என் மலர்
செய்திகள்

விபத்து பலி
காரகுப்பம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
காரகுப்பம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் அரவிந்த் (வயது 24). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் மோட்டார்சைக்கிளில் காரகுப்பம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






