என் மலர்tooltip icon

    கரூர்

    • ரம்ஜான் விற்பனையை எதிர்பார்த்திருந்த நிலையில் கரூர் மணல்மேடு ஆட்டுச்சந்தை களை இழந்துள்ளது
    • குறைவான விற்பனையால் விவசாயிகள் கவலை

    கரூர்:

    கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டு சந்தையில் நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, பழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு கடந்த வாரம் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையான நிலையில், இந்த வாரம் ஆட்டு சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை ஆனதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த வாரம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. ஆனால் இந்த வாரம் சுமார் 10,000 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன.

    ஆடுகளை வாங்க வியாபாரிகள் வராததாலும், ஆடு உரிமையாளர்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.ரம்ஜான் பண்டிகை காலம் என்பதால் ஆட்டுச் சந்தையில் இறைச்சிக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு இறைச்சி ஆடுகள் கூட விற்பனை மந்தமானதால் ஆடுகள் வளர்ப்பு தொழில் செய்து பிளைக்கும் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துடன் கவலையுடன் திரும்பி சென்றனர்.பண்டிகைைய முன்னிட்டு இந்த வாரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடுகள், வியாபாரிகள் வரத்து குறைவானதால் ரூ.50 லட்சத்திற்கும் குறைவான அளவிலான வியாபாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


    • கல்லூரி, கூலி தொழிலாளி மனைவி மாயம்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    லாலாப்பேட்டை அருகே, மேல சிந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். கூலி தொழிலாளி. இவரது மகள் ஹேமலதா (வயது 21), திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹேமலதா, அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து, மகளை கண்டுபிடித்து தருமாறு, அசோக்குமார் லாலாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதேபோல், தோகைமலை அருகே, பாறைப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 41). இந்நிலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் அதன் பிறகு வீட்டுக்கு திரும்பிவரவில்லை. இதுகுறித்து வெள்ளைச்சாமி அளித்த புகாரின் படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, நாகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    • வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
    • பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறுகிறது

    கரூர், ஏப். 19-

    கரூர் அருகே பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 21-ந்தேதி வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து, பயிற்சி மையத்தின் தலைவர் பேராசிரியர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வளர்ப்பு பயிற்சி முகாமில், ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் விவசாயிகள், பயிற்சி முகாம் நடக்கும் 21ம் தேதி காலை, 10:30 மணிக்குள் பயிற்சி மையத்துக்கு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04324-294335, 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • 285 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
    • கலெக்டர் பிரபு சங்கர் தகவல்

    கரூர்,

    ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக(தாட்கோ) திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை கரூர் மாவட்டத்தில், 285 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவியும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 136 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,39 லட்சத்து,98 ஆயிரத்து,067 மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 115 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,17 லட்சத்து,69 ஆயிரத்து,654 மதிப்பிலான கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 34 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.81 லட்சத்து,60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி என மொத்தம் 285 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்கள்.

    500 கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது

    கரூர்,

    வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிடும் வகையில், தமிழகத்தில் மே 31ம் தேதிக்குள் தமிழக அரசு புதிய சட்டம் நிறைவேற்ற கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும் கோரிக்கை மனு பதிவு தபால் அஞ்சலில் அனுப்பும் போராட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் கடை வீதியில் அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ் தலைமையில் திரண்ட பா.ம.க, வன்னியர் சங்கத்தினர் 500 கோரிக்கை மனுக்களை தபாலில் அனுப்பி வைத்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலையப்பசாமி, கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், வன்னியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் பசுபதி, புகலூர் நகரச் செயலாளர் அப்துல் ஹனி, ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ் சந்திரன், கார்முகிலன், சுரேஷ், முனியப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் வாங்கல் சதீஷ், வன்னியர் சங்கத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர் அரங்கம் சதீஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழகன், ஒன்றிய தலைவர் சுரேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர் ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது
    • பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுடன் சான்றிதழ்

    கரூர், 

    கரூர் கிச்சாஸ் சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2 சிலம்பம் ஆடுவது போல் வரையப்பட்ட ஓவியத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர். இதில் தொடர்ந்து 20 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழக தலைவர் புலியூர் வீர திருப்பதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில் கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளியின் முதல்வர் பகலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்சினையில் ஐ.டி.ஐ. மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கணக்கபிள்ளையூரை சேர்ந்தவர் மனோகரன் மகன் குரு பிரகாஷ்(வயது 19). இவர் அய்யர்மலை பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. கணிதம் படித்து வருகிறார். இவரது பெரியப்பா மகன் அதே ஊரைச் சேர்ந்த மோகன் மகன் விக்னேஷ் (16). இவர் வை.புதூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று குருபிரகாஷ் கல்லூரி இறுதி நாள் வகுப்பை முடித்துவிட்டு ஊருக்கு செல்ல அய்யர்மலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். இதற்கிடையே குரு பிரகாசுக்கும், அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கும் கடந்த ஆறு மாத காலமாக காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக அவர்களுக்கிடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தது.

