என் மலர்
கரூர்
- சந்தேகத்திற்கு இடமான மூன்று பேர் போலீசை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் வேமோக சென்றனர்.
- அவர்களை சோதனையிட்ட போது கத்தி போன்ற பயங்கர ஆயுதம் வைத்திருந்தது தெரிய வந்தது
கரூர்
கரூர் அருகே பசுபதிபாளையம் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது, சந்தேகத்திற்கு இடமான மூன்று பேர் போலீசை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் வேமோக சென்றனர். சந்தேமேடைந்த போலீசார் அவர்களை விரட்ட தொடங்கினர். அப்போது, மூன்று பேரும் கரூரில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி நோக்கி வேமோக சென்றனர். அரவக்குறிச்சி போலீசுக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்களை பின் தொடர்ந்து ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் சென்றனர். அரவக்குறிச்சி அருகே நாமே்பள்ளி பிரிவு அருகே, அரவக்குறிச்சி போலீசார் மூன்று பேர் வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர். அவர்களை சோதனையிட்ட போது கத்தி போன்ற பயங்கர ஆயுதம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ரவி (வயது 20), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (26), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தாலிக்ராஜ் (28) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் செயின் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு என பல குற்றங்களில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த கரூர் நகர போலீசார் அவரிகளிடம் இருந்த கத்தி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
- குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டில் தனியாக இருந்தபோது விட்டதில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி காலனியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் செந்தில்(வயது 40). இவர் புகழூர் நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி (35). இவர்களது மகள் ஜனனி (15), மகன் சரத் (12). இவர்கள் இருவரும் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் செந்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது விட்டதில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்று வீட்டுக்கு வந்த அவரது மனைவி சுமதி தனது கணவர் விட்டதில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி உள்ளார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்மே்பக்கத்தினர் செந்திலைமீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்திலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்தில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெரக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
- முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
- மணல் அள்ளப்பட்டதற்கான தெளிவான அளவினை காண்பிக்கும் என்கின்றனர்,
கரூர்:
கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் புதூர் ஆகிய 2 இடங்களில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த மணல் குவாரிகளை புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆதியோர் ஓப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 12-ந் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த 2 குவாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மணல் குவாரி என 3 குவாரிகளில் 2 நாட்கள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி மீண்டும் 2-வது முறையாக மணல் திடங்கு, மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து, காவிரி ஆற்றினுள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக மணல் அள்ளப்பட்டதா என அளவீடு செய்தனர்.
பின்னர் 3-வது முறையாக 18-ந்தேதியும், 4-வது முறையாக கடந்த 20-ந்தேதியும் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளப்பட்ட இடத்தை, ஜிட்டல் சர்வே எந்திரங்களைக் கொண்டும், ட்ரோன் கேமரா மூலமாகவும் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த பல்வேறு கட்ட சோதனைகளில் போலி ரசீதுகள், போலி கியூ ஆர் குறியீடுகள் உள்ளிட்டமுக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. மேலும் கம்ப்யூட்டர்களில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள், ஹார்டு டிஸ்க் போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டது.
இதனிடையே இந்த குவாரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் அள்ளப்பட்ட மணல், விற்கப்பட்ட மணல் போன்ற விவரங்களை செயற்கைகோள் உதவியுடன் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இதற்காக இஸ்ரோ, கான்பூர் ஐ.ஐ.டி. உதவியுடன் செயற்கைகோள் படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது.
