என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- குளித்தலை அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த முகாமில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை கலைஞர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 நபர்களுக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை வழங்கி வேலைவாய்ப்பு முகாம் குறித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் கரூர் எம்.பி. ஜோதிமணி, குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கலைஞர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சூரியனூர் சந்திரன், பொய்யாமணி தியாகராஜன், புழுதேரி அண்ணாதுரை, கரூர் மாவட்ட அரசு துறை அதிகாரிகள்
மற்றும் குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, விஜயகுமார், குளித்தலை நகராட்சி ஆணையர் நந்தகுமார், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு அதிக அளவு பணியாளர்களை நியமனம் செய்து கொண்டனர், விழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.






