என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
- வெளியூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்
- வீட்டை பூட்டிவிட்டு தொழிலுக்கு சென்றனர்
- தங்க செயின்,தோடு திருடு போயிருந்தது
கரூர்,
கரூர் மாவட்டம் க.பரமத்தி, ரெங்கநாதபுரம் அருகே பசுமைநகரில் வசிப்பவர் பொன்னுசாமி (வயது 49), வெளியூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி க.பரமத்தி கடைவீதியில் பாக்குதட்டு கடை விற்பனை செய்கிறார். இவர்கள் இருவரும் வழக்கம் போல் காலையில் வீட்டை பூட்டிவிட்டு தொழிலுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது 1 பவுன் தங்க செயின் மற்றும் தோடு 4 செட் ஆகியவை வில்லை திருடு போயிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






