என் மலர்tooltip icon

    கரூர்

    • பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு ஒன்றை காணவில்லை
    • போலீசில் புகார் கொடுத்தார்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை


    கரூர், 


    க.பரமத்தி அடுத்த நஞ்சைகாள குறிச்சி பகுதியில் வசிப்பவர் புக்கராண்டி (வயது 60). இவர் சம்பவத்தன்று பட்டியில் அடைக்கப்பட்ட தனது ஆடு ஒன்றை காணவில்லை என சின்னதாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வெளியூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்
    • வீட்டை பூட்டிவிட்டு தொழிலுக்கு சென்றனர்
    • தங்க செயின்,தோடு திருடு போயிருந்தது


    கரூர்,


    கரூர் மாவட்டம் க.பரமத்தி, ரெங்கநாதபுரம் அருகே பசுமைநகரில் வசிப்பவர் பொன்னுசாமி (வயது 49), வெளியூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி க.பரமத்தி கடைவீதியில் பாக்குதட்டு கடை விற்பனை செய்கிறார். இவர்கள் இருவரும் வழக்கம் போல் காலையில் வீட்டை பூட்டிவிட்டு தொழிலுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது 1 பவுன் தங்க செயின் மற்றும் தோடு 4 செட் ஆகியவை வில்லை திருடு போயிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்
    • அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது
    • சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்


    கரூர்


    கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் விஜயன் (வயது 32) இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயன் பணி முடிந்து திருச்சியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் குளித்தலை வழியாக பழைய ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி -கரூர் புறவழிச்சாலை நாபாளையம் அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட விஜயன் சம்பவ இடத் திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை நடத்தி வருகின்றனர்.




    • கழிவறையில் மயங்கிய முதியவர்
    • முதியவர் திடீர் சாவு


    வேலாயுதம்பாளையம்


    கரூர் மாவட்டம் புகளூர் அருகே முருகம்பாளையம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55). சம்பவத்தன்று இவர் அவரது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார்.


    அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


    இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உற்பத்தி குறைவு
    • பூக்களின் விலை உயர்வு


    வேலாயுதம் பாளையம்


    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,குளத்துப்பாளையம், காளிபாளையம் ,வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் ,மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி ,முல்லை, சம்பங்கி ,அரளி,ரோஜா ,செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.


    பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களைப் பறித்து கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் ,அருகில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர் .பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.


    கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர். தற்போது குண்டுமல்லி ரூ.900- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.260- க்கும், முல்லைப் பூ ரூ.800- க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும் வாங்கிச் சென்றனர். ஜப்பசி மாதம் தொடங்கி விட்டதால் திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் வருவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.




    • தோகைமலை அருகே திருமணம் ஆன 5 மாதத்தில் தந்தை வீட்டிற்கு வந்த பெண் மாயமானார்
    • தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், 

    தோகைமலை அருகே தெற்கு வருந்திப்பட்டியில் திருமணம் ஆன 5 மாதத்தில் தந்தை வீட்டிற்கு வந்த பெண் மாயமானார்.

    தோகைமலை அருகே தெற்கு வருந்திப்பட்டி வீரமலை என்பவரது மகள் சரண்யா (வயது 22). இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கீழக்கல்மேடு பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரை திருமணம் செய்து உள்ளனர். குமரேசன், தற்போது காரைக்கால் பகுதியில் வெல்டி ங்வேலை செய்கி றார்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதி, தோகைமலை அருகே வருந்திப்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சரண்யா வந்ததாக தெரிகிறது. பின்னர் அன்று இரவு வீட்டில் தூங்கிய சரண்யா, திடீர் என்று மாயமாகி உள்ளார். அதி காலை 5 மணிக்கு சரண்யா வின் சகோதரர் சக்திவேல் எழுந்து பார்த்த போது தூங்கிக்கொண்டு இருந்த சரண்யா மாயமா னதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தங்களது உறவி னர்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் சரண்யா கிடைக்கவில்லை.

