என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற அலுவல கட்டிடம் திறப்பு
    • குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார்

    குளித்தலை, 

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரூ.23.57 லட்சத்தில் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை, குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் திறந்து வைத்தார்.

    விழாவில் பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி சத்தியமூர்த்தி தலைமை வகித்தார், தொடர்ந்து விழாவில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கரிகாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், தி.மு.க. மாணவரணி செயலாளர் கோபிநாத், ஒன்றிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சிவா, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பத்மா பொன்ன ம்பலம், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், வைகைநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பெரியசாமி, மற்றும் பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் ராஜ்குமார், பழனி யம்மாள், ஜெயலலிதா, கவிதா, செல்வகுமார், காளி தேவி, சேகர், அம்சவல்லி மற்றும் ஊராட்சி செயலா ளர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கரூர் கிருஷ்ணராயபுரம், மாயனூர் பகுதிகளில்அரைவட்ட பஸ் ஸ்டாப் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

    கரூர்,  

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நான்காவது வார்டு கடைவீதி பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துகள் நடுரோட்டில் நின்று செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, கிருஷ்ணராய புரம் தாலுக்கா அலுவலகம் முதல் பேருந்து நிறுத்தம், அங்காளம்மன் கோவில் வரை பிளாக்ஸ்பாட் என அறிவித்து நெடுஞ்சாலை துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டு, சர்வீஸ் ரோடு ஏற்படுத்தப்பட உள்ளது.

    இந்த இந்த சர்வீஸ் ரோடு, பேருந்து நிறுத்த முதல் வலையர்பாளையம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் தேசிய மகாதானபுரத்தில் அமைத்துள்ளது போல் கிருஷ்ணராயபுரம் மற்றும் மாயனூர் பகுதிகளில் அரை வட்ட வடிவிலான பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்

    • கரூர் அரசு மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • எனது மண் - எனது தேசம் என்னும் தலைப்பில் மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எனது மண் எனது தேசம் என்னும் தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏனோக் ஜெபசிங் பெட்போர்டு வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக நேரு யுவேந்திரா அமைப்பின் வட்ட பொறுப்பாளர் சிறப்புரையாற்றினார், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தீதன், சரவணகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சங்கீதா நன்றி கூறினார் . நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பூக்களின் விலை கிடு கிடு உயர்ந்துள்ளது
    • ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு விலை உயர்ந்தது

    வேலாயுதம் பாளையம்,

    நொய்யல்,மரவா பாளையம் , குளத்துப்பா ளையம், காளிபாளையம் ,வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் ,மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி ,முல்லை, சம்பங்கி ,அரளி,ரோஜா ,செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்க ளைப் பறித்து லேசான கோனிப் பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் ,அருகில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர் .பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிக ளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர். தற்போது குண்டுமல்லி ரூ.1200- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.250- க்கும், அரளி கிலோ ரூ.520- க்கும், ரோஜா கிலோ ரூ.460- க்கும், முல்லைப் பூ ரூ.1000- க்கும், செவ்வந்திப்பூ ரூ.520- க்கும், கனகாம்பரம் ரூ.1100-க்கும் வாங்கி சென்றனர். ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    க.பரமத்தி ஒன்றியத்தில் இராஜபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்க கூட்டம் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள இராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் செயலாட்சியர் திருப்பதி தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சின்னத்தாராபுரம் களமேலாளர் திருவள்ளுவன், சங்க செயலாளர் ராஜம்மாள் , சங்க பணியாளர் கலாராணி, கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் சிவானந்தம் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் பள்ளியில் சாரணர் இயக்க தொடக்க விழா நடைபெற்றது
    • அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

    கரூர்,

    தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரத் சாரணர் இயக்கம் தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாந்தி கலந்து கொண்டு இயக்கத்தை வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சாரணர் இயக்க கமிஷனர் முத்துசாமி, சாரணர் மாவட்ட ஆர்கனைசிங் ஆணையர் வெங்கடேசன் மற்றும் கோபிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் முதல்வர் ஜெயசித்ரா அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார். இதில் சாரண இயக்கத்தினுடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாந்தி அவர்கள் உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வாடகைக்கு குடிவருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்
    • அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தல்

    வேலாயு தம்பாளையம்,

    அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில், கொள்ளை, வழிபறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.எனவே கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு ட்பட்ட நொய்யல், குந்தா ணிபாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம், புன்னம், குட்டக்கடை ,காகித ஆலை,குறுக்கு பாளையம், மூலிய மங்கலம் ,புகழூர், தவுட்டுப்பாளையம், கந்தம்பாளையம், கரப்பா ளையம், திருக்காடுதுறை, நன்செய் புகளூர் ,தோட்டக்குறிச்சி, வேலா யுதம்பாளையம், தளவாபா ளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று, அதன் நகல்களை கொண்டு வந்து வேலா யுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். போலீசார் ஒப்புதலுக்கு பிறகே, அவர்களை வாடகைக்கு குடிஅமர்த்த வேண்டும். மேலும் வாடகைக்கு குடியிருப்ப வர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடி யாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 27-ந்தேதி நடைபெற உள்ளது
    • கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெறுகிறது

    கரூர்,

    கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 27-ந்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடக்கிறது. அதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    • எல்லகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி திடீர் மாயமானார்
    • குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கள்ளை பஞ்., எல்லகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50), கூலி தொழிலாளி. இவரது மகன் பழனிவேலு, கடந்த, 10-ந் தேதி காலை, 10 மணியளவில் தோகைமலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை.பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து கணேசன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்.,ராக்கம்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 48), கூலி தொழிலாளி. இவரது மகள் அந்த பகுதி பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரை காணவில்லை. இதுபற்றி கருப்பன் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள அஷ்டா தச புஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி, சரஸ்வதிக்கு நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு மகா அபிஷேக ஆராதனை அலங்கார சர்வ லோக ஷேமம் பிராத்தனை நடைபெற்றது.புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் நவராத்திரி 6- நாளை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரிஅம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் சேமங்கி மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன் ,பேரூர் அம்மன் கோவில்,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில்,அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், ,உப்பு பாளையம் மாரி யம்மன்,புன்னம் மாரியம்மன் ,பகவதி அம்மன்,பே ரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் ,பகவதி அம்மன், குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார அம்மன் கோவில்களில் நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கரூரில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்

    கரூர், 

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் வெங்கமேடு, தென்னிலை, குளித் தலை உள் ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக, மது விற்றதாக சின்ராஜூ (வயது 32), மகேந்திரன் (31), ரங்கர் (50), சத்தியசீலன் (62), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • இஸ்ரேல் போரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது

    கரூர்,

    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் போரை கண்டித்தும் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினர் ராஜா முகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், தர்மலிங்கம், ராஜேந்திரன், ஹோச்சுமின் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ×