search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரம்ஜான் விற்பனையை எதிர்பார்த்திருந்த நிலையில் களை இழந்த கரூர் மணல்மேடு ஆட்டுச்சந்தை
    X

    ரம்ஜான் விற்பனையை எதிர்பார்த்திருந்த நிலையில் களை இழந்த கரூர் மணல்மேடு ஆட்டுச்சந்தை

    • ரம்ஜான் விற்பனையை எதிர்பார்த்திருந்த நிலையில் கரூர் மணல்மேடு ஆட்டுச்சந்தை களை இழந்துள்ளது
    • குறைவான விற்பனையால் விவசாயிகள் கவலை

    கரூர்:

    கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டு சந்தையில் நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, பழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு கடந்த வாரம் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையான நிலையில், இந்த வாரம் ஆட்டு சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை ஆனதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த வாரம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. ஆனால் இந்த வாரம் சுமார் 10,000 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன.

    ஆடுகளை வாங்க வியாபாரிகள் வராததாலும், ஆடு உரிமையாளர்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.ரம்ஜான் பண்டிகை காலம் என்பதால் ஆட்டுச் சந்தையில் இறைச்சிக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு இறைச்சி ஆடுகள் கூட விற்பனை மந்தமானதால் ஆடுகள் வளர்ப்பு தொழில் செய்து பிளைக்கும் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துடன் கவலையுடன் திரும்பி சென்றனர்.பண்டிகைைய முன்னிட்டு இந்த வாரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடுகள், வியாபாரிகள் வரத்து குறைவானதால் ரூ.50 லட்சத்திற்கும் குறைவான அளவிலான வியாபாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×