என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொய்யான வாக்குறுதிகளை கூறி  ஆட்சியை பிடித்தது தி.மு.க - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
    X

    பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது தி.மு.க - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    • பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது தி.மு.க என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
    • தோகைமலை கிழக்கு ஒன்றிய பகுதியான காவல்காரன் பட்டியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேச்சு

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோகைமலை கிழக்கு ஒன்றிய பகுதியான காவல்காரன் பட்டியில் அ.தி.மு.க. 52 -ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இரண்டரை ஆண்டுகள் முடிந்த பிறகு ஒரு கோடி பேருக்கு உரிமை தொகை வழங்குகிறார்கள். இதில் 40 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்டவைகளை நிறுத்தி உள்ளது.

    தொடர்ந்து மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஊரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது தி.மு.க. நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என்று கூறி அதை நிறைவேற்றாமல் விடியாஅரசு ஆட்சி உள்ளது. மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் 4 முதல்வராக செயல்படுகிறார்கள்.

    இந்தியாவிலேயே வாரிசு அரசியல் நடத்தும் கட்சி தி.மு.க.தான்.

    இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வக்கீல் மருதூர் திருநாவுக்கரசு, கரூர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் தர்மேந்திரன், கரூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பொருந்தலூர் ராமச்சந்திரன், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம், குளித்தலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாகரன்,

    கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் இளங்குமரன், குளித்தலை நகரச் செயலாளர் இன்ஜினியர் மணிகண்டன், தோகைமலை இளைஞர் அணி வழக்கறிஞர் பிரபு, வெங்கடாசலம் இளைஞர் அணி தோகைமலை, ஒன்றிய அவைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கருப்பையா, கோவிந்தராஜ் ஒன்றிய பொருளாளர், கேசவன் ஒன்றிய இணைச் செயலாளர், கவிதா சத்தியமூர்த்தி ஒன்றிய துணைச் செயலாளர்கள் வசந்தா ராஜேந்திரன் மாவட்ட பிரதிநிதி செல்வி, சாமிநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் கலைராஜ் மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர முக்கிய நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

    Next Story
    ×