என் மலர்
கரூர்
- குளித்தலையில் தூய்மை பாரத இயக்க சமுதாய சுகாதார வளாகம் திறக்கப்பட்டது
- மாணிக்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பரளி 8-வது வார்டு பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக ரூ 5 லட்சத்து 25 ஆயிரத்தில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறையை மாணிக்கம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார், விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், ராஜேந்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினவள்ளி சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா பூபதி, துணை தலைவர் வசந்தி பூமிநாதன், தொழிலதிபர் வாளாந்தூர் பழனிச்சாமி , குளித்தலை நகர துணைச் செயலாளர் செந்தில்குமார், பரளி குமார், செந்தில் வேலன், மேட்டு மருதூர் ஆறு பாஸ்கர், ராமசாமி, பன்றி மருதை, பூமிநாதன், சின்னதுரை, பரளி முருகானந்தம், மணிகண்டன், மற்றும் ராஜேந்திரன் ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கோவை, புதுாரை சேர்ந்தவர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர்,
கோவை, புதுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 73). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினியர்.
இவரது மகன் ஜெயராமன் (37). இவர் தனது மோட்டார் சைக்கிளில்,கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, தண்ணீர்பள்ளி, சாந்திவனம் தனியார் பள்ளி அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி சென்ற சரக்கு லாரி, பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். குளித்தலை போலீசார், லாரி டிரைவர், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த பழைய அப்பனேரியை சேர்ந்த ராஜி (52), என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், நத்தமேடு பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம்,நன்செய் புகளூர், பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரிவெற்றிலை போன்ற வெற்றிலைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, கரூர் ,நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் ஒரு சுமை ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் ஒரு சுமை ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ஒரு சுமை ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது. தற்போது வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் ஒரு சுமை ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் ஒரு சுமை ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ஒரு சுமை ரூ.ஆயிரத்து 200- க்கும் விற்பனையானது. வெற்றிலை வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- கரூர் மின்னாம்பள்ளி குளக்கரை வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கரூர்
கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, மின்னாம்பள்ளி கிராமத்தில் கொங்கு வெள்ளாள விளையன் குல மக்களின் குலதெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற குளக்கரை வன்னியம்மன் கோவில் உள்ளது.
இங்கு விநாயகர், கருப்பண்ண சுவாமி, மதுரை வீரன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை யாகசாலையில் வைத்து புனித நீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் வன்னியம்மன் கோவில் கோபுர கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் உற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,201 பேர் கலந்து கொண்ட கொங்கு ஒயிலாட்டம், ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி பெருஞ்சலங்கை ஆட்டம், உருமியாட்டம் போன்றவை நடந்தது.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என ஒரே வண்ணத்தில் ஆன பாரம்பரிய உடை அணிந்து புதிய உலக சாதனை படைத்தன.ர் அதற்காக டிஸ்கவர் வேல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- அரவக்குறிச்சி அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சம் பறிமுதல்
- லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
கரூர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள 20 ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நிலங்கள் பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென்று சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் முன் வாயில் கதவை அடைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் சார்பதிவாளர் சக்திவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளே இருந்தனர்.
இந்த சோதனையில் கக்கில் வராத ரூ.1.17 லட்சம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், பத்திர எழுத்தர்கள் உள்ளிடோரிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட ரூ. 1,17,500 க்கு சரியான விளக்கம் அளிக்காததால் சார்பதிவாளர் சக்திவேலை கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகம் படி அறிவுறுத்திச் சென்றனர்.
தீபாவளி பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், அரவக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டம்
- மேலாளர் திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது
கரூர்,
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள பாண்டிலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட கூட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சின்னதாராபுரம் வட்டார கள மேலாளர் திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
சங்கத்தி ல் உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து கடன்களும் உறுப்பினர்களின் தேவைக்கேற்ப சங்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டை நகல் மற்றும் உறுப்பினர்கள் எவரும் இறந்திருந்தால் அவருடைய வாரிசுகள் இறப்பு சான்றிதழை ஆகியவற்றை சங்கத்தில் நேரில் வந்து ஒப்படைக்க வேண்டும்.
நபார்டு வங்கியும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு மத்திய வங்கியும் இணைந்து நிதி சார் கல்வி திட்டத்தின்படி சங்கத்தின் மூலம் வழங்கப்படும் கடன்களை பெற்று சங்க உறுப்பினர்கள் பயன்பெற வேண்டும் என்று அவர் பேசினார்.
சங்க செயலாளர் மணி சங்கத்தில் உறுப்பினர்கள் கடன் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் சங்கத்திற்கு வழங்கவேண்டும்,சங்க விவகார எல்லையில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சங்கத்தில் வந்து உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளவேண்டும்என்று பேசினார்.
கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் சிவானந்தம் வரவேற்புரை ஆற்றினார். சங்க பணியாளர் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் செய்திருந்தது.
கரூர்,
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங் களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்தி றன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடு களின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட் டங்களை ஒருங்கிணைக்கும் நோக்கோடு கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.
அந்தவகையில் 2023-24-ம் கல்வியாண்டில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்ற மாவட்ட அள விலான கலை திருவிழா போட்டியில் 4,149 மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனம், ஓவியம் மற்றும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து போட்டி களை தொடங்கிவைத்து பேசினார்.
