என் மலர்
கன்னியாகுமரி
- 50,000 நீட் விலக்கு கையெழுத்துகள் பெறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸ்பின், கிருபா ஆகியோர் தலைமை தாங்கினார்
மார்த்தாண்டம் :
விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் நீட் கையெழுத்து இயக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் குழித்துறை நகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸ்பின், கிருபா ஆகியோர் தலைமை தாங்கினார். தொகுதி ஒருங்கிணைப் பாளர்கள் ஆல்பின் கான், ரூபின் தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மேல்புறம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், குழித்துறை நகர செயலாளர் வினுக்குமார், குமரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவபாலன், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜாண்சன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லிஜிஸ் ஜீவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் 50,000 நீட் விலக்கு கையெழுத்துகள் பெறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
- இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது
- சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் ,கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர், ஆலயத்தில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 6-ம் நாள் திரு விழா நடைபெற்றது. இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை ,புகழ்மாலை ,திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மறையுரை நடைபெறுகிறது. அதன் பிறகு இன்று இரவு 9 மணிக்கு குமரி மண்ணில் விழுந்த விதை புனித தேவ சகாயமே என்ற பிரம்மாண்ட வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல மேடைகளில் பிரபல கலைஞர்கள் இந்த நாட கத்தில் நடிக்க உள்ளனர். நாளை 8-ம் நாள் விழா வில் சிறப்பு நிகழ்ச்சியாக சமபந்தி நடைபெறுகிறது. சனிக்கிழமை 9ம் நாள் திருவிழாவும், இரவு கிறிஸ்து அரசர் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை 26-ந் தேதி 10ம்நாள் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியும் இரவு சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன. ஆயர் நசரேன் சூசை பங்கு பெற்று தலைமை மறையுரை ஆற்றுகிறார்.
விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர்கள் ,பங்கு பேரவை பொறுப் பாளர்கள் ,உறுப்பினர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
- மத்திய மந்திரிக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி, நவ.23-
மத்திய மந்திரி ஜெய்சங்க ருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள் ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பெதலீஸ் (வயது-51). இவரது தலைமையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த 17 மீனவர்கள் ஓமன் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் 17 பேரும் ஓமன் நாட்டில் உள்ள துக்கம் மீன்பிடி துறை முகத்திலிருந்து மஸ்கட் பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த னர். இவர்களுக்கு ஓமன் நாட்டு விசைப்படகு உரிமையாளர் கடந்த 3 மாத காலமாக ஊதியம் அளிக்கா மல் இருந்து வந்ததாக கூறப்பட்டுகிறது.
மீனவர்கள் ஒமன் நாட்டில் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து அதனை ஒரு அரபி உரிமை யாளரிடம் ஒப்படைத்து அதற்குரிய சம்பளத்தை பெற்று வந்தனர். ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த அரபி ஒவ்வொரு மாதமும் மீன்பிடித்ததற்குரிய சம்பளத்தை கொடுக்கும் போதெல்லாம் ஒரு தொகையை பிடித்தம் செய்துவிட்டு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு பலமுறை சம்பள பிடித்தம் செய்யப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
இதனால் பெதலீஸ் அந்த விசைப்படகு உரிமையா ளரிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெதலீசை, விசைப்படகு உரிமையாளர் தரப்பினர் சட்ட விரோத மாக சிறைபிடித்து சென்ற தாக அவருடன் வேலைக்குச் சென்ற பிற மீனவர்கள் பெதலீஸ் மனைவி சோபா ராணிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். மேலும் ஓமன் நாட்டில் உள்ள பிற மீனவர்களுக்கு கடந்த ஒரு வார காலமாக உணவு பொருட்களையும் விசைபடகு உரிமையாளர் தரப்பில் வழங்க மறுத்து வருவதாகவும் தெரிகிறது.
இதையடுத்து அவர் தனது கணவரை மீட்டு தரக்கோரி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். இதேபோல் குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்ற மீனவர்களின் குடும்பத் தினரும் அதிகாரி களிடம் கோரிக்கை வைத்துள் ளார்கள்.குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
உணவு அளிக்கப்படாமல் சித்ரவதைக்கு உள்ளாகி யிருக்கும் மற்ற மீனவர்களின் குடுமப்பத்தினரும் கவலை யில் ஆழ்ந்துள்ளனர். எனவே குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 17 மீனவர்களின் குடும்பத்தி னரும் அந்தந்த மாவட்டங் களில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- வாலிபர் மீது போக்சோ வழக்கு
- 'நீ என்னை காதலிக்காவிட்டால் கொன்று விடுவேன்' என மிரட்டினராம்.
