என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மாலை 6 மணிக்கு கொடி யேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது

    நாகர்கோவில் :

    கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா நாளை (24-ந்தேதி) பேராலய 11 நாள் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. நாளை காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு இறை மக்களும், 8 மணி திருப்பலியை அருகு விளை பங்கு இறை மக்களும் நிறைவேற்று கிறார்கள். மாலை 6 மணிக்கு கொடி யேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜான் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியை குமரி மாவட்ட போலீஸ் துறையினர் சிறப்பிக்கிறார்கள்.

    3-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறு கிறது. 9-ம் நாள் திருவிழா வான டிசம்பர் மாதம் 2-ந்தேதியன்று மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலை மையில் நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 10-வது நாளான 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற் கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 11-ம் நாள் திருவிழாவான 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேர்ப் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர யும் நடக் கிறது.

    8-ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்வும், புனித இஞ்ஞாசி யார், புனித சவேரியார், புனித தேவசகாயம் ஆகி யோரின் திருப்பண் பவனி, திருப்பண்டம் முத்தம் செய்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். தொ டர்ந்து அன்பின் விருந்து நடக்கிறது.

    திருவிழா எற்பாடுகளை பங்கு தந்தை பஸ்காலிஸ், உதவி பங்கு தந்தை ஜெனிஷ் கவின், கோட்டார் பங்குப்பே ரவை துணை தலைவர் ஜேசு ராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொரு ளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
    • பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு, வாரிசு, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட ஆளூர் சமூக நலக்கூடத்தில் மக்களு டன் முதல்வர் முகாம் நடைபெற்றது. பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 1,2,3 வட்டங்கள் அடங்கிய ஆளூர் பகுதியில் நடை பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான அரங்குகள் ஒதுக்கப்பட் டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் அனைத்து துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் உள்ளிட்டவைகளை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கிய தோடு, தங்களுக்கு தேவை யான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் அலுவ லர்களிடம் கேட்டறிந்தனர்.

    முகாமில் எரிசக்தித்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கம்பங்கள் மாற்றம் குறித்த சேவைகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறையில் கட்டு மான வரைபட ஒப்பு தல், சொத்து வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வழங்குதல், தண்ணீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறையின்கீழ் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு, வாரிசு, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்.

    காவல் துறையின் கீழ் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக, நில அபகரிப்பு, மோசடி, வரதட்சணை மற்றும் இதர புகார்கள், போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள் அளிக்கவும், மாற்றுத்திற னாளிகள் துறையில் பராமரிப்பு உதவித் தொகை, மாற்றுத்திற னாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கைக்கால், காது கேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள், சுய தொழில் வங்கி கடன் உதவி, கல்வி உதவித்தொகை தொழிற் பயிற்சி ஆகியவற்றிற்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், கூட்டுறவு துறை யின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமைப்பெண் கல்வி உதவித்திட்டம், ஆதி திராவிடர் நலத் துறையில் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா, சலவைப்பெட்டி, தையல் எந்திரம் மற்றும் இதர உதவிகள், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தாட்கோ கடனுதவி ஆகிய திட்டங்களில் விண் ணப்பிக்கிறவர்கள் அதற்கு ரிய ஆவணங்களை வழங்கி விண்ணப்பிக்கலாம். தங்களது கோரிக்கையினை கணினியில் பதிவுசெய்ய வேண்டியிருப்பின், அக்கோ ரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப் பாக கொண்டுவர வேண் டும்.

    முகாம் ஆளூர் பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் மிகவும் பேரூ தவியாக இருக்கும் என்பதை தெரிவத்துக்கொள்கிறேன். முகாமில் 252 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில் தனித்துணை கலெக்டர் குழந்தைசாமி, நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பால சுப்பிரமணியன், கல்குளம் தாசில்தார் கண்ணன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராம்குமார், அனைத்து துறை அலுவ லர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 26-ந்தேதி நடக்கிறது
    • இதில் சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கு 36 அடி உயரம்

    கன்னியாகுமரி :

    கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி (ஞா யிற்றுக்கிழமை) கோலா கலமாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி வருகிற 26-ந்தேதி இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கு 36 அடி உயரத்திலும், பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலுக்கு 30 அடி உயரத்திலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 25 அடி உயரத்திலும், களியல் மகாதேவர் கோ வில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் மற்றும் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களுக்கு தலா 23 அடி உயரத்திலும் பனை மரங்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பனந்தோப்புகளில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும்.

    அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். மறுநாள் 26-ந்தேதி திருக்கார்த்திகை அன்று இரவு கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம் ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். அதன் பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனை ஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விடும். அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளி சென்று தங்களது வீடுகளிலோ, தொழில் நிறுவனங்களிலோ அல்லது விளை நிலங்களிலோ போடுவது வழக்கம். இவ்வாறாக இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். சொக்கப் பனை கொளுத்தும் இடங்களில் தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்ட உள்ளனர். இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில் களின் அறங்காவலர் குழு தலை வர் பிரபா ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.
    • மகாலிங்கத்துக்கு கீதா என்ற மனைவியும், தங்கம் என்ற ஒரு மகனும், பகவதி கோகிலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மேலத்தெரு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 76). இவர் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் ஆவார். இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரம் சுடுகாடு பக்கம் உள்ள நாஞ்சில் நாடு புத்தன் ஆற்றில் ஆகாயத் தாமரை செடி, கொடி களுக்கு இடையே பிணம் ஒன்று மிதந்து கொண்டி ருந்ததை அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.

    ஆற்றில் மழை வெள்ளம் அதிக அளவில் கரைபுரண்டு ஓடியதால் அந்த பிணத்தை மீட்க முடியவில்லை. உடனே இதுபற்றி கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் வெங்கட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்து கொண்டிருந்த அந்த பிணத்தை மீட்டனர். அப்போதுதான் ஆற்றில் பிணமாக மிதந்தது கொட்டா ரம் மேலத்தெரு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள் ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆற்றில் பிணமாக மிதந்த மகாலிங்கத்துக்கு கீதா என்ற மனைவியும், தங்கம் என்ற ஒரு மகனும், பகவதி கோகிலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    • கோழிப்போர்விளையில் 132 மி.மீ. பதிவு
    • பேச்சிப்பாறை, சிற்றாரில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. விடிய, விடிய மழை பெய்தது. இதையடுத்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டார்.

    தக்கலை கோழிப் ேபார்விளை பகுதியில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையின் கார ணமாக அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 132 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களியக்காவிளை, மார்த்தாண்டம், பேச்சிப்பா றை, கொட்டா ரம், மயிலாடி, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மலையோர கிராமங்களி லும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மலை யோர பகுதிகளில் உள்ள ரோடுகளை மூழ்க டித்து காட்டாற்று வெள்ளம் செல் கிறது. சாலைகளை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ள னர். பேச்சிப்பாறை அணை யில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதை யாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளியாறு, பரளி யாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரை யோர பகுதி மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றின் கரைக்கு செல்லக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியில் குளிப் பதற்கான தடை நீடிக்கப்பட் டுள்ளது. 4-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற் றம் அடைந்து உள்ளனர். நாகர்கோவிலில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது கன மழை கொட்டி தீர்த்தது.

    தொடர் மழையின் காரணமாக நாகர்கோவில் உள்ள சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினார்கள். தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாகர்கோவில் நகர பகுதியில் கோட்டார், வடசேரி பகுதிகளில் சாக்கடை நீர் நிரம்பி மழை நீருடன் ரோட்டில் சென்றது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.15 அடியாக இருந்தது. அணைக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியா கவும், 509 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.41 அடியாக உள்ளது. அணைக்கு 576 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 480 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 17.09 அடியாக உயர்ந் துள்ளது. அணைக்கு 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழி யாகவும், 500 கனஅடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாக உள்ளது. மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 54.12 அடி நிரம்பி வழிகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீர் உபரிநீராக வெளி யேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கூடல் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளள வான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. கடந்த 25 நாட்களுக்கு மேலாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 47, பெருஞ்சாணி 46.2, சிற்றாறு 1 -67.2, சிற்றாறு 2 87.6, பூதப்பாண்டி 60.6, களியல் 50, கன்னிமார் 42.4, கொட் டாரம் 48.4, குழித்துறை 41, மயிலாடி 62.4, நாகர்கோவில் 63.6, புத்தன் அணை 42.8, சுருளோடு 58.6, தக்கலை 122.4, குளச்சல் 18.6, இரணியல் 34.2, பாலமோர் 22.4, மாம்பழத்துறையாறு 6.4, திற்பரப்பு 53.8, ஆரல்வாய்மொழி 17.2, கோழிப்போர்விளை 132, அடையாமடை 63, குருந் தன்கோடு 66.2, முள் ளங்கினாவிளை 6,7 ஆணைக்கிடங்கு 95.4, முக்க டல் 47.2.