    இதனால் தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று 5 மாதத்தில் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாயி உயிரிழப்பு எதிரொலியாக மலைத்தேனீக்கள் அகற்றப்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து மலை தேனீக்களை அகற்றினர்

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன்புதூர் பகுதியில் இருந்த ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்களை மலை தேனீக்கள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் கவுண்டன் புதூர் பகுதியைசேர்ந்த விவசாயியான ராமசாமி (63) என்பவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது அந்த தேனீக்கள் கடித்ததில் ராமசாமி உயிரிழந்தார்.

    இதனை தொடர்ந்து முனி நாதபுரம் பகுதி ரங்கசாமி (55) என்பவர் கொடுத்த கோரிக்கை புகாரின் பேரில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து மலை தேனீக்களை அகற்றினர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • நஞ்சை புகழூர் ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது
    • மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் ஒன்றியம், நஞ்சை புகழூர் ஊராட்சியில் கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.மாவட்ட கால்நடை பரா மரிப்புத்துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர், உதவி இயக்குநர் டாக்டர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.கால்நடை உதவி மருத்து வர்கள் கண்ணண், சுதா, கால்நடை ஆய்வாளர்கள் நடராஜன், முத்துக்குமார் மற்றும் கால்நடை பராமரி ப்பு உதவியாளர் மீரா ஆகியோர் கொண்டனர்.கால்நடை பராமரிப்பு குறித்த சிறு கண்காட்சி அமைக்கப்பட்டு ஆலோ சனை வழங்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயி களுக்கு கால்நடை வள ர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்ப ட்டது.முகாமில் நன்செய் புக ளூர் ஊராட்சி மன்ற தலை வர் மதிவாணன் மற்றும் உறுப்பினர்கள், விவசாயி கள் கலந்துகொண்டனர். 

    • கரூர் புகளூரில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது
    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை 20-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தவுட்டுப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், நொய்யல், வேலாயுதம்பாளையம், புன்செய் புகளூர் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • வேலாயுதம்பாளையம் அருகே அதிகளவு பிரஷர் மாத்திரை சாப்பிட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்
    • தாய் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அருகே அய்யம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). கூலித் தொழி லாளி. இவரது மனைவி அமலா (48).

    ராஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் கடந்த 11-ந்தேதி உடல்நிலை சரியாமல் இறந்தார். தாய் இறந்த துக்கத்தில் இருந்து மீளாத ராஜேந்திரன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து ள்ளார். இது குறித்து மனைவி கேட்ட போது அதிகளவு பிரஷர் மாத்திரை களை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, ராஜேந்தி ரனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இருப்பினும் சிகிச்சை பலனின்றிஅவர் உயிர் இழந்தார். இதுகுறித்து அமலா கொடுத்த புகாரின் பேரில், வேலாயுத ம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆம்பூர்பட்டி நால்ரோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்திடில் மாநகராட்சி ஊழியர் பலியானார்
    • உடலை கைப்பற்றி மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பாத்திமா மலை ஊரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது 31).இவர் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் இன்று காலை அலுவலக பணி வேலையாக ஒரு ஸ்கூட்டரில் தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். பின்னர் அதே ஸ்கூட்டரில் இன்று மாலை மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விராலிமலை-கீரனூர் சாலையில் ஆம்பூர்பட்டி நால்ரோடு அருகே சென்றபோது எதிரே மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பாசர்சலால் (27) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் தலையில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பாசர்சலாலை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூரில் மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • மதுவிலக்கு அமலாக பிரிவு போலீசார் நடவடிக்கை

    கரூர்,

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் மாயனுார், வெள்ளியணை, தான்தோன்றி மலை உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.மது அப்போது, சட்ட விரோதமாக, மது பாட்டில் களை விற்பனை செய்ததாக முருகன் (வயது 55), சீரங்கன் (57), மலையப்பன் (48), வேலுசாமி (34), சுரேஷ் (40) உள்பட, ஐந்து பேரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    ×