என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 76 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்ட றிந்தனர்.
    • அரிசியை, தமிழ்நாடு வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

     வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற 3.8 டன் ரேஷன் அரிசியை, கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

     கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் சின்னசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், சூளகிரி தனி வருவாய் ஆய்வாளர் சூர்யா உட்பட கொண்ட குழுவினர் பாகலூர் அருகே ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த நேரம் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடினார். இதையடுத்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்ட றிந்தனர்.

     மேலும், வாணியம்பாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடு, வீடாக ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி, கர்நாடகா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 3.8 டன் ரேஷன் அரிசியை, தமிழ்நாடு வாணிப கழக கிடங்கிலும், வாகனம் உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோ டிய வாகன டிரைவர், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அரிசி சேகரித்து தரும் முகவர்களை தேடி வருகின்றனர். 

    • தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப் பட்டது.
    • தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி கிருஷ்ண கிரி செட்டியம் பட்டியில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கவுன்சிலர்கள் பாலாஜி, சக்திவேல், ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட தலைவர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
    • லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்தார்.

    சூளகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்தார்.

    இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாகேஷ், ரத்னம்மா, யசோதா, லஷ்மம்மா, லஷ்மம்மா காஞ்சனா, பாக்கியவதி, புஷ்பா, தமிழ்செல்வி, சங்கீதா, லதா, வனீதா, முனிரத்தனா, முனிராஜ், சீதாராமன், சேட்டு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    கூட்டத்தில் பல கிராமங்க ளில் அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை, தார் சாலைகள் ஆகிய அடிப் படை வசதிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், பாபி பிரான்சினா மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர் ஒன்றியக்குழு தலைவர், உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்து கொண்டார். 

    • சாம்பசிவம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது64).

    இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர் கவுண்டனூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவராவார்.

    இவர்கள் குடும்பத்துடன் நேற்று முன்தினம் காலை குடும்பத்துடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.

    அங்கிருந்து மீண்டும் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7¼ பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட ரூ.5. லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து சாம்பசிவம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • காலபைரவருக்கு அபி ஷேகம், அர்ச்சனை பூஜைகள், செய்யப்பட்டது.
    • பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அண்ணாலை புதூர் மலை உச்சியின் மேல் குகையில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் அஷ்டமி பெருவிழா நடைப்பெற்றது. சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்த காலபை ரவருக்கு அபி ஷேகம், அர்ச்சனை பூஜைகள், செய்யப்பட்டது.

    இதில் தாமரைப்பூ மாலை, வில்லம்மால தும்பை பூமாலை, சந்தன மாலை, செவ்வரளி மாலை, மஞ்சள் மாலை, எலுமிச்சை மாலை, முழமுந்திரி மாலை, செவ்வந்தி மாலைகள் சாத்தப்பட்டு பூஜைகள் நடந்தது.

    அதனை தொடர்ந்து மாலை அங்குள்ள பைரவ ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் அனைவருக்கும் வடை பாயசத்துடன் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, காவேரிப்ப ட்டிணம், போச்சம்பள்ளி, மத்தூர், மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள். கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் தினேஷ்குமார்.

    தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், இதற்காக குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இருந்தது.

    இதனை நம்பிய தினேஷ்குமார் அந்த மெசேஜில் வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்து 21ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்பு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தினேஷ்குமாருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.

    இதேபோல் கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் அஜீன்குமார் (வயது27). இவரது செல்போனில் வந்த எஸ்.எம்.எஸில் வந்த குறுஞ்செய்தியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வந்தது. அந்த லிங்க்கை கிளிக் செய்தபோது வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் அஜீன்குமார் ரூ.7லட்சத்து 35ஆயிரத்தை செலுத்தினார். பின்னர் அந்த மர்ம நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜீன்குமார் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார். இதேபோன்று ஓசூர் கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஷமீர் என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 48 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரை மர்ம நபர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மாவட்டத்தில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.38 லட்சம் பணம் பறித்த சம்பவம் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் தீவிர விசாரணை
    • 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் ஸ்ரீ குமரன் பைனான்ஸ் என்கிற நிதி நிறுவனத்தை தனபால் (55) என்பவர் நடத்தி வருகிறார். இந்த பைனான்சில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்துள்ளனர்.

    கடந்த ஒரு ஆண்டு காலமாக சீட்டு பணம் நிறைவடைந்த நிலையில், பணத்தை திருப்பி தராமல் பைனான்ஸ் கம்பெனியில் உரிமையாளர் தனபால் ஏமாற்றி வந்துள்ளார்.

    இது சம்மந்தமாக பாதிக்கப் பட்டோர் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் தனபாலை அழைத்து விசாரித்தபோது, அவரது பேரில் இயங்கி வரும் மாங்கூல் உற்பத்தி தொழிற் சாலையை விற்று பணத்தை தருவதாகவும், அதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளார்.

    அந்த வகையில் தற்போது மாங்கூல் தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை தராமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மீண்டும் காவல் நிலையம் கூடிய பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை பெற்றுத்தர போலீசாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் பணத்தை திருப்பித்தர உத்திர வாதம் தராததால் நேற்று போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்ட மக்கள் 50 ற்கும் மேற்பட்டோர் கூடி தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆத்திரம் கொண்ட தனபால், நிதி நிறுவன ஷோகேஸ் கண்ணாடியை கையால் உடைத்து, அதிலிருந்து சிதறிய கண்ணாடி துண்டை எடுத்துக் கொண்டு தன்னைத்தானே உடம்பில் அனைத்து பகுதி களிலும் குத்திக்கொண்டார்.