குளச்சல் :
கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி கேரள மாநிலம் பொழிவூர் பருத்தியூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தார். அப்போது அவரை வாலிபர் வின்சென் (வயது24).என்பவர் பார்த்து ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் வின்சென் தனது காதலை மாணவியிடம் கூறினாராம். இதனை மாணவி வீட்டில் கூறியுள்ளார். வீட்டினர் கடந்த 6 மாதம் முன் வின்செனை கண்டித்தார்கள். கடந்த மாதம் 10 ம் தேதி மாணவி பள்ளிக்கு செல்லும்போது வின்சென் மீண்டும் மாணவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 'நீ என்னை காதலிக்காவிட்டால் கொன்று விடுவேன்' என மிரட்டினராம்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி மாலை வீடு வந்து மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.வீட்டினர் மாணவியை மீட்டு பாறசாலையில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று கடந்த
21-ந் தேதி வீடு திரும்பினார்.
இந்த சம்பவத்தால் பயந்து போன மாணவியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வின்சென் மீது போக்சோ மற்றும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோரின் பாசப்போராட்டம் தோல்வி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,
இரணியல் :
இரணியல் அருகே வில்லுக்குறி சரல்விளை பகுதியில் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 36) பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சகாய அஸ்வினி (22). இவர் தலக்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் திடீரென வீட்டில் இருந்து மாயமானார்கள். அக்கம் பக்கம் தேடிய போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,
இந்த நிலையில் நேற்று இரவு சகாய அஸ்வினி, சாமிநாதனுடன் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் முன்னிலையில் ஆஜராகி, தான் சாமிநாதனை காதலித்து வந்ததாகவும் தற்போது களக்காடு அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் வாழ்ந்தால் சாமிநாதன் உடன் இணைந்து வாழ்வேன் என்று உறுதியாக கூறினார். அவரிடம் பெற்றோர் பல விதமான அறிவுரை கூறியும் பயனற்ற நிலையில் கண் கலங்கிய படி நின்றனர். இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைத்தார்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் தாட்கோ மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை
நாகர்கோவில்
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக நிலம் வாங்குதல் திட்டமானது ஆதிதிராவிடர் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு என உருவாக்கப்பட்டு, அவர்க ளின் நிலஉடைமையை அதிகரிக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்க ளுக்கு வழங்கப்ப டும். இத்திட்ட த்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும், 18-65 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்த மகளிர் அல்லது மகன்கள் அல்லது கணவர் பெயரில் மட்டுமே வாங்கப்படும் நிலம் பதிவு செய்யப்பட வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் அற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். மேலும், நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்) திட்டத்தின்கீழ் ஆழ்குழாய் கிணறு, திறந்த வெளி கிணறு, பம்பு செட் அமைத்தல், குழாய் அமைத்தல், சொட்டுநீர் பாசனம் மற்றும் சுழல்முறை நீர்பாசனம் அமைத்தல் போன்றவற்றிற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும், 18-65 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவடர் விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு பெற்றுத்தந்திட முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற வயது வரம்போ, குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்போ ஏதும் இல்லை. தொழில் முனைவோர் திட்டம் – சிறப்புத்திட்டமானது பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைப்ப தற்கானது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எண்ணெய் நிறுவனத்தால் அவ்வபோது நிர்ணயம் செய்யப்படும் வயது வரம்பு, கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தொழில் முனைவோர் திட்டத்தில் இணையும் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 18-–65 வயத்திற்குள்ளவராகவும், தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் தாட்கோ மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில்புரிய வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டத்தில் குழு உறுப்பினர்கள் ஆதிதிராவிடர் மகளிர் 18-– 65 வயதுவரை உடையவராக இருக்கலாம். இதுவரை அரசு மானியம் பெறாத குழுவாகவும் இருக்க வேண்டும், சுழல்நிதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பல்வேறு திட்டங்கள் இத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்ப முள்ள வர்கள் ஆதிதிராவிடர்கள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் எனில் http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாகர்கோவில் முகவரியிலும், தொலைபேசி