என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டும் குழியுமாக உள்ள சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
    X

    குண்டும் குழியுமாக உள்ள சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

    • கரூர் பஸ்ஸ்டாண்டில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
    • சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    கரூர்,

    கரூர் மாநகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், பழநி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வெளியூர் பஸ்களும், அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், வாங்கல், தென்னிலை, சோமூர், குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    கொசுவலை, பஸ்பாடி போன்ற முக்கிய தொழில்களை கொண்ட பகுதியாக கரூர் விளங்கி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்காகவும், மற்ற பணிகளுக்காகவும் கரூர் வந்து செல்கின்றனர். மேலும், கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள், வெளியூர்களுக்கு சென்று திரும்பி வருகின்றனர்.

    இந்த கரூர் பஸ்ஸ்டாண்டின் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பஸ்களை ஓட்டி செல்ல டிரைவர்கள், படாத பாடு பட வேண்டி உள்ளது. குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் சாலைகளை சீரமைத்து, பஸ்கள் எளிதாக வந்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×