என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 43 ஆயிரத்து 367 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர். 75 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
    தீயணைப்புத் துறையினர் பள்ளிக் கட்டிடத்தின் பின்புறம் புதரில் இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
    பல்லடம்:

    பல்லடம் மங்கலம் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சில நேரங்களில் பாம்பு, பல்லி போன்றவை வந்து விடுகின்றன. 

    இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்துள்ளனர். இதையடுத்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பள்ளிக் கட்டிடத்தின் பின்புறம் புதரில் இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். 

    இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தொடர் மழை பெய்ததால் பள்ளி வளாகத்தில் அதிகமாக புற்கள் முளைத்துள்ளது .மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சுவர் இருந்தால் இது போன்ற விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் வராது என்றனர். 
    கிருஷ்ணகிரி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் துவாரகாபுரி முருகன் கோவில் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சாவுடன் நின்ற சின்னமுத்தூர் தியாகராஜன் (வயது 30), துவாரகாபுரி சரவணன் (23), செந்தமிழ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,500 மதிப்புள்ள 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பது குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வழங்கப்படவில்லை.
    திருப்பூர்:

    பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள், குறிப்பாக பள்ளிகளில் அடுத்தடுத்த சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  

    இதுகுறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும்,  பள்ளிகள் தோறும் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்த திருப்பூர் எஸ்.பி. சஷாங்சாய் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். 

    மேலும் நேரடியாக புகார் தெரிவிக்க இயலாத  தயங்கும் மாணவிகளுக்கு  பள்ளிகள் தோறும் புகார் பெட்டி கட்டாயம் வைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்ட நிலையில், திருப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறியதாவது:-

    பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பது குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உறுப்பினர், ஆசிரியர்கள் அடங்கிய தற்காலிக குழுவை நாங்களே உருவாக்கியுள்ளோம். 

    மாணவியருக்கு 1098 மற்றும் 14417 ஆகிய இலவச உதவி எண் அச்சிடப்பட்டு புகார் பெட்டி வைத்துள்ளோம். இதில் மாணவிகள் தங்கள் பிரச்சினைகளை தயக்கமின்றி எழுதிப்போடலாம். பள்ளிக்கு செல்லும்போதும், வழியில் கேலி, கிண்டல் யாராவது செய்தாலோ, பாலியில் ரீதியான சீண்டல்களால் பாதிக்கப்பட்டாலோ தைரியமாக தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.  

    இல்லையேல் மனுவாக புகார் பெட்டியில் போடலாம். இதனை பள்ளியின் குழந்தைகள் பாதுகாப்பு குழு தக்க முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும், எந்த வகையிலும் மாணவிகளின் பெயர்கள் வெளியே வராது.  

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஊத்தங்கரை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    ஊத்தங்கரை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் கிருஷ்ணகிரி வழியாக வந்த லாரியில் சாராயம் கடத்தி வருவதாக சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் வடக்கு மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்திக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இணையத் பாஷா மற்றும் போலீசார் யுவராஜ், சிவனேசன், இளந்திரையன், கவிராஜன், மகா மார்க்ஸ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் 600 கேன்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாலேந்திரசிங் (வயது33) என்பதும், வெளிமாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 600 கேன்களில் கடத்தி வரப்பட்ட சாராயம் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஊத்தங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் ஆகியோர் டிரைவாிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி அருகே வேம்பள்ளிக்கு இயக்கப்பட்ட 2 அரசு டவுன்கள் நிறுத்தப்பட்டதால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள வேம்பள்ளிக்கு (சின்னார் அணை) 2 அரசு டவுன் பஸ்கள், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இருந்து சூளகிரி வழியாக இயக்கப்பட்டன. இந்த பஸ்கள், சூளகிரியில் இருந்து காமநாயக்கன்பேட்டை, போகிபுரம், இண்டிகானூர் வழியாக வேம்பள்ளிக்கு செல்கின்றன.

    இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 2 பஸ்களும், வேம்பள்ளி பகுதிக்கு இயக்கப்படவில்லை. இதனால், இந்த பகுதி மக்களும், வேம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து சூளகிரியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

    இதுகுறித்து, கிராம மக்கள், டிரைவர், நடத்துனரிடம் கேட்டபோது, சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே பஸ்களை இயக்க முடியவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவ-மாணவிகள் நலன் கருதி நிறுத்தப்பட்ட 2 டவுன் பஸ்களையும் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி போலீசார் ஜாகீர்நாட்றம்பள்ளி கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக பெத்ததாளப்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    மேலும் அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ராமேசுவரம் தீவு பகுதியில் பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    ராமேசுவரம்:

    இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 3 நாட் களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. அதிகாலையிலும் இடைவிடாமல் நல்ல மழை பெய்தது. பின்னர் மீண்டும் காலை 8 மணியில் இருந்து பகல் 2 மணி வரையிலும் ராமேசுவரம் பகுதியில் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது.

    தொடர்ந்து பெய்த பலத்த மழையால் ராமேசுவரம் கோவில் பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் ராமதீர்த்தம் அருகே தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மழைநீர் அதிக அளவில் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரானது நகராட்சி நிர்வாகம் மூலம் மோட்டார் வைத்து வெளி யேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல் கோவிலின் தெற்கு ரத வீதி சாலை மற்றும் மார்க்கெட் செல்லும் சாலையிலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டிடத்தின் முன்பும் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. பஸ் நிலையம் எதிரே உள்ள காவல்துறை தற்காலிக சோதனை சாவடியை சுற்றிலும் மழைநீர் அதிக அளவில் சூழ்ந்து நின்றது.

    இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று முன்தினம் முதல் நல்ல மழை பெய்ய தொடங்கியது. நேற்று பகல் முழுவதும் இடைவிடாமல் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று காலை 8 மணியுடன் மழைநின்றது 24 மணிநேரத்தில் ராமேசுவரத்தில் 54.2 மில்லி மீட்டரும், தங்கச்சிமடத்தில் 40.6 மில்லிமீட்டரும், பாம்பனில் 31.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ஆவூர் அருகே மூட்டுவலிக்கு மருந்து கொடுப்பதாக கூறி தம்பதிக்கு மயக்க மருந்து கொடுத்து 6 கிராம் தாலி காசுகளை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.
    ஆவூர்:

    விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60). இவரது மனைவி செல்லம்மாள் (55). செல்லம்மாள் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த முகவரி தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் லட்சுமணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருப்பாராம். அப்போது அந்த நபரிடம் தம்பதியினர் இருவரும் தங்களுக்கு கை கால் மூட்டுவலி இருப்பதால் பெரும் சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

    இதைக் கேட்ட அந்த நபர் தான் ஒரு சித்த வைத்தியர் என்றும் உங்களுக்கு மூட்டுவலி சரியாவதற்கு மருந்து கொடுக்கிறேன் என்று நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் லட்சுமணன், செல்லம்மாள் ஆகிய இருவருக்கும் வேப்பிலை, எலுமிச்சம் பழம் கலந்த ஒரு கசாயத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த வயதான தம்பதியினர் இருவரும் மயக்கம் அடைந்துள்ளனர்.

    இதை பயன்படுத்தி செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் எடை கொண்ட தங்க தாலி காசுகளை அந்த மர்ம நபர் திருடிக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 10 மணி ஆகியும் தம்பதியினர் வெளியில் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது அப்போதும் அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு மயக்கம் தெளிந்த தம்பதிகள் நடந்த சம்பவம் குறித்து மாத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து தம்பதியிடம் மயக்கமருந்து கொடுத்து தங்கத் தாலி காசுகளை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடுதல் நேர பணி ஊதியத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் 93 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான ஊதியம் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை.

    எனவே கூடுதல் பணி ஊதியம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே 2 முறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் ஊதிய நிலுவை தொகையை வழங்குவதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.

    இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையின்போது நிலுவை தொகை ரூ.4 லட்சத்தை இந்த மாதம் 15-ந் தேதிக்குள் தருவதாக தனியார் நிறுவனத்தினர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உறுதி அளித்தப்படி வழங்காததால் நேற்று மீண்டும் தூய்மை பணியாளர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வி தலைமையில் தூய்மை பணியாளர்கள் கூடுதல் நேர ஊதியத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் இந்த விவகாரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலையிட்டு தூய்மை பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நேற்று பாதிக்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி போலீசார் ஜாகீர்நாட்றம்பள்ளி கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக பெத்ததாளப்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் கும்மனூர் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த 3 லாரிகளில் சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல காவேரிப்பட்டணம் பகுதியில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது கெட்டூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்றிருந்த 2 லாரிகளை சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
    ×