    இதற்கிடையே கல்லூரி மாணவி கீழ குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் என்கிற அருண் (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த குருபிரகாஷ் ஆத்திரம் அடைந்தார். இதுபற்றி அவர் கல்லூரி மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதோடு, கடுமையாக திட்டியுள்ளார். இதனை அந்த மாணவி ஆட்டோ டிரைவர் அருணிடம் தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்ட அருண் கடந்த 14-ந்தேதி குருபிரகாசிடம் எப்படி நீ போன் செய்யலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அருணின் தம்பி சங்கர், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் செல்லதுரை ஆகியோர் கல்லூரிக்கு வந்து, அருணிடம் மன்னிப்பு கேட்க வருமாறு குருபிரகாசை அழைத்துள்ளனர். ஆனால் குருபிரகாஷ் மறுத்துவிட்டார். பின்னர் கல்லூரி வகுப்பு முடிந்து ஊருக்கு செல்வதற்காக அய்யர்மலை பஸ் ஸ்டாப்பில் குரு பிரகாஷ், அவரது பெரியப்பா மகன் விக்னேஷ் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் அருண், கல்லூரி மாணவர் செல்லத்துரை இருவரும் சேர்ந்து குரு பிரகாசை கீழே தள்ளி கையாளும், கம்பாலும் சரமாரியாக தாக்கினர். அதனை தடுக்க வந்த ஐ.டி.ஐ. மாணவர் விக்னேசும் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்தவர்களை அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்னேசை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். காதல் தகராறில் ஐ.டி.ஐ. மாணவரை அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் அருண், கல்லூரி மாணவர்கள் செல்லத்துரை, விஜய், சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் அருண், செல்லத்துரை, சரவணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தலைமறைவான கல்லூரி மாணவர் விஜயை தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்சினையில் ஐ.டி.ஐ. மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நிலஅளவையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டு
    • கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது

    கரூர், ஏப். 18-

    நில அளவை கள அலுவலர்களின் பல்வேறு கட்ட பணி சுமையை கருத்தில் கொள்ளாமல், நில அளவர் முதல் உதவி இயக்குனர் வரையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டி, அதனை கண்டித்து கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மகேந்திரன், கோட்ட தலைவர் தங்கவேல், மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொருளாளர் தமிழர சன் மாநில செயற்குழு உறுப்பினர், மாவட்ட நிர்வாகிகள், உட்கோட்ட நிர்வாகிகள் உள்பட நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையத்தில் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்
    • ரோந்து போலீசார் கைது செய்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், மாயனுாரில், பொதுமக்களுக்கு இடையூறாக, தகாத வார்த்தைகள் பேசிக் கொண்டு திரிந்த டிரைவரை போலீசார் கைது . செய்தனர்.மாயனூரை அடுத்த காட்டூரை சேர்ந் தவர் வினோத் குமார் (வயது 23), டிரைவர். இவர், கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் பொதுமக்களுக்கு 'இடை யூறாக, தகாத வார்த்தைகள் பேசிக் கொண்டு திரிந்துள்ளார்.அப்போது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட மாயனுார் போலீசார், வினோத்குமாரை எச்சரித்தும், அவர் கேட்கவில்லை. இதையடுத்து குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • தென்னிலை அருகே பரிதாபம்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், ஏப். 18-

    தென்னிலை அருகே, கார் மோதிய விபத்தில், விவசாயி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தென்னிலை இடை யக்காரன்பாளையம் பகுதியை சேர்ந் தவர் சுப்பையன் (வயது 65) விவசாயி. இவர், தென்னிலை அருகே, அம்மாப்பட்டி பிரிவு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, கோவையை சேர்ந்த குண ரத்ன தாமஸ் (வயது 43) என்பவர் ஓட்டி சென்ற 'ரெனால்ட்' கார், சுப்பையன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சுப்பையனின் மனைவி விஜயலட்சுமி, கொடுத்த புகாரின் படி, தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • தடுமாறி ஆற்றில் விழுந்தவர் பலியானார்
    • லாலாப்பேட்டை போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் குளித்த போது, தடுமாறி விழுந்த சிவனடியார் உயிரிழந்தார்.வேலுார் மாவட்டம், காட்பாடி வட்டம், சின்னவெண்ணமலை, சன்னதி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). சிவனடியாரான இவர், நேற்று மாலை, கரூர் மாவட்டம், லாலாப் பேட்டை காவிரி ஆற்றில் குளித்து விட்டு கரை ஏற முயன்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக, தடுமாறி ஆற்றில் விழுந்தார். அங்கி ருந்தவர்கள், சென்று பார்த்தபோது, கோவிந்தன் உயிரிழந்தது தெரியவந் தது. லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்
    • 99 மதுபாட்டில்கள் பறிமுதல்

    கரூர், ஏப். 18-

    கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர் அழகுராம் உள்ளிட்ட போலீசார், கரூர் டவுன், தோகைமலை, குளித்தலை ஆகிய பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்றதாக ரவிக்குமார் (வயது 39), கார்த்திக் (35), ரமேஷ் (33), ராஜா (34), பாலு (62) ஆகிய, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 99 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×