புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை

கோம்புப்பாளையம் சீனிவாசபெருமாள் கோவிலில்சிறப்பு அபிஷேக ஆராதனை 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம்
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை
Published on

வேலாயுதம்பாளையம் 

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு துளசிஇலை, தீர்த்தம், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com