அப்போதுஅவர் தெரிவித்ததாவது:-
மாவட்டத்தில் உள்ள, 279 அரசு, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும், 46,193 மாவட்ட மாணவர்களில் அளவிலான கலை திருவிழா போட்டி களில், 4,149 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் நடை பெறும் போட்டியில், முதல் இடம் பெறும் மாணவர்கள், மாநில அளவில் நடை பெறும் போட்டிகளில் கலந்து கொள்வர். மேலும், மாநில அளவிலான போட் டிகளில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளனர்.
கலைத்திருவிழா போட்டிகளை, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும். அப் போதுதான் மாணவர்களின் திறமை களை நன்கு அறிய உதவும் என்றார்.
நிகழ்ச்சியில், எம். எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மணிவண்ணன், கரூர் ஆர். டி.ஓ. ரூபினா உள்பட பலர் பங்கேற்றனர்.
- க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரத்தில் கள் விற்ற முதியவர் கைது
- பழனிச்சாமி (வயது 60) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர்,
க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் சுற்றுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி கள் இறக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த தும்பிவாடி ஊராட்சி வெள் ளரிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 60) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- க.பரமத்தியை சேர்ந்தவர் வாகன விபத்தில் வாலிபர் பலி
- இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கொளந்தாபாளையம் பகுதியில் சென்ற போது எதிரே புகழூர் தாலூக்கா குளத்து பாளையத்தை சேர்ந்த குப்புசாமி (77). வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சுரேஷை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். குப்புசாமி சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
கரூர் மாவட்டம் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பள்ளி அளவில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணிக்கையில் இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்ட 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பள்ளித் தாளாளர் மோகனரங்கன் தலைமையில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினரும், லயோலா கல்லூரி இயற்பியல் பேராசிரியருமான அறிவியல் கல்வியாளர் ஜோசப் சிறப்புரையாற்றினார்.
பரணி பார்க் கல்விக் குழுமச் செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், கரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயலாளர் ஜான் பாட்சா, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பிரேம்குமார் முன்னிலை வகித்தனர்.
மொத்தம் 1186 அறிவியல் ஆய்வுகளை 152 வழிகாட்டி ஆசிரியர்கள் உதவியுடன் 2372 குழந்தை விஞ்ஞானிகள் இன்றைய அறிவியல் அமர்வுகளில் சமர்ப்பித்தனர். அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பிரபல அறிவியலாளர்கள் பெயரிலான 71 அறிவியல் அரங்குகளில் இணை அமர்வுகளாக நடைபெற்ற இப்பிரம்மாண்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானிகளின் அறிவியல் ஆய்வுகளை 142 பயிற்சி பெற்ற நடுவர்கள் மதிப்பிட்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் கரூர் மாவட்ட செயலாளரும் தமிழக முன்னோடி கல்வியாளருமான முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் தலைமையில் பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் முதல்வர் சேகர் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 17-வது ஆண்டாக சிறப்பான பயிற்சியளித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
ஏற்கனவே பரணி கல்விக் குழும இளம் விஞ்ஞானிகள் பல்வேறு தேசிய அளவிலான அறிவியல் மாநாடுகளில் தமிழகம் சார்பாக ஆறு முறையும், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் நிகழ்வுகளில் இந்தியா சார்பாக இரண்டு முறையும், மாநில அறிவியல் மாநாடுகளில் கரூர் மாவட்டம் சார்பாக தொடர்ந்து பதினேழு முறையும் சிறப்பாகப் பங்கு பெற்று கரூர் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர்,
இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் தலைமையில் கரூர் கடைவீதி அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மாருதி, துணைத் தலைவர் யோகராஜ், மாநில மகளிர் அணி தலைவி நகோமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின், இஸ்ரேலில் யூதர்கள் போரினால் அநியாயமாக கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த கொடூர போர் தாக்குதல் சம்பவத்திற்கு மறைமுகமாக இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் எதிர்வரும் அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை கிறிஸ்தவ மக்கள் புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்வார்கள் .
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதை வரவேற்கிறோம். பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
கரூர்,
கருர் ஸ்ரீ சாராதா நிகேதன் மகளிர் கல்லூரி யில் கொலு விழா நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு புராண இதிகாச கருத்தை விளக்கும் வகையில் கொலு பொம்மைகள் வைக்கப்படும் அதே போல் இந்த வருடம் மகாபாரதத்தை உட்கருவாக கொண்டு அமைக்கப்பட்டது. கொலுவில் மஹாபாரதம் நிகழ்வுகள், மஹாபாரத்தில் உள்ள அறிவியல், போர் வியூகம், போரில் பயன்படுத்தப்பட்ட அக்ரோணிகளின் எண்ணிக்கை மேலும் பகவத்கீதையின் கருத்து க்கள் போன்றவை கொலு வில் இடம் பெற்றன.
சைவ, வைணவ, தெய்வீ கக் கதைகளை மையமாக கொண்ட கொலு பொம்மை கள் ஒன்பது படிகளில் வைக்கப்பட்டது.
வியாசர் சொல்ல விநாயகர் உருவம் மகாபாரதத்தை எழுதுவ தைப் போல ரங்கோலியில் வரையப்பட்டது.
மேலும் 17 சக்தி பூஜை நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிர மணியம் இப்பூஜையில் கலந்து கொண்டு மஹா பாரத்தில் திரௌபதியின் தைரியத்தையும் எடுத்து கூறினார்.
கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.






