என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்கான பூமி பூஜையை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
ரூ.10.60 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்கான பூமி பூஜை
- மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, 15-வது வார்டுக்குட்பட்ட காந்திநகர், 16-வது வார்டுக்குட்பட்ட லண்டன்பேட்டை பகுதி களில் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாக்கடை கால் வாய்கள் இல்லாமல் சாலை யில் தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் நகராட் சிக்கு புகார் மனு அளித்தனர். இதையடுத்து இந்த 2 இடங்களிலும் தலா ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப் பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்க நக ராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டது.
இந்த பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச் சிக்கு நகராட்சி கமிஷனர் வசந்தி, நகர தி.மு.க. செயலாளர் நவாப் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
அப்போது பொதுமக்கள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மதியழகன் எம்.எல்.ஏ. அந்த மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நாள ந்தா பள்ளிகளின் நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன், மா நில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடே சன், பொதுக்குழு உறுப்பி னர் அஸ்லம், கவுன்சிலர்கள் சுதா சந்தோஷ், ஜெயக்குமார், மாதேஸ்வரி, விநாயகம், பாலாஜி, செந்தில்குமார், பிர்தோஷ்கான், ஹேமாவதி பரந்தாமன், மற்றும் கனல்சுப்பிரமணி, ஜான்டேவிட் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