எண் 04652-220532, அலைபேசி எண் 94450 29468 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-23-ம் ஆண்டில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 52 பயனாளிகளுக்கு ரூ.66.6 கோடி மதிப்பில் அரசு மானியத்துடன் கூடிய ரூ.2.16 கோடி மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு ரூ.44.04 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.1.87 கோடி மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் (மருந்தகம்) கீழ் 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் மதிப்பிலான கடனுதவியும், நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.1.80 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.3.60 லட்சம் மதிப்பிலான கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வழங்கினார்
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 102-வது ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவுக்கு கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபரான பங்கு தந்தையும், பள்ளி தாளாளருமான உபால்டு தலைமை தாங்கினார். விழாவில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் முன்னாள் விஞ்ஞானியும், இணை இயக்குனருமான குமார், பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா, உதவி தலைமை ஆசிரியர் ஜாண் சுகிலன், முன்னாள் தலைமை ஆசிரியர் டாக்டர் ரெம்ஜியூஸ் பரதராஜ், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் கடந்த கல்வியாண்டில் அதிக தேர்ச்சி சதவீதம் காட்டிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை உதவி தலைமை ஆசிரியர் சாந்தா ஜெயராணி விஜயா, இடைநிலை ஆசிரியர் டீபர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் ஆசிரியர் அஜாஸ் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்ததால் பரிதாபம்
- ரூ.70 ஆயிரம் தர வேண்டி உள்ளது என கூறி செல்லத்துரையிடம் தொடர்ந்து பணம் கேட்டு தெந்தரவு செய்துள்ளார்.
தக்கலை :
தக்கலை அருகே உள்ள புங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 62), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்தவரிடம் இருந்து ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
பின்னர் இதற்காக வட்டி மற்றும் கடன் தொகையை முழுவதையும் கட்டி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் கொடுத்த நபர் இன்னும் ரூ.70 ஆயிரம் தர வேண்டி உள்ளது என கூறி செல்லத்துரையிடம் தொடர்ந்து பணம் கேட்டு தெந்தரவு செய்துள்ளார்.
இதனால் செல்லத்துரை மனவேதனை அடைந்தார். அவர் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்துள் ளார். இத னால் செல் லத்துரை மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செல்லத்துரை இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்கலை பகுதியில் கந்து வட்டி கொடுமையால் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரிய வில்லை.
- அய்யப்ப பக்தராக இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே புதிதாக கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்காக அங்கு கல், மண் மற்றும் கட்டுமான பொருட் கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டுமான பொருட் களுக்கு இடையே நேற்று மாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். சுமார் 5 அடி உயரம் கொண்ட அவர் காவிகலர் வேட்டியும், ரோஸ் நிற சட்டையும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரிய வில்லை.
காவி நிற வேட்டி அணிந்து இருந்ததால் அவர் சாமியாராக இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப் பற்றி விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு உடலை பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது.
இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கழுத்தில் மாலைகள் அணிந்து இருந்ததால் அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த அய்யப்ப பக்தராக இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல் :
குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குளச்சல் சுற்று வட்டார பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ளியாகுளம் நிரம்பி உள்ளது. கடல் பகுதியிலும் மழை பெய்ததால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சில கட்டுமரங்களே கடலுக்கு சென்றன. அவற்றுள் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் குளச்சலில் இன்று மீன் வரத்து குறைந்தது. தவிர குளச்சல் கடல் பகுதியில் தற்போது நடந்து வரும் கடல் பாறையில் சிப்பி மீன் எடுக்கும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
- கடலில் 80 மீட்டர் நீளத்துக்கு 1140 சிமெண்ட் பிளாக்குகள் மூலம் நிரப்பப்படுகிறது
- பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகா னந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வரு கிறார்கள்.
இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த படகுகளை நிறுத்து வதற்காக கன்னியாகுமரி வாவதுறை கடற்கரை பகுதியில் படகுத்துறை உள்ளது. இங்கு விவேகா னந்த கேந்திர பணியாளர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பணிக்கு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டுவரும்"ஏக்நாத்"என்ற படகும் நிறுத்தி வைக் கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் வட்ட கோட்டைக்கு இயக்கப்படும் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 புதிய அதிநவீன சொகுசு படகுகளும் தற்போது படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. படகுத்துறையில் ஒரே இடத்தில் 6 படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டு உள் ளது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல் லும் மற்ற 3 படகுகளும் இந்த படகுத் துறைக்குள் வந்து செல்வ தற்கு மிகவும் சிரமப்படு கின்றன. சில சமயங்களில் விபத்துக்கள் நேரிட வாய்ப்பு கள் இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து படகு துறையில் ஏற்பட்டுஉள்ள இட நெருக்க டியை சமா ளிக்க படகுத் துறையின் தெற்கு பக்கம் உள்ள கடல் பகுதியில் கூடுதலாக ஒரு புதிய படகு தளம் அமைக்க சுற்றுலாத்து றை நடவ டிக்கை மேற்கொண்டு உள்ளது. புதிய படகு தளம் ரூ.7 கோடி செல வில் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது. இதற்கான திட்ட மதிப் பீட்டை மீன்வ ளத்துறை பொறியியல் பிரிவைச் சேர்ந்த பொறி யியல் வல்லு னர்கள் தயா ரித்து உள்ள னர்.
இதைத் தொடர்ந்து படகு தளம் அமைப்ப தற்காக 1140 சிமெண்ட் பிளாக்குகள் கன்னியா குமரிஅருகே உள்ள மாதவபுரம் பகுதியில் தயாரிக் கப்பட்டது. இந்த ஒவ்வொரு சிமெண்ட் பிளாக்குகளும் 4 டன் முதல் 7½ டன் வரை எடை கொண்டதாக அமைக்கப் பட்டு உள்ளது.
இந்த சிமெண்ட் பிளாக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரக வாகனங்களில் கிரேன் மூலம் ஏற்றப்பட்டு கன்னியா குமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறை வளாகத்தில் கொண்டு வந்து வைக்கப் பட்டது.
இந்த நிலையில் புதிய படகு தளம் அமைக்கும் பணி தொடங்கிஉள்ளது. 80 மீட்டர் நீளம் (264அடி) 20 மீட்டர் அகலத்தில் இந்த புதிய படகு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது." ட " வடிவில் இந்த புதிய படகு தளம் அமைக்கப்படு
கிறது. இதுவரை 150 சிமெண்ட் பிளாக்குகள் 40 டன் எடை திறன் கொண்ட ராட்சத கிரேன் மூலம் கடலில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது.
கடலில் 3 மீட்டர் ஆழத்துக்கு இந்த சிமெண்ட் பிளாக்குகள் இறக்கி வைக்கப்பட்டு இந்த புதிய படகுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலுக்கு அடியில் இந்த சிமெண்ட் பிளாக்கு களை இறக்கி வைக்கும் பணியை கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள 133 அடி உயரதிருவள்ளுவர் சிலையை நிறுவும் பணியில் ஈடுபட்ட இம்மானுவேல் அண்டர் வாட்டர் என்ஜினி யரிங் நிறுவனம் மேற் கொண்டு வருகிறது.
- விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவட்டார், நவ.23-
திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் குமரன்குடி ஊராட்சிக்குட்பட்ட மங்காட்டுகடை பகுதியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவட் டார் வட்டார ஆணை யாளர்கள் சசி, யசோதா, வட்டார பொறி யாளர் சஞ்சுபொன்ராஜன், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், முன்னாள் வட்டார தலைவர் ஜெகன் ராஜ், குமரன்குடி ஊராட்சி மன்ற தலைவர் பால்சன், துணை தலைவர் சுபலா, வேர்கிளம்பி பேரூராட்சி துணை தலைவர் துரைராஜ் மனுவேல், மாவட்ட காங் கிரஸ் பொதுசெயலாளர் ஜான்இக்னேசியஸ், ஆற்றூர் நகர தலைவர் ஜான் வெர்ஜின், வட்டார பொது செயலாளர் ஜஸ்டின், ஓ.பி.சி. பிரிவு வட்டார தலைவர் ஜெகன், அரசு ஒப்பந்தகாரர் பிரின்ஸ் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.






