என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூர் பகுதிகளில் வெல்லம் விலை வீழ்ச்சி
- வேலாயுதம் பாளையத்தில் உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்தள்ளது
- உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரை விற்பனையானது
வேலாயுதம்பாளையம்,
கரூர்மாவட்டம்நொய்யல், மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகளூர் தளவாபாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு விவசாயம் நடைபெறுகிறது. இந்த கரும்புகள், தனியார் சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் தயாரிப்பதற்கும் விற்பனை செய்கின்றனர்.கரும்பு சாறில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும். இங்கு விற்பனையாகும் வெல்ல சிப்பங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,200 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் அச்சும் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.






