வாகன விபத்தில் வாலிபர் பலி

க.பரமத்தியை சேர்ந்தவர் வாகன விபத்தில் வாலிபர் பலிஇதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன விபத்தில் வாலிபர் பலி
Published on

கரூர்,  

கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கொளந்தாபாளையம் பகுதியில் சென்ற போது எதிரே புகழூர் தாலூக்கா குளத்து பாளையத்தை சேர்ந்த குப்புசாமி (77). வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சுரேஷை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். குப்புசாமி சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com