என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிகிச்சை முகாம்
- நஞ்சை புகழூர் ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது
- மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்
வேலாயுதம் பாளையம்,
கரூர் ஒன்றியம், நஞ்சை புகழூர் ஊராட்சியில் கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.மாவட்ட கால்நடை பரா மரிப்புத்துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர், உதவி இயக்குநர் டாக்டர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.கால்நடை உதவி மருத்து வர்கள் கண்ணண், சுதா, கால்நடை ஆய்வாளர்கள் நடராஜன், முத்துக்குமார் மற்றும் கால்நடை பராமரி ப்பு உதவியாளர் மீரா ஆகியோர் கொண்டனர்.கால்நடை பராமரிப்பு குறித்த சிறு கண்காட்சி அமைக்கப்பட்டு ஆலோ சனை வழங்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயி களுக்கு கால்நடை வள ர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்ப ட்டது.முகாமில் நன்செய் புக ளூர் ஊராட்சி மன்ற தலை வர் மதிவாணன் மற்றும் உறுப்பினர்கள், விவசாயி கள் கலந்துகொண்டனர்.






