இசைக்க நடந்த கார்த்திகை தீப உற்சவம்

    திருப்பதி கோவிலில் மங்கள வாத்தியங்கள் இசைக்க நடந்த கார்த்திகை தீப உற்சவம்

    திருப்பதி கோவிலில் கார்த்திகை தீப உற்சவத்தை முன்னிட்டு புதிய பானைகளில் தீபம் ஏற்றி மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுரத்தை வலம் வந்து மூல மூர்த்திக்கு ஆரத்தி கொடுக்கப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. புதிய பானைகளில் தீபம் ஏற்றி மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுரத்தை வலம் வந்து மூல மூர்த்திக்கு ஆரத்தி கொடுக்கப்பட்டது.

    அதன்பிறகு கருவறையில் அகண்டம், குலசேகரபடி, ராமுலவாரி மேடை, துவார பாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜசாமி சன்னதி, வகுளமாதா சன்னதி, பங்காருபாவி, கல்யாண மண்டபம், பாஷ்யங்கார்ல சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, தங்க வாசல், தங்கக் கொடிமரம், பலிபீடம், ரெங்கநாயகர் மண்டபம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராஹசாமி கோவில் உள்பட பல இடங்களில் நெய்தீபம் ஏற்றப்பட்டது.

    கார்த்திகை தீப உற்சவத்தில் பெரிய ஜீயர், கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×