என் மலர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 24). பெயிண்டர். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்மையார்குப்பத்தில் ரூ.1½ லட்சம் ஐம்பொன் சிலை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த அம்மையார்குப்பம் சாந்த மலை அடிவாரத்தில் வாரியார் சுவாமிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான ஐம்பொன்னாலான வாரியார் சாமி சிலை இருந்தது.
நேற்று காலை மடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான வாரியார் சாமிகளின் ஐம்பொன்னால் ஆன சிலை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கந்திகுப்பம் அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே உள்ள அழகியபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 21-ந் தேதி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாமல்பட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
சாமல்பட்டி அருகே உள்ள குனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னண்ணன் (வயது 75). தொழிலாளி இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் போலீசார் கோடியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த நாகராஜ் (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று கல்லாவி போலீசார் வைரம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற அதே ஊரைச் சேர்ந்த மாதேஷ் (66) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:
நகர்புறம் அதனை சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் , தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும். இதர காய்கறிகளின் விலையும் வெளிச்சந்தையில் ஓரளவு குறைந்துள்ளது.
வெளிச்சந்தையில் கிலோ ரூ.150 வரையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.90 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி ரூ.85 முதல் ரூ.100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்...பிரபல நடிகையின் கன்னத்தோடு சாலைகளை ஒப்பிட்ட ராஜஸ்தான் மந்திரி - வைரலாகும் வீடியோ
பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி திருக்கோவிலூர்-வேட்டவலம் சாலையில் வந்த அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேட்டவலம்:
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த வைப்பூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து ஆழ்துளை கிணறு நிரம்பி அதன் மீது வெள்ளம் சென்றதால் மின்மோட்டார்கள் பழுதடைந்து உள்ளது. இதனால் கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை. மேலும் கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்து சரி செய்யாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி திருக்கோவிலூர்-வேட்டவலம் சாலையில் வந்த அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி சம்பத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் அந்த கிராமத்திற்கு சென்று ஆழ்துளை கிணற்றில் புதிய மின்மோட்டார்கள் பொருத்தும் பணியையும், பழுதடைந்த மின்மோட்டார்களை சரி செய்யும் பணியையும் பார்வையிட்டார்.
அப்போது உதவி பொறியாளர் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
சாமல்பட்டி அருகே உள்ள குனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னண்ணன் (வயது 75). தொழிலாளி இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார்.
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா. கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில் மாற்றம் செய்தார். அப்போது ராஜேந்திர குடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மந்திரியான பிறகு தனது தொகுதிக்கு முதல் முறையாக சென்ற ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் கூடியிருந்த உள்ளூர் மக்களிடம் உரையாடினார். அப்போது அங்கு இருந்த மக்கள் அவரிடம் தரமான சாலைகள் அமைத்து தர கூறி கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அவர் , அங்கு இருந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை சுட்டிக்காட்டி "எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் " என ஜாலியாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கத்ரீனா கைப் கன்னத்தோடு சாலைகளை ஒப்பிட்ட ராஜஸ்தான் மந்திரி#Rajasthan#RajendraGudha#KatrinaKaifpic.twitter.com/HmukzWwNDd
— Maalai Malar News (@maalaimalar) November 24, 2021
இதையும் படியுங்கள்...சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் - அகிலேஷ் யாதவ்
காரகுப்பம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் அரவிந்த் (வயது 24). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் மோட்டார்சைக்கிளில் காரகுப்பம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் கல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வேலு (வயது 46), சிவன் (46), சுரேந்திரன் (31), ராமு (42), பார்த்திபன் (39), சலீம் (31), பசுபதி (38), செரீப் (32), பழனி (35), சிவம் (26), சுபாஷ் (37), ஜான்பாஷா (43) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 ஆயிரத்து 570 மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூரில் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் தொரப்பள்ளி அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 20). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், பெற்றோருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நவீன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (53). இவர், பேன்சி ஸ்டோர் வைத்து இருந்தார். இவர் கடன் பிரச்சினை காரணமாக விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தகுமார் இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