இவை மணல் அள்ளப்பட்டதற்கான தெளிவான அளவினை காண்பிக்கும் என்கின்றனர். அதிகாரிகள். டிஜிட்டல் சர்வே முறையில் மணல் அள்ளப்பட்டது அளவீடு செய்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
- கரூர் மணல் குவாரிகளில் மண் எடுக்கப்பட்ட விவரம் குறித்து செயற்கைகோள் மூலம் ஆய்வு நடைபெற உள்ளது
- இஸ்ரோ, ஐ.ஐ.டி. உதவியுடன் ஆய்வு நடத்த அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை
கரூர்,
கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் புதூர் ஆகிய 2 இடங்களில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த மணல் குவாரிகளை புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆதியோர் ஓப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 12-ந் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த 2 குவாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மணல் குவாரி என 3 குவாரிகளில் 2 நாட்கள்சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி மீண்டும் 2-வது முறையாக மணல் இதிடங்கு, மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து, காவிரி ஆற்றினுள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக மணல் அள்ளப்பட்டதா என அளவீடு செய்தனர்.பின்னர் 3-வது முறையாக 18-ந்தேதியும், 4-வது முறையாக கடந்த 20-ந்தேதியும் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளப்பட்ட இடத்தை, புஜிட்டல் சர்வே எந்திரங்களைக்
கொண்டும், ட்ரோன் கேமரா மூலமாகவும் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டனர்.இந்த பல்வேறு கட்ட சோதனைகளில் போலி ரசீதுகள், போலி கியூ ஆர் குறியீடுகள் உள்ளிட்டமுக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. மேலும் கம்ப்யூட்டர்களில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள், ஹார்டு டிஸ்க் போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டது.இதனிடையே இந்த குவாரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் அள்ளப்பட்ட மணல், விற்கப்பட்ட மணல் போன்ற விவரங்களை செயற்கைகோள் உதவியுடன் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இதற்காக இஸ்ரோ, கான்பூர் ஐ.ஐ.டி. உதவியுடன் செயற்கைகோள் படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது.இவை மணல் அள்ளப்பட்டதற்கான தெளிவான அளவினை காண்பிக்கும் என்கின்றனர் அதிகாரிகள். டிஜிட்டல் சர்வே முறையில் மணல் அள்ளப்பட்டது அளவீடு செய்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
- கரூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் கொத்தடிமைகள் - வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து திடீர் ஆய்வு
- கொத்தடிமை தொழிலாளர் முறை பற்றிய புகார்களை தெரிவிக்க அழைப்பு
கரூர்,
கரூர் மாவட்டம் சணப் பிரட்டி, புலியூர் மற்றும் ஓடமுடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் கொத்தடிமைகள் குறித்து திடீர் ஆய்வு நடைபெற்றது. கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் தலைமையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்கக துணை இயக்குநர் பூவிதா, குளித்தலை ஆர்டிஓ அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் துரை, கரூர் எஸ்எஸ்ஐ ராஜேஸ்வரி, உதவி ஆய்வாளர்கள் சரவணக்குமரன், குமரக்கண்ணன் மற்றும் குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
அந்த கூட்டாய்வில், கொத்தடிமை தொழிலாளர்கள் எவரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என தெரியவந்தது. மேலும், ஆய்வின் போது, வெளி மாநில தொழிலாளர்களின் முழு விபரங்களைப் வலைதளத் தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வெளிமாநில தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை பற்றிய புகார்களை தெரிவிக்க 1800 4252650 என்ற எண்ணிலோ அல்லது சுருக்க கோடு எண்ணான 155214 என்ற எண் ணிலோ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
- கரூர் பஸ்ஸ்டாண்டில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
- சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர்,
கரூர் மாநகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், பழநி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வெளியூர் பஸ்களும், அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், வாங்கல், தென்னிலை, சோமூர், குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
கொசுவலை, பஸ்பாடி போன்ற முக்கிய தொழில்களை கொண்ட பகுதியாக கரூர் விளங்கி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்காகவும், மற்ற பணிகளுக்காகவும் கரூர் வந்து செல்கின்றனர். மேலும், கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள், வெளியூர்களுக்கு சென்று திரும்பி வருகின்றனர்.
இந்த கரூர் பஸ்ஸ்டாண்டின் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பஸ்களை ஓட்டி செல்ல டிரைவர்கள், படாத பாடு பட வேண்டி உள்ளது. குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் சாலைகளை சீரமைத்து, பஸ்கள் எளிதாக வந்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- கரூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் லேப்டாப் பறித்தவர் கைது செய்யப்பட்டார்
- பொதுமக்கள் மடக்கி பிடித்து டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூர்,
திருப்பூர் மாவட்டம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா (வயது 29). இவர், கரூர் வந்து விட்டு, திரும்பவும் திருப்பூர் செல்வதற்காக பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது, அவர் அருகே வந்த அடை யாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென கிறிஸ்டினா வைத்திருந்த லேப்டாப்பை பறித்துக் கொண்டு, பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். இதனை பார்த்த கிறிஸ்டினா சத்தம் போடவும், பஸ்சில் இருந்த பொதுமக்கள், நபரை மடக்கி பிடித்து டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். டவுன் போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியை சேர்ந்த பூபாலகிருஷ்ணன் ( 28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நபரிடம் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார், பூபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கரூர் ரெங்கம்பாளையம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 5 பேர் கைது
- வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், அங்கு வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் நந்தகோபால் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மது விற்பனை செய்து கொண்டிருந்த பிரகாஷ் (வயது 35), புன்னம் சத்திரம் பகுதியில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட பெரியரெங்கம்பாளையம் திருமூர்த்தி மனைவி வசந்தா(64), வளர்மதி (52), மலைக் காவலர் தெருவில் மது விற்பனை செய்த குமரேசன் என்கிற மதுரைவீரன்(41), புகழிமலை எதிரே உள்ள கார் ஸ்டாண்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்த ராஜாக்கண்ணு (62) ஆகிய 5 பேர் பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- நொய்யல் பகுதிகளில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
- விவசாயிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்து ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தினர்
கரூர்,
கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நொய்யல் அருகே மரவாபாளையம்,காந்தி நகர், சேமங்கி,முத்தனூர்,கவுண்டன் புதூர், வடிவேல் நகர்,செட்டிதோட்டம்,செல்வநகர்,வெள்ளக்கல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
முகாமில் நொய்யல் கால்நடை மருந்தக மருத்துவர் உஷா தலைமையில் 4 கால்நடை ஆய்வாளர்கள், 4 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு முகாமிற்கு கொண்டுவரப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்து ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றனர்.
