search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார் பெட்டி.
    X
    புகார் பெட்டி.

    மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய திருப்பூர் பள்ளிகளில் புகார் பெட்டி

    பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பது குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வழங்கப்படவில்லை.
    திருப்பூர்:

    பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள், குறிப்பாக பள்ளிகளில் அடுத்தடுத்த சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  

    இதுகுறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும்,  பள்ளிகள் தோறும் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்த திருப்பூர் எஸ்.பி. சஷாங்சாய் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். 

    மேலும் நேரடியாக புகார் தெரிவிக்க இயலாத  தயங்கும் மாணவிகளுக்கு  பள்ளிகள் தோறும் புகார் பெட்டி கட்டாயம் வைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்ட நிலையில், திருப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறியதாவது:-

    பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பது குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உறுப்பினர், ஆசிரியர்கள் அடங்கிய தற்காலிக குழுவை நாங்களே உருவாக்கியுள்ளோம். 

    மாணவியருக்கு 1098 மற்றும் 14417 ஆகிய இலவச உதவி எண் அச்சிடப்பட்டு புகார் பெட்டி வைத்துள்ளோம். இதில் மாணவிகள் தங்கள் பிரச்சினைகளை தயக்கமின்றி எழுதிப்போடலாம். பள்ளிக்கு செல்லும்போதும், வழியில் கேலி, கிண்டல் யாராவது செய்தாலோ, பாலியில் ரீதியான சீண்டல்களால் பாதிக்கப்பட்டாலோ தைரியமாக தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.  

    இல்லையேல் மனுவாக புகார் பெட்டியில் போடலாம். இதனை பள்ளியின் குழந்தைகள் பாதுகாப்பு குழு தக்க முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும், எந்த வகையிலும் மாணவிகளின் பெயர்கள் வெளியே வராது.  

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×