என் மலர்
கரூர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம் ஆத்தூர் பிரிவு அருகே பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மலையம்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (56), பெட்டி கடைக்குள் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிபாளையம் பகுதியில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த ரத்தினவேல் (65) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்ததாக பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சாவித்திரி (50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பழமாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). கூலி தொழிலாளி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் பழைய நெல்லு மண்டித்தெருவை சேர்ந்த புருஷோத்தமன் இவர் மீது மோதினார்.
இதில் இருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
- குழந்தைசாமி (85) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்கு சாலை பங்களா நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பான் மசாலா, குட்கா மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, குழந்தைசாமி (85) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரவக்குறிச்சி தொகுதிபுகழூர் நகர தி.மு.க. ஆய்வுக் கூட்டம்
- வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம், கூட்டம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி புகழூர் நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேலாயுதம் பாளையம் புகழி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, க.பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான மொஞ்சனூர் இளங்கோ, புகழூர் நகர்மன்ற தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மீனா ஜெயக்குமார் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நகரக் தி.மு.க. செயலாளர் சேகர் என்கிற குணசேகரன் கழகத் தொண்டர் ஒவ்வொருவரையும் அவர்களின் தேவையும் தெளிவாக புரிந்து கொண்டு ஒருமைப்பாட்டு உள்ளத்தோடு செயல்பட்டு வருகிறார்.
கரூர் மாவட்டத்தில் புகழூர் நகராட்சி பகுதியில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை தி.மு.க.விற்கு பெற்றுத் தருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் புகழூர் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர் மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நகர, வார்டு தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர்
- குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
கரூர் மாவட்டம் வெங்கமேடு, தாந்தோணிமலை, வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, தென்னிலை, மாயனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மளிகைக்கடை, பெட்டிக் கடை, டீக்கடைகளில் மறைத்து வைத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 14 பேர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
- விழாவுக்கு தீபா கண்ணன் மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி லேப்ராஸ் கோப்பி கருவியை திறந்து வைத்தார்.
- இதில் மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்,
கரூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் தீபா கண்ணன் மருத்துவ மனையில் அதிநவீன லேப்ராஸ்கோப்பி கருவி (நுண்துளை அறுவை சிகிச்சை கருவி) திறந்து வைக்கப்பட்டது.
விழாவுக்கு தீபா கண்ணன் மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி லேப்ராஸ் கோப்பி கருவியை திறந்து வைத்தார். சர்க்கரை மற்றும் தீவிர சிகிச்சை டாக்டர் நிரேஷ் கண்ணன் வரவே ற்றார். இக்கருவி குறித்து, டாக்டர் ராமசாமி கூறு ம்போது, அதிநவீன நுண்து ளை அறுவை சிகிச்சை கருவி மூலம் வயிற்றில் இருக்கும் உறுப்புகளின் பிரச்சினைகளை மிக துல்லியமாக அறிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதனால் ரத்தப்போக்கு மிகவும் குறைவாக இருக்கும். இந்த கருவி மூலம் பித்தபை, குடல் வால் நோய், குடல் இறக்கம், குடலில் ஏற்படும் புற்றுநோய், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற் கொள்ள முடியும் என்றார். கரூர் தீபா கண்ணன் மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை, குடல் நோய் மருத்துவ சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் துறைக்கு மத்திய அரசு என்.ஏ.பி.எச். சான்றிதழ் பெற்ற ஒரே மருத்துவமனை ஆகும். இந்த விழாவில் கரூர் கே.ஆர்.ஜி. மருத்துவமனை குடல், ஈரல் மற்றும் கணையம் சிகிச்சை டாக்டர் மணி கண்டன், கரூர் கேஸ்ட்ரோ பவுண்டேஷன் மருத்துவ மனை குடல் அறுவை சிகிச்சை டாக்டர் சதாசிவம், கரூர் ஸ்ரீ சக்கரா மருத்துவ மனை குடல் அறுவை சிகிச்சை டாக்டர் ராஜ்நிகேதன், கரூர் கே.ஆர்.ஜி. மருத் துவமனை மகப்பேறு டாக்டர் கோமல் சிந்து, ஸ்ரீ சக்கரா மருத்துவமனை மயக்கவியல் டாக்டர் நித்யாபாரதி மற்றும் தீபா கண்ணன் மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள அஷ்டாதச புஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி, சரஸ்வதிக்கு விஜயதசமியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அஷ்டாதச புஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி, சரஸ்வதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.வாழ்வில் மாணவச் செல்வங்கள் எல்லா நலமும், வளமும் பெற்று வாழவும் , நன்றாக படிக்கவும் பிராத்தனை செய்யப்பட்டது.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்க வேண்டும்.
- போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் திருட்டு குற்றங்களை கண்டுபிடிக்கும் வகையில் தரமான கேமரா அமைப்பது குறித்து ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபார கடைகள், நிதி நிறுவனங்கள் அதே போல் அனைத்து வீடுகளிலும் திருட்டை தடுக்கும் வகையில் தரமான கேமரா வைக்க வேண்டும் . பல்வேறு வியாபார கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்க வேண்டும். பெரும்பாலான கடைகளில் கல்லாப்பெட்டியை குறிவைத்தே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பெரும்பாலான கடைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் செயல்பட்டும் பதிவு ஆகாத நிலையில் உள்ளது. சாலையில் செல்வோரை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும் வகையில் எவரேனும் நின்று கொண்டிருந்தாலோ, தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தாலோ, எவரேனும் நின்று கொண்டு நோட்டமிட்டாலோ உடனடியாக 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும் .
மேலும் பொதுமக்கள் குற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 என்ற போன் நம்பரை பயன்படுத்தவும். மேலும் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்டம், சேவல் சண்டை,லாட்டரி சீட்டு,கஞ்சா , பான் மசாலா, குட்கா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்பனையை தடுக்கும் வகையில் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் தெரிவித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .
- தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த லாரியால் செல்ல முடியவில்லை.
- போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம் பாளையம்
பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத எந்திரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த லாரியால் செல்ல முடியவில்லை.
இதனால் அந்த வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், லாரிகள், வேன்கள் என அனைத்து வாகனங்களும் பரமத்தி வேலூர் வரை காவிரி ஆற்றுப்பாலத்தில் அணிவகுத்து நீண்ட நேரம் நின்றன.
இதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாமலும் ,அதே போல் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு நோயாளிகள் அவதிப்பட்டினர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த லாரி மெதுவாக நகர்ந்து சென்றது.இதனால் அந்த லாரியை முந்தி செல்ல முடியாமல் தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் சென்றன.இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே சிலர் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பெரிய ரெங்கம்பாளையம் பிரகாஷ் என்பவரது வீட்டின் அருகே சென்று பார்த்தபோது அங்கே 4 பேர் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் அங்கு சென்று சுற்றிவளைத்த போது ஒருவர் மட்டும் பிடித்துக் கொண்டார். மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.200 பணத்தை பறிமுதல் செய்து ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது30) என்பவரை கைது செய்து தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன்( 25 ), கத்தி பாளையம் பகுதியைச் சேர்ந்த மலையப்பன்( 26 ), புன்னம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கவின் (27) ஆகியோரை தேடி வருகின்றனர்.
- தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில்குகைவழிப்பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
- தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் வழியாக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்டர் மீடியாவை இடித்து அந்த வழியாக அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள் ,லாரிகள் , கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதன் காரணமாக தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்டர் மீடியா உடைக்கப்பட்டு அந்த வழியாக சென்ற பாதை அனைத்தும் நெடுகிலும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்து விட்டனர். அதனால் அந்த வழியாக எந்த வாகனமும் , பொதுமக்களும் செல்ல முடியாது .அதே போல் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் அந்த வழியாக நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .இதனால் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று மீண்டும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், அக்ரஹாரம், கட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமச் சேர்ந்த பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர். அதன் காரணமாக தவுட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குகை வழி பாதை அமைத்து தருமாறு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியதில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர் .ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எதையும் கண்டு கொள்ளவில்லை. எனவே விரைந்து தவிட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குகைவழிப்பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கடையில் ஆய்வு செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா,குட்கா போன்றவை விற்பனை செய்து வருவது தெரியவந்தது . அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த புகழூர் 4 ரோடு பகுதியை சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் மீதும், அதேபோல் தளவா பாளையம் பகுதியில் விற்பனை செய்த கார்த்திக் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






