search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் செல்வோரை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்க கோரிக்கை
    X

    சாலையில் செல்வோரை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்க கோரிக்கை

    • கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்க வேண்டும்.
    • போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் திருட்டு குற்றங்களை கண்டுபிடிக்கும் வகையில் தரமான கேமரா அமைப்பது குறித்து ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபார கடைகள், நிதி நிறுவனங்கள் அதே போல் அனைத்து வீடுகளிலும் திருட்டை தடுக்கும் வகையில் தரமான கேமரா வைக்க வேண்டும் . பல்வேறு வியாபார கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்க வேண்டும். பெரும்பாலான கடைகளில் கல்லாப்பெட்டியை குறிவைத்தே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் பெரும்பாலான கடைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் செயல்பட்டும் பதிவு ஆகாத நிலையில் உள்ளது. சாலையில் செல்வோரை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும் வகையில் எவரேனும் நின்று கொண்டிருந்தாலோ, தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தாலோ, எவரேனும் நின்று கொண்டு நோட்டமிட்டாலோ உடனடியாக 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும் .

    மேலும் பொதுமக்கள் குற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 என்ற போன் நம்பரை பயன்படுத்தவும். மேலும் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்டம், சேவல் சண்டை,லாட்டரி சீட்டு,கஞ்சா , பான் மசாலா, குட்கா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்பனையை தடுக்கும் வகையில் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் தெரிவித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .

    Next Story
    ×