அதிகளவு பிரஷர் மாத்திரை சாப்பிட்டவர் சாவு

வேலாயுதம்பாளையம் அருகே அதிகளவு பிரஷர் மாத்திரை சாப்பிட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்தாய் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு
அதிகளவு பிரஷர் மாத்திரை சாப்பிட்டவர் சாவு
Published on

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அருகே அய்யம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). கூலித் தொழி லாளி. இவரது மனைவி அமலா (48).

ராஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் கடந்த 11-ந்தேதி உடல்நிலை சரியாமல் இறந்தார். தாய் இறந்த துக்கத்தில் இருந்து மீளாத ராஜேந்திரன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து ள்ளார். இது குறித்து மனைவி கேட்ட போது அதிகளவு பிரஷர் மாத்திரை களை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, ராஜேந்தி ரனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இருப்பினும் சிகிச்சை பலனின்றிஅவர் உயிர் இழந்தார். இதுகுறித்து அமலா கொடுத்த புகாரின் பேரில், வேலாயுத ம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com