அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
Published on

வேலாயுதம் பாளையம்

கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள அஷ்டாதச புஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி, சரஸ்வதிக்கு விஜயதசமியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அஷ்டாதச புஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி, சரஸ்வதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.வாழ்வில் மாணவச் செல்வங்கள் எல்லா நலமும், வளமும் பெற்று வாழவும் , நன்றாக படிக்கவும் பிராத்தனை செய்யப்பட்டது.

அதேபோல் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com