என் மலர்tooltip icon

    கரூர்

    • ரூ.8 கோடியில் 2 புதிய மின்மாற்றிகள் திறக்கப்பட்டது
    • அய்யர்மலை துணை மின் நிலையத்தில் நிறுவப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை துணை மின் நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ. 8 கோடி செலவில் சூரிய சக்தியில் இயங்கும் 26 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் இரண்டு மின்மாற்றிகள் பொருத்தும் பணி சமீபகாலமாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார், அதனை தொடர்ந்து அய்யர்மலை துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு மின்மாற்றிகளை துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்,நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார், செயற்பொறியாளர் ஆனந்த், அய்யர்மலை உதவி செயற்பொறியாளர் சிராஜுதீன், குளித்தலை உதவி செயற்பொறியாளர் பாலகுமார், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ரமேஷ் மற்றும் நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், மின்வாரிய பணியாளர்கள் பொதுமக்கள் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமராவதி ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்
    • மீன்பிடித்து கொண்டிருந்த போது சம்பவம்

    கரூர்

    கரூர் வாஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நேரு (வயது 58). கூலி தொழிலாளி. இவர் அமராவதி ஆற்றங்கரையில் நின்று மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி ஆற்றில் விழுந்த நேரு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி மாயம் ஆனார்
    • பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்

    கரூர்:

    கரூர் தரகம்பட்டி அருகே உள்ள பாலவிடுதி கோழிக்கார தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் கார்த்திகா (வயது 19). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் கார்த்திகா சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் பெற்றோர் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த கார்த்திகாவை காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கார்த்திகாவின் தாய் இளவரசி கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கார்த்திகாவை தேடி வருகின்றனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கரூரில் 91.49 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்
    • 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது

    கரூர்

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்தது. இதனையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அரசு அறிவித்த இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டனர். மேலும் சில மாணவ, மாணவிகள் தங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் வந்து நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவுகளை செல்போன் மூலம் தெரிந்து கொண்டனர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 188 பள்ளிகளை சேர்ந்த 5,891 மாணவர்கள், 5,890 மாணவிகள் என மொத்தம் 11,781 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.இதில் 5,200 மாணவர்கள், 5,579 மாணவிகள் என மொத்தம் 10,779 பேர் தேர்ச்சி பெற்று 91.49 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாண்டு மாணவர்கள் 88.27 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 94.72 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

    அரசுப்பள்ளிகளில் 87.45 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.39 சதவீத தேர்ச்சியும், தனியார் பள்ளிகளில் 99.1 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 20-வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 83 சதவீதமாக இருந்தது. இந்தாண்டு 91.49 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கரூர் மாவட்டத்தில் 188 பள்ளிகளில் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 16 அரசு பள்ளிகளும், 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 41 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.

    • வெள்ளை கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
    • லாரி டிரைவரும் கைது

    கரூர்:

    கரூர் கடவூர் அருகே உள்ள மேற்கு சுக்காம்பட்டி பகுதியில் ஒரு லாரியில் வெள்ளை கற்கள் கடத்தி வரப்படுவதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை பறிமுதல் செய்து பாலவிடுதி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து பாலவிடுதி போலீசார் லாரியை ஓட்டி வந்த மதுரை மாவட்டம், அவனியாபுரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1.2 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது
    • புகழூர் நகராட்சி பகுதியில் தொடங்கியது

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.விழாவிற்கு புகழூர் நகர் மன்ற தலைவர் நொய்யல் சேகர் (எ) குணசேகரன் தலைமை வகித்தார். புகழூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு புகழூர் நகராட்சி வார்டு எண்: 2,3,4,6,7,9,11,12, 17,20,22,24 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். விழாவில் மாநில, மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலை விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
    • சாலை மைய தடுப்பு கட்டையில் மோதி விபத்து

    கரூர்:

    கரூர் சுகாதார ஆய்வாளர்கள் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா தரகம்பட்டி கே.கே. எம் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 40), அதே பகுதியை கொசூரை சேர்ந்தவர் குமரேசன் (31), காக்கயம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (37). இதில் மகேஸ்வரன் தோகைமலை அருகே உள்ள சேப்பலாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகவும், குமரேசன் மற்றும் கண்ணன் இருவரும் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று அவர்களின் பதவி உயர்வுக்கான சான்றிதழ்களை கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒரு காரில் சென்றனர். பின்னர் சான்றிதழ்களை சமர்ப்பித்து விட்டு மாலையில் வெள்ளியணை வழியாக வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை மகேஸ்வரன் ஓட்டி சென்றார்.

    • விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது

    கரூர்,

    கரூர் பள்ளப்பட்டியில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளப் பட்டி நகராட்சி தலைவர் எஸ்.ஏ.முனவர்ஜான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கே.பி. குமரன் முன்னிலை வகித்தார். சிறுபான்மை மக்களுக்கு வங்கி கடன், தொழில் தொடங்க கடன், மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் உள்ளிட்ட பலதரப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் பற்றி ஒவ்வொரு துறை வாயிலாக எடுத்துக் கூறப்பட்டது.

    • வீட்டில் இருந்த கல்லுாரி மாணவி மாயமானார்
    • கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த, பாலவிடுதியை சேர்ந்தவர் இளையராணி (வயது 50). இவரது மகள் கார்த்திகா, சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் ெசாந்த ஊருக்கு கார்த்திகா வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த கார்த்திகா திடீரென மாயமானார். இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் இளையராணி கொடுத்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசாருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை

    கரூர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வைபுதூர் புதுப்பாளை யம், மேல குட்டப்பட்டி, வாலாந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மது விற்ற கரிகாலன் (வயது 50), வீரமலை (57), இளங்கோவன் (50), ராமன் (52), செந்தில்குமார் (52) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 31மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கார் மீது லாரி மோதியதில் முதியவர் பலியானார்
    • இதில் காரை ஓட்டி வந்த முத்துசாமி பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கரூர்,

    கரூர் அடுத்த அரவக்குறிச்சி தாலுகா வேலப்பட்டி பீட்டர் தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 68). இவர் தனது காரில் சொந்த வேலையாக திருச்சி சென்று விட்டு, வீட்டுக்கு வெல்லமடை பஸ் ஸ்டாப் அருகே வநது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டேங்கர் லாரி, கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த முத்துசாமி பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி இறந்தார். இது குறித்து அவரது மகள் பிரமிளா கொடுத்த புகார்படி டேங்கர் லாரி டிரைவர் சின்ன ரெட்டிபட்டியை சேர்ந்த மகேந்திரன் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தொடங்கபட உள்ளது
    • இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வருகிற 20-ந் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளாகிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), ெரயில்வே தேர்வு குழுமம் (ஆர்.பி.ஐ), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (ஐ.பி.பி.எஸ்) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற வசதியாக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வருகிற 20-ந் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ம்தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் இளைஞர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×