search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு
    X

    கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் பீரோ உடைக்கப்பட்டிருப்பதையும், பொருட்கள் சிதறி கிடப்பதையும் காணலாம்

    முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு

    • சாம்பசிவம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது64).

    இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர் கவுண்டனூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவராவார்.

    இவர்கள் குடும்பத்துடன் நேற்று முன்தினம் காலை குடும்பத்துடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.

    அங்கிருந்து மீண்டும் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7¼ பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட ரூ.5. லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து சாம்பசிவம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×