என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகழூர் நகராட்சி துப்புரவு பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை
- குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டில் தனியாக இருந்தபோது விட்டதில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி காலனியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் செந்தில்(வயது 40). இவர் புகழூர் நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி (35). இவர்களது மகள் ஜனனி (15), மகன் சரத் (12). இவர்கள் இருவரும் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் செந்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது விட்டதில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்று வீட்டுக்கு வந்த அவரது மனைவி சுமதி தனது கணவர் விட்டதில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி உள்ளார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்மே்பக்கத்தினர் செந்திலைமீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்திலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்தில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெரக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.






