என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூர் - ஈரோடு நெடுஞ்சாலை, புன்னம்சத்திரம் அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதி உள்ளது
    • காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே செங்காட்டனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 33). இவர் தனது பைக்கில், கரூர் - ஈரோடு நெடுஞ்சாலை, புன்னம்சத்திரம் அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதி உள்ளது. பலத்த காயம் அடைந்த அவர், ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து பெரியசாமி வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ், காரை ஓட்டி வந்த ஜெகதாபி கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் மீது வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பானங்களை பறிமுதல் செய்யப்பட்டன

    கரூர், 

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் தோகமலை, கரூர் டவுன், வெங்க மேடு, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக காமராஜ் (வயது 60), குமார் (43), பாலமணி (70), ஆறுமுகம் (35), சேட்டுல (40), பாப்பாத்தி (65), தேவதாஸ் (55), ஆறுமுகம் (52), கண்ணன் (59), வெற்றி வேல் (45) ஆகிய, 10 பேரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.மேலும் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக மது விற்றதாக கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கள்ளை ஊராட்சி கள்ளை ராஜலிங்கம் (வயது 77), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் சாத்தான்குடி வினோத் (30), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வெள்ளைய கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ராஜ்கணேஷ் (29), புதுக் கோட்டை மாவட்டம் ஆவு டையார்கோவில் பொன் பேத்தி பகுதி மதன்குமார் (27), போத்துராவுத்தன் பட்டி ஊராட்சி போத்து ராவுத்தன்பட்டி மகன் குமார் (43) ஆகியோரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பானங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் சிறப்பு கிராமசபா கூட்டங்கள் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம கூட்டம் குறுக்குச்சாலை பங்களா நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சோமசுந்தரம், முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரகுபதி வரவேற்றார்.

    அதேபோல் கோம்புபாளையம் ஊராட்சி சார்பில் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலில் கிராம சேவை கூட்டம் நடைபெற்றது .கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பசுபதி தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் வேத சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் திருக்காடுதுறை ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நளினி வரவேற்றார். என்.புகளூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் செல்வி முன்னிலை வைத்தார்.ஊராட்சி செயலர் இந்து வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள், கால்நடை துறை மருத்துவர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நொய்யல் ரெயில்வே கேட் பழுதடைந்தது
    • 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக திருச்சி - பாலக்காடு மார்க்கத்திற்கான ரெயில்வே இரும்பு பாதை உள்ளது. இதன் காரணமாக நொய்யலில் 2 ரெயில்வே கேட்கள் உள்ளன. ரயில் வரும் முன் மூடப்பட்டு, ரயில்கள் சென்றவுடன் திறக்கப்படும். இந்நிலையில் நேற்று ரயில் வருவதை முன்னிட்டு ரெயில்வே கேட் மூடப்பட்டது.

    இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக ரயில் வந்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டது. ரயில் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் ரயில்வே கேட்டை திறக்க, கேட்கீப்பர் முற்பட்டபோது திறக்கவில்லை.

    ரயில்வே கேட் திறக்கமுடியாததால் இரு பக்கத்திலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    நொய்யல் குறுக்கு சாலை பகுதிக்கு வந்த வாகனங்களும், வேலாயுதம்பாளையம் வந்த வாகனங்களும் கேட் பழுதடைந்தது குறித்து தகவல் அறிந்து, நொய்யல் அருகே குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், வேலாயுதம் பாளையம் வழியாக பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் பகுதிக்கும், அதேபோல் பரமத்தி வேலூர் ,நாமக்கல், சேலம் பகுதியில் இருந்து கொடுமுடி, ஈரோடு ,கோவை, வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம், நொய்யல் குறுக்கு சாலை வழியாக சென்றன.

    ரெயில்வே ஊழியர்கள் வந்து மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டுகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக போராடி கேட்டில் உள்ள பழுதை ஊழியர்கள் நீக்கினர். இதனால் ரயில்வே கேட் திறக்கப்பட்டது. ரெயில்வே கேட் பழுதடைந்து, திறக்க முடியாததால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை என அறிவிப்பு
    • மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை 4-ந்தேதி, புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நொய்யல், குப்பம், அத்திப்பாளையம், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு அத்திப்பாளையம் புதூர் வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய ஊர்களுக்கும், மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நானப்பரப்பு பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது
    • அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின்நிலையத்திலிருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின் பாதையில் நானப்பரப்பு பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பி ஜம்பர் கட் ஆகி அறுந்து கீழே விழுந்து விட்டது. இதனை கண்ட பொதுமக்கள், புகளூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பி அறுந்து விழுந்த நேரத்தில், அந்த இடத்தை யாரும் கடந்து செல்லாதததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்
    • கரூரில உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,  காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், ஒழுங்காற்று குழுவுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை கர்நாடக அரசு கொடுக்க மறுக்கிறது. தமிழகத்திற்கு 50 சதவீத தண்ணீரை கூட கொடுக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் வயிற்றில் அடிக்க கூடாது. தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரோடு தொலைபேசியில் பேசி இருக்க வேண்டும். டெல்லி சென்று பேசி இருக்கலாம். இந்த விசயத்தில் தமிழக முதல்வர் கெளரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

