என் மலர்
கரூர்
- கோம்புப்பாளையம் சீனிவாசபெருமாள் கோவிலில்சிறப்பு அபிஷேக ஆராதனை
- 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு துளசிஇலை, தீர்த்தம், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- முத்தனூர் பகுதியில் உபரி நீர் கால்வாயில்தூர்வார கோரிக்கை
- மழை நீரும் தங்கு தடை இன்றி சென்று புகளூர் வாய்காலில் கலப்பதற்காக, இந்த உபரி கால்வாய் வெட்டப்பட்டது.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன்புதூர், செட்டிதோட்டம், செல்வநகர் வழியாக முத்தனூர் பகுதியில் உள்ள புகளூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டது.
விவசாயத் தோட்டங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரும், மழை காலங்களில் வெளியேறும் மழை நீரும் தங்கு தடை இன்றி சென்று புகளூர் வாய்காலில் கலப்பதற்காக, இந்த உபரி கால்வாய் வெட்டப்பட்டது.
இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கால்வாய்க்குள் ஏராளமான செடி, கொடிகள் ஆள் உயரம் வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக இந்த கால்வாய் வழியாக உபரிநீரும் மழை நீரும் செல்ல முடியாமல் அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் அதிக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கால்வாயில் முளைத்துள்ள செடி கொடிகளை அகற்றிட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.36 லட்சம் செலவில் நகராட்சி பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமிரா
- கேமிரா அமைக்கும் பணிக்கான பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 40 இடங்களில் 120 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணி தொடக்க விழாவிற்கு புகழூர் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், புகழூர் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் மலர்கொடி வரவேற்றார். புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, புகழூர் ஈஜடி பாரி சர்க்கரை ஆலையின் துணைப் பொது மேலாளர்(இயக்கம்) தர்மலிங்கம், மேலாளர் (மனித வளம் )தனபால், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கேமிரா அமைக்கும் பணிக்கான பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி மேற்பார்வையாளர் ரவி, நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மரவாபாளையம் அரசு மதுபான கடை அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, மது விற்பனையில் ஈடுபட்ட நொய்யல் பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரன (வயது 49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் காந்தி நகர் பகுதியில் மதுப்பாட்டில்களை விற்பனை செய்த தண்டபாணி (55)என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தளவா பாளையம் கடைவீதி பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்த தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம்( 54) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்
- செவ்வந்திப்பூ ரூ.220- க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி,முத்தனூர், பேச்சிப்பாறை ,நடையனூர், வேட்டமங்கலம் ,குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், மூலியமங்கலம், புதுகுறுக்குபாளையம், பழமாபுரம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கும், குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி ,ரோஜா, அரளி, செவ்வந்தி வகை பூக்களை, அருகாமையில் செயல்பட்டு வரும் பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்.
கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.500- க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.60- க்கும், ரோஜா கிலோ ரூ.140- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.80- க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.220- க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது. கோவில் விசேஷங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மரவாபாளையம் பகுதியில்மருத்துவம் திட்ட சிறப்பு முகாம்
- பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மரவாபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.
- மாநில அளவிலான பேச்சு போட்டியில்குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவன் வெற்றி பெற்று சாதனை
- போட்டி 2 நாட்கள் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியில் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்,
ஐ.சி.டி அகாடமி ஆண்டுதோறும் ஐ.சி.டி யூத் டாக் என்னும் மேடைப்பேச்சு போட்டியினை நடத்திவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மேடைப்பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். திருச்சி வட்டாரத்தில் நடைபெற்ற மேடை பேச்சு போட்டி 2 நாட்கள் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் பயிலும் மாணவன் திவேஷ் ஐயப்பன் கலந்து கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான 5 பொன்மொழிகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இதில் அவர் 3-ம் பரிசு கிடைத்தது.
