என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமணர் படுக்கைகளை கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர்கள் ஆய்வு
- புகழி மலை சூடாமணி குகையில் சமணர் படுக்கைகளை கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர்கள் ஆய்வு
- சேர மன்னரின் கல்வெட்டுக்கள் ஆகியவை உள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலையில் உள்ள சமணர் படுக்கைகளை கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் கள ஆய்வு செய்தனர்.
வரலாற்று சிறப்புடைய புகழி மலையில் சமண முனிவர்கள் தங்கியிருந்த சூடாமணி குகை உள்ளது. அதில் தங்கியிருந்த சமண முனிவர்களுக்காக அமைத்து கொடுக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் சேர மன்னரின் கல்வெட்டுக்கள் ஆகியவை உள்ளது. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள இந்த வரலாற்று சின்னங்களை கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் அதன் தலைவர் கார்த்திகா லட்சுமி ஏற்பாட்டில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர். தீபா தலைமையில் சங்க உறுப்பினர்கள் சமணர் படுக்கை மற்றும் அதை அமைத்து கொடுத்தவர்களின் பெயர்கள், தமிழ் பிராமி எழுத்தில் அமைந்துள்ள சேர மன்னனரின் கல்வெட்டு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொல்லியல் ஆய்வாளர் மைதிலி அதில் உள்ள தகவல்களை படித்து விளக்கமளித்தார். இதில் கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தின் பொருளாளர் ராஜஸ்ரீ, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமணர் படுகைகளையும் குகை தளங்களையும் பாதுகாத்து வரும் சந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.