    • தாந்தோணி வெங்கட்ரமண பெருமாளுக்கு காணிக்கையாக ஒத்த செருப்பு கொண்டு வந்த பக்தர்கள்
    • கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்களில் ஒத்த செருப்புடன் ஊர்வலமாக பக்தர்கள் கடைசி சனிக்கிழமை வரை வலம் வருவர்

    கரூர்,

    திண்டுக்கல் மாவட்டம், கருங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர். ஒத்த செருப்பு என்னும் செம்மாளி செய்து கரூர், தாந்தோணிமலை வெங்கட்ரமண பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.பல ஆண்டுகளாக நடைபெறும் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியானது இந்த வருடமும் நடைபெற்றது. சுவாமி கனவில் வந்து கூறியதாக சொல்லப்படும், அளவுடைய ஒத்த செருப்பு செய்யப்பட்டது. தோலினால் செய்யப்பட்ட 70 இன்ச் அளவுடைய ஒத்த பாதம் செருப்புடன், கருங்கல் பகுதியினர் தாந்தோணி வந்தடைந்தனர்.

    தாந்தோணிமலையை சுற்றி ஊர்வலமாக சென்ற அவர்கள் தொடர்ந்து, கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்களில் ஒத்த செருப்புடன் ஊர்வலமாக வலம் வருகின்றனர். புரட்டாசி கடைசி சனிக்கிழமை கரூர் மாநகரப் பகுதி வழியாக ஒத்த செருப்பை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்து வந்து கல்யாண வெங்கட்ரமண சுவாமி பாதத்தில் சமர்ப்பித்து வேண்டுதலை நிறைவேற்றுவர். 

    • புகழூர் நகராட்சி கூட்டத்தில் அறிவு சார் மையம், கேமிராக்கள் அமைத்தல் உள்ளிட்ட 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது

     வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணை தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார் . நகராட்சி ஆணையர் பால்ராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் பேசும்போது,நகராட்சியில் குற்றங்களை தடுக்கும் வகையில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.36 லட்சம் மதிப்பில் 42 இடங்களில் 120 கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது. அதேபோல் பாண்டிபாளையத்தில் திறந்த வெளியில் உள்ள கிணற்றுக்கு தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது. நகராட்சியில் சுகாதாரத்தை பேணும் வகையில் 3 பொதுக்கழிப்பிடம் கட்டவும், கூலகவுண்டனூர், காந்திநகர் உட்பட 3 இடங்களில் அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. நகராட்சி முழுவதும் சாக்கடை பிரச்சனை குடிநீர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படும். நகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில் புதிய வணிக வளாகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை கண்காணித்து அதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்றார். தொடர்ந்து கூட்டத்தில்  84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர் மலர்கொடி, நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வேலாயுதம் பாளையத்தில் உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்தள்ளது
    • உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரை விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர்மாவட்டம்நொய்யல், மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகளூர் தளவாபாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு விவசாயம் நடைபெறுகிறது. இந்த கரும்புகள், தனியார் சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் தயாரிப்பதற்கும் விற்பனை செய்கின்றனர்.கரும்பு சாறில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும். இங்கு விற்பனையாகும் வெல்ல சிப்பங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,200 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் அச்சும் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • புரட்டாசி மாதம் தொடங்கியதால் கரூரில் நாட்டு கோழி விலை குறைந்தது
    • நாட்டுக்கோழி விலை குறைவாக கிடைப்பதால், பலர் உயிர் கோழிகளை வாங்கி செல்கின்றனர்

     வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தோட்டகுறிச்சி, மேட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி, நன்னியூர் புதூர், வாங்கல், பாலத்துறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், நொய்யல், புன்னம்சத்திரம் பகுதிகளிலும், வாரச்சந்தைகளிலும் நாட்டு கோழி விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் வரை ஒரு கிலோ நாட்டுக் கோழி, ரூ.350 வரை விற்பனையானது. ஆனால், நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையானது. புரட்டாசி மாதம் தொடங்கியதன் காரணத்தால் இந்த விலை சரிவு ஏற்பட்டு உள்ளது.இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் அசைவத்தை விரும்புவதில்லை. இதனால் நாட்டுக்கோழிகள் விலை சரிந்துள்ளது. ஆனால், நாட்டுக்கோழி விலை குறைவாக கிடைப்பதால், பலர் உயிர் கோழிகளை வாங்கி செல்கின்றனர். 

    • கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவி சாதனை
    • 5000 டாலர் மதிப்பிலான அமேசான் வெப் சர்வீஸ் சந்தா வழங்கியது.

    வேலாயுதம்பாளையம், 

    சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவியல்-தரவு அறிவியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவி கிருத்திகாவும், அவரது குழுவினரும் கனடா நாட்டில் நடைபெற்ற மொராக்கோ சொலிடாரிட்டி ஹேக்கத்தான் என்ற போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசினை வென்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்க எம்ஐஎல்ஏ என்ற நிறுவனம் 5000 டாலர் மதிப்பிலான அமேசான் வெப் சர்வீஸ் சந்தா வழங்கியது. சாதனை படைத்த மாணவியை எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் செயலாளர் இராமகிருஷ்ணன், செயல் இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினார்கள்.

    ×