- வேலாயுதம் பாளையத்தில் மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது
- நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பஙகேற்பு
கரூர்,
மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டிகள் புகழூர் நகராட்சி அரசு காந்தியார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு மல்யுத்த போட்டியைத் தொடங்கி வைத்தார்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற மல்யுத்த போட்டியில் நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு வகையான போட்டிகளில் விளையாடினார்கள். மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புகழூர் நகராட்சி கவுன்சிலர்கள் நவீன், நந்தினி, தலைமை ஆசிரியை தமிழரசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மல்யுத்த போட்டி நடுவர்கள், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- குளித்தலை அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த முகாமில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை கலைஞர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 நபர்களுக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை வழங்கி வேலைவாய்ப்பு முகாம் குறித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் கரூர் எம்.பி. ஜோதிமணி, குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கலைஞர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சூரியனூர் சந்திரன், பொய்யாமணி தியாகராஜன், புழுதேரி அண்ணாதுரை, கரூர் மாவட்ட அரசு துறை அதிகாரிகள்
மற்றும் குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, விஜயகுமார், குளித்தலை நகராட்சி ஆணையர் நந்தகுமார், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு அதிக அளவு பணியாளர்களை நியமனம் செய்து கொண்டனர், விழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
- பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது தி.மு.க என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
- தோகைமலை கிழக்கு ஒன்றிய பகுதியான காவல்காரன் பட்டியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேச்சு
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோகைமலை கிழக்கு ஒன்றிய பகுதியான காவல்காரன் பட்டியில் அ.தி.மு.க. 52 -ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இரண்டரை ஆண்டுகள் முடிந்த பிறகு ஒரு கோடி பேருக்கு உரிமை தொகை வழங்குகிறார்கள். இதில் 40 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்டவைகளை நிறுத்தி உள்ளது.
தொடர்ந்து மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஊரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது தி.மு.க. நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என்று கூறி அதை நிறைவேற்றாமல் விடியாஅரசு ஆட்சி உள்ளது. மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் 4 முதல்வராக செயல்படுகிறார்கள்.
இந்தியாவிலேயே வாரிசு அரசியல் நடத்தும் கட்சி தி.மு.க.தான்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வக்கீல் மருதூர் திருநாவுக்கரசு, கரூர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் தர்மேந்திரன், கரூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பொருந்தலூர் ராமச்சந்திரன், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம், குளித்தலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாகரன்,
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் இளங்குமரன், குளித்தலை நகரச் செயலாளர் இன்ஜினியர் மணிகண்டன், தோகைமலை இளைஞர் அணி வழக்கறிஞர் பிரபு, வெங்கடாசலம் இளைஞர் அணி தோகைமலை, ஒன்றிய அவைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கருப்பையா, கோவிந்தராஜ் ஒன்றிய பொருளாளர், கேசவன் ஒன்றிய இணைச் செயலாளர், கவிதா சத்தியமூர்த்தி ஒன்றிய துணைச் செயலாளர்கள் வசந்தா ராஜேந்திரன் மாவட்ட பிரதிநிதி செல்வி, சாமிநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் கலைராஜ் மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர முக்கிய நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,