இந்த போட்டியின் நடுவர்களாக முன்னணி ஐ.டி. துறைகளில் பணிபுரியும் மனித வளம் மேலாளர்கள் கலந்து கொண்டனர். மேடைப் பேச்சு போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்த கல்லூரியின் மாணவனை கல்லூரியின் முதல்வர் முருகன், துறை தலைவர் ராஜகுரு மற்றும் கல்லூரியின் மனித வளத்துறையயைச் சேர்ந்த மஹேந்திரன் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டினர்.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை பௌர்ணமியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரிஅம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது . அதேபோல் வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன் ,நானப்பரப்பு மாரியம்மன், தளவாபாளையம் மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன்,சேமங்கி மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை கோவில்
நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன் ,பேரூர் அம்மன் கோவில்,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பத்ரகாளி கண்டி யம்மன் கோவில்,அத்திப்பாளையம் பொன்னாச்சிஅம்மன், ,உப்பு பாளையம் மாரியம்மன்,புன்னம் மாரியம்மன் ,பகவதி அம்மன், பேரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் ,பகவதி அம்மன், , குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் புரட்டாசி மாத வளர்பிறை பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். புகழிமலை ஆனந்த நடராஜருக்கும் சிவகாமசுந்தரி அம்பிகைக்கும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- புகழிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில்புரட்டாசி மாத வளர்பிறை பவுர்ணமி கிரிவலம்
- போற்றி பாடல் பாடிக் கொண்டே பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
வேலாயுதம் பாளையம், புகழிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில்
கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலையை சுற்றி வரும் பாதையில் புரட்டாசி மாத வளர்பிறை பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் இரவு நடைபெற்றது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானார் கலந்து கொண்டு புகழிமலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வரிசையாக ஊர்வலமாக வந்தனர். ஆறுநாட்டார் மலை என போற்றி வணங்கப்படும் புகழிமலையில் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரர் பெருமான் ,சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமான், புகழிமலை பாலசுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி போற்றி பாடல் பாடிக் கொண்டே பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
- கரூர் தேசிய நெடுஞ்சாலை சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
- 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள மூலிமங்கலம் பிரிவு சாலை அருகே ஒருவர் மது பாட்டில்களை மறைத்து வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒரு இளைஞர் மது பாட்டில்களை மறைத்து வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் மங்களம் அருகே கொட்டையூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 27) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் மசக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 44 ).இவரது மகள் அக் ஷயா ( 10) இவர் புகளூர் காகித ஆலை பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி அக் ஷயா புகலூர் நானபரப்பு ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் எழுது பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பிய போது டிராக்டர் ஓரமாக நின்று கொண்டிருந்த அக் ஷயா மீது டிராக்டர் ஏறியது. இதில் அக் ஷயாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் விபத்து ஏற்படுத்திய வேலாயுதம்பாளையம் அருகே வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த அல்லிமுத்து (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புகழி மலை சூடாமணி குகையில் சமணர் படுக்கைகளை கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர்கள் ஆய்வு
- சேர மன்னரின் கல்வெட்டுக்கள் ஆகியவை உள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலையில் உள்ள சமணர் படுக்கைகளை கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் கள ஆய்வு செய்தனர்.
வரலாற்று சிறப்புடைய புகழி மலையில் சமண முனிவர்கள் தங்கியிருந்த சூடாமணி குகை உள்ளது. அதில் தங்கியிருந்த சமண முனிவர்களுக்காக அமைத்து கொடுக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் சேர மன்னரின் கல்வெட்டுக்கள் ஆகியவை உள்ளது. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள இந்த வரலாற்று சின்னங்களை கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் அதன் தலைவர் கார்த்திகா லட்சுமி ஏற்பாட்டில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர். தீபா தலைமையில் சங்க உறுப்பினர்கள் சமணர் படுக்கை மற்றும் அதை அமைத்து கொடுத்தவர்களின் பெயர்கள், தமிழ் பிராமி எழுத்தில் அமைந்துள்ள சேர மன்னனரின் கல்வெட்டு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொல்லியல் ஆய்வாளர் மைதிலி அதில் உள்ள தகவல்களை படித்து விளக்கமளித்தார். இதில் கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தின் பொருளாளர் ராஜஸ்ரீ, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமணர் படுகைகளையும் குகை தளங்களையும் பாதுகாத்து வரும் சந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.






