என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா விற்பனை செய்த 14 பேர் கைது
    X

    குட்கா விற்பனை செய்த 14 பேர் கைது

    • தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர்
    • குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

    கரூர் மாவட்டம் வெங்கமேடு, தாந்தோணிமலை, வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, தென்னிலை, மாயனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மளிகைக்கடை, பெட்டிக் கடை, டீக்கடைகளில் மறைத்து வைத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 14 பேர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

    Next Story
    ×