    • 25 பெரிய பாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படுகிறது.
    • பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி முதல் கேரள எல்லை வரையிலான நான்கு வழி சாலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது பாதியில் கைவிடப்பட்டது. நான் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பின் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பணிகளுக்கான மறு ஒப்பந்தம் விடப்பட்டது.

    இந்த பணிகளுக்காக கூடுதலாக 1041 கோடி ரூபாய் அதிகம் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.


    கடுமையான முயற்சிகளின் பலனாக நான்கு வழி சாலைக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

    இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

    தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 25 பெரிய பாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படுகிறது.

    அப்போது இந்த பணிகளை இன்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பணிக்கான திட்ட இயக்குனர் வேல்ராஜ், இந்த பணிக்கான ஒப்பந்தக்காரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் இந்தப் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை இருந்ததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் எடுப்பதற்கான அனுமதியை பெற்று தந்தோம். ஆனால் வெளி மாவட்டத்தில் இருந்து இந்த பணிகளுக்காக மண் கொண்டு வருவதில் உள்ள நடைமுறை சிரமங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர். பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என துறை அதிகாரிகளுக்கு உறுதியளித்தார்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,

    நாகர்கோவில், நவ.22-

    நாகர்கோவில் மாநக ராட்சி 17-வது வார்டுக் குட்பட்ட நெசவாளர் காலனி குறுக்கு தெருக்களில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபட்டுள்ள அலங்கார தரைகற்கள் மறுசீரமைக்கும் பணி,

    46-வது வார்டுக்குட்பட்ட வடக்கு சூரங்குடி, வி.ஐ.பி. கார்டன் மெயின் ரோட்டில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி. 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,

    28-வது வார்டுக்குட்பட்ட சவேரியார் கோவில் பின்பு றம் உள்ள தெருக்களில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாமன்ற உறுப்பினர்கள் கவுசிகி, வீரசூரபெருமாள், ரமேஷ், அனந்த லெட்சுமி, மாநகர துணைச்செயலாளர் ராஜன், பகுதி செயலாளர் சேக் மீரான், ஜீவா, துரை, அணிகளின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சரவணன், பீட்டர் வட்டச் செயலாளர்கள் பிரபாகரன், பெரி, முருகன், முத்து கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, சேலத்தில் இருந்து அரளிப்பூ வருகின்றன.

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டம் தோவா ளையில் புகழ்பெற்ற பூ சந்தை உள்ளது. இந்தச் சந்தைக்கு ஆரல்வாய்மொழி, ராதாபுரம், குமாரபுரம், ஆவரைகுளம், பழவூர் ஆகிய ஊரிலிருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், நெல்லை மாவட்டம் திருக்கண்ணங்குடி, அம்பாச முத்திரம், புளியங்குடி, புளியரை ஆகிய ஊரிலிருந்து பச்சை துளசியும், தோவாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, சேலத்தில் இருந்து அரளிப்பூ வருகின்றன.

    தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. ஆனால் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.600-க்கும், அரளி, ரோஸ் ரூ.150-க்கும், கிரேந்தி ரூ.80-க்கும், மஞ்சள் கிரோந்தி ரூ.85-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படு கிறது.

    இதே பனிப்பொழிவு நீடிக்கும் என்றால் பூக்கள் விலை இதை விட அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது.

    • கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில், நவ.22-

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் கல்வி குழுமத் தின் சேர்மன் பொன் ராபர்ட் சிங் அறிவுறுத்த லின்படி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும், பொன்ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கும் யோகா பயிற்சி வகுப்பு கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் அருள்சன் டேனியல் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஐசக் சாஜன், பொன் ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் வாசு ரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா சிறப்பு ரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக யோகா மாஸ்டர் கோமதி பங்கேற்று யோகா பயிற்சியின் விளக்க உரை யும், செய்முறையையும் மாணவர்களுக்கு வழங்கி னார்.

    இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட கூடைப்பந் தாட்ட கழக செயலாளர் பி. மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • இரட்டை ரெயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது

    தென்தாமரைகுளம் :

    கன்னியாகுமரி முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரெயில் பாதை பணிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது.

    கேரளாவில் 38 சதவீத மும், தமிழ்நாட்டில் 14 சதவீதம் நில ஆர்ஜி தம் முடிந்துள்ளது. இந்த இரட்டை ரெயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

    பணிகள் காரணமாக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் சுக்குபாறைதேரி விளை ரெயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நேற்று (21-ந் தேதி) மாலை. 4.30 மணி அடைக்ககப்பட்டது இந்த கேட் அடுத்த மாதம் (டிசம்பர்) 20ம் தேதி இரவு 10 மணி வரை 30 நாட்களுக்கு அடைக்கப் பட்டு இருக்கும்.

    எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்லு மாறு அங்கு வைக்கப் பட்டுள்ள அறி விப்பு பலகையில் தெரி விக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில்வேகேட் அகஸ்தீஸ்வரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியில் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளது.

    இந்த கேட் மூடப்பட்டு உள்ளதால் இந்த வழி யாக கல்லூரி, பள்ளி மற்றும் கன்னியாகுமரிக்கு அரசு பஸ்கள், மற்றும் தனியார் பள்ளி,கல்லூரி பஸ், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக கன்னியாகுமரி மற்றும் கல்லூரி, பள்ளி களுக்கு செல்லும் வாக னங்கள், இருசக்கர வாக னங்கள் மாற்று வழியாக. அகஸ்தீஸ்வரம், மாடு கட்டிவிளை சரவணன் தேரி, சுக்குப்பாறைதேரிவிளை வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ப வர்களும், கன்னியா குமரிக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி குள்ளாகியுள்ளனர். 

    • சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள்
    • ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனை கள் செய்துள்ளனர்

    நாகர்கோவில், நவ. 22-

    டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை 58-வது ஆண்டுவிழா கொண்டா டப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் தேவ பிரசாத் ஜெயசேகரன், சாபு சேகரன், ரெஞ்சித் ஜெய சேகரன் தெரிவித்த தாவது:- மருத்துவமனையில் விபத்து காப்பு பிரிவு, இரு தயப்பிரிவு, மகளிர் நலம் மற்றும் மக ப்பேறு பிரிவு, உடல் எடை குறைக்கும் பிரிவு, சர்க்கரை நோயா ளிகள் பிரிவு, செயற்கை கருத்தரித்தல் பிரிவு, பிசியோ தெரபி பிரிவு, சிறுநீரக பிரிவு என எண்ணற்ற பிரிவுகள் குமரி மாவட்டம் மற்றும் இல்லாமல் அண்டை மாவ ட்டம், மாநில மக்களும் பயன் பெறுகின்ற னர்.சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள், ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனைகள் செய்துள்ளனர் என அவ ர்கள் தெரிவித்தனர். விழா வில் சிறப்பு விருந்தி னராக முன்னாள் இந்திய தபால் துறை ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர், கவுரவ சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்நாடு காவ ல்துறை தலைவர் சைலே ந்திர பாபு, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆசீர் பாக்கிய் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சில துறைகள் புதிதாக திறக்கப்பட்டது மற்றும் சில துறைகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. மருத்துவர்கள் நினோ ஜார்ஜ், பாலா வித்யா சாகர், திரவியம் மோகன், சந்திர சேகர் இம்மானு வேல், தீபக் டேவிட், கீதா ஆகியோர் அவரவர் துறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

    • பதட்டம் நிலவியதால் போலீசார் விரைந்தனர்
    • தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் பகுதியில் பம்மத்திலிருந்து வெட்டுமணி வரை 2¾ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும் பொது மக்கள் நடந்து செல்ல நடை பாதை அமைக்கப்பட்டது.

    இதில் பொது மக்களுக்கு நடந்து செல்ல வசதியாக பல பகுதிகளில் படிக்கட்டு களும் அமைக்கப்ப ட்டுள்ளது. இதில் உயர்வாக காணப்படும் பகுதிகளில் சில கடை வியாபாரிகள், ஆக்கிரமிப்பு செய்ததோடு தங்களுக்கு வசதியாக கடைகளில் இருந்து நடைபாதைக்கு செல்லும் வழியின் மேற்பகுதிகளில் சீட்டுகளை அமைத்து கடையாக மாற்றி உள்ளனர். மேலும் சாலையிலிருந்து கடைக்கு செல்ல நடை பாதையை உடைத்து, தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் காந்தி மைதானத்தை தொட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு படி அமைக்க முயன்றனர். அவர்கள் கனரக வாகனம் மூலம் நடைபாதையை உடைத்தனர். மேலும் நடைபாதையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கிரில்களையும் உடைத்து எடுத்துள்ளனர்,

    இதை கேள்விப்பட்ட பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு, குழித்துறை நகர பா.ஜ.க. தலைவர் சுமன், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் பிரதாப், உமேஷ் உட்பட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் நடைபாதையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததோடு போராட்டமும் நடத்தினர்.

    இதையடுத்து சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நடைபாதையை இடிக்க பயன்படுத்திய கனரக எந்திர வாகனம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×