என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே சிலர் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பெரிய ரெங்கம்பாளையம் பிரகாஷ் என்பவரது வீட்டின் அருகே சென்று பார்த்தபோது அங்கே 4 பேர் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் அங்கு சென்று சுற்றிவளைத்த போது ஒருவர் மட்டும் பிடித்துக் கொண்டார். மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.200 பணத்தை பறிமுதல் செய்து ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது30) என்பவரை கைது செய்து தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன்( 25 ), கத்தி பாளையம் பகுதியைச் சேர்ந்த மலையப்பன்( 26 ), புன்னம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கவின் (27) ஆகியோரை தேடி வருகின்றனர்.






