கார் மீது லாரி மோதியதில் முதியவர் பலி

கார் மீது லாரி மோதியதில் முதியவர் பலியானார் இதில் காரை ஓட்டி வந்த முத்துசாமி பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கார் மீது லாரி மோதியதில் முதியவர் பலி
Published on

கரூர்,

கரூர் அடுத்த அரவக்குறிச்சி தாலுகா வேலப்பட்டி பீட்டர் தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 68). இவர் தனது காரில் சொந்த வேலையாக திருச்சி சென்று விட்டு, வீட்டுக்கு வெல்லமடை பஸ் ஸ்டாப் அருகே வநது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டேங்கர் லாரி, கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த முத்துசாமி பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி இறந்தார். இது குறித்து அவரது மகள் பிரமிளா கொடுத்த புகார்படி டேங்கர் லாரி டிரைவர் சின்ன ரெட்டிபட்டியை சேர்ந்த மகேந்திரன் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com