என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்குவாரி பள்ளத்தில் வாலிபர் பிணமாக மீட்பு
- கல்குவாரியில் முத்து மணி பரிதாபமாக இறந்து கிடந்தார்
- உறவினர்கள் இரு வர் மது அருந்த சென் றது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒசஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்த மான பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் முத்துரா யன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முத்து மணி 22 என்பவர் நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை அடுத்து போலிஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்குவாரி பள்ளத் தில் இறந்துகிடந்த வாலிப ரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்க னிகோட்டை அரசு மருந்து வமனைக்கு அனுப்பி வைத்து விசாரனையி நடத்தி னர்.
விசாரணையில் நேற்று முன்தினம் முத்துமணியுடன் அவரது உறவினர்கள் இரு வர் மது அருந்த சென் றது தெரியவந்தது. அதனால் கல்குவாரி பள்ளத்தில் கால் தவறி விழுந்து முத்துமணி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என கோணத்தில் விசாரனை மேற்கொண் வருகின்றனர் . இறந்தவரின் அண்ணன் சிவகுமார் கொடுத்த புகா ரின் பேரில் வழக்குபதிவு செய்த முத்துமணியுடன் சென்ற இருவரிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