    ரத்த வெள்ளத்தில் நிதி நிறுவனத்தை விட்டு வெளியே வந்து மீண்டும் தன்னைத்தானே குத்திக்கொண்டதால், பொது மக்கள் பயந்து சிதறியடித்து ஓடினர்.

    பாதுகாப்பிற்காக அங்கிருந்த போலீசார் நெருங்கும்போது கண்ணாடி துண்டை கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்வதாக கூறியதால் காவலர்கள் அவரை நெருங்க முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழ, போலீசாரும் பொது மக்களும் ஓடி சென்று அவர் கையிலிருந்த கண்ணாடி துண்டை அகற்றி, அவரை இரு சக்கர வாகனம் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் நிதி நிறுவன உரிமையாளர் தனபால் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏமாற்றப்பட்ட மக்கள் பணத்தை திருப்பி கேட்டதால் தனபால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனை பிரிவு அய்யூர்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.
    • 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.

     தேன்கனிக்கோட்டை,  

    கர்நாடக மாநில மதுபாட்டில்களை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வழியாக காரில் கடத்தி வருவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலிஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் எஸ்.ஐ ஜெயகணேஷ மற்றும் போலீசார் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனை பிரிவு அய்யூர்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அய்யூர் நோக்கி சென்ற கர்நாடக பதிவு எண் கொண்டகாரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 2 பையில் காநாடக மது பானங்கள் இருந்துள்ளது.

    காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில் கெத்தள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மகன் சீனிவாசன் (39), காநாடக மாநிலம் கனகபுரா தாலுகா காடுசிவனஹள்ளிகிராமம் வெங்கடசாமி மகன் சினிவாசன் (29), சிக்க புட்டைய்யா மகன் சிக்கதொட்டோகவுடா40) ஆகிய 3 பேரும் கர்நாகட மாநிலத்தில் ருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது தெரிய வந்தது.

    காரில் இருந்த சுமார் ரூ.28000 மதிப்புள்ள பிராந்தி, விஸ்கி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர். 

    • மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நகராட்சி 32-வது வார்டில் 2022-2023-ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாமுண்டீஸ்வரி திருமண மண்டபம் பின்புறம் மண் சாலை தார் சாலையாக அமைக்கப்படுகிறது. ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் நடைபெற கூடிய இந்த பணிக்கான பூமிபூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சீனிவாசன் வரவேற்றார். நகர தி.மு.க. செயலாளர் எஸ்.கே.நவாப், நகராட்சி ஆணையாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கோவிந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், மாநில விவசாய அணி துணை செய–லாளர் டேம் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கவுன்சிலர்கள் பாலாஜி, வேலுமணி, சந்தோஷ், ஜெயக்குமார், மதன்குமார், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் தனி ஒருவனாக 52 இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது
    • போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

    ஓசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தனி ஒருவனாக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூர் பகுதியில் கடந்த மாதம் தொடர் இரு சக்கர வாகனத் திருட்டு கடை வீதி பகுதிகளில் நடந்து வந்தது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. சம்பவம் நடந்த பகுதிகளில் வைத்திருந்த சி.சி.டிவி கேமாரா பதிவுகளை கைபற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரே நபர் வாகனத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவானது.

    இதனையடுத்து அந்த திருடன் குறித்து போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர் அதில் தருமபுரி மாவட்டம், ஜிட்டான்டஅள்ளியை சேர்ந்த கண்ணன்(24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தான் ஓசூர் நகர பகுதிகளில், தனி ஒருவானக விலை உயர்வான 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அவர் மீது பல்வேறு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விரைவாக செயல்பட்டு திருடனை பிடித்த ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ் பெக்டர் பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வினோத் உள்ளிட்ட போலீசாருக்கு, மாவட்ட எஸ்.பி. சரோஜ் டாகூர் பாராட்டு, தெரிவித்தார்.

    • ஓசூரில் மாற்று கட்சியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் தி. மு.கவில் இணையும் நிகழச்சி நடைபெற்றது.
    • மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ஓசூரில் மாற்று கட்சிகளி லிருந்து 2,000 பேர் விலகி, நேற்று தி.மு.கவில் சேர்ந்த னர். இதையொட்டி, ஓசூர் மூக்கண்ட பள்ளியில் நடந்த விழாவிற்கு மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்று கட்சிகளிலிருந்து விலகிய 2,000 பேர் தி.மு.க. வில் சேர்ந்தனர். அவர்களை வரவேற்று பிரகாஷ் எம்.எல்.ஏ. விழாவில் பேசினார்.

    மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • கஜேந்திரனின் மனைவி புஷ்பா டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கொள்ளப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் கஜேந்திரன் (வயது 40).

    விவசாயியான இவருக்கு திருமணமாகி புஷ்பா (33) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஜோசிகா என்ற மகளும் உள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் விளை நிலத்தில் மாற்று பயிர் பயிரிட கஜேந்திரன் அவரது சொந்த டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கஜேந்திரனின் மனைவி புஷ்பா டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த புஷ்பாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    கணவர் கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அப்போது உறவினர்கள் புஷ்பா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் திடீரென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த் நேரில் வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இறந்த புஷ்பாவின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பா எதிர்பாராத விதமாக டிராக்டரில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது அவரது கணவர் டிராக்டரை ஏற்றி கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் புஷ்பாவின் கணவர் கஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×