என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.
    • போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் நேற்று மணவாளக்குறிச்சி மற்றும் மண்டைக்காடு பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.

    மேலும் கடைகளில் போதைப்பொருட்கள் விற்கக்கூடாது. போதைப்பொருள் கேட்டுவரும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் பற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துபவர் பற்றி அறிந்தால் அதுபற்றி தகவலை தெரிவிக்க வேண்டும், தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும் கடைகளில் போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • போட்டிகளில் நீல நிற அணி அதிக புள்ளிகள் பெற்று ஓவர் ஆல் சாம்பியன் சுழற்கோப்பையினை வென்றது.
    • விழா நிகழ்வுகளை மாணவர்கள் பெரிஸ் மத்தியூ மற்றும் அத்வெய்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு தின விழா கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் விளையாட்டு தின நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.

    மாணவர்கள் நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என குழுவாக கொடி அணிவகுப்பு நடத்தினர். மாணவர்கள் உடற்பயிற்சி நடனம், பாம்-பாம் நடனம், டம்பில்ஸ் நடனம், ஏரோபிக் பந்து நடனம் மற்றும் லெசீம் நடனம் ஆடி மகிழ்வித்தனர்.

    குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் விழாவில் பங்கேற்று விளையாட்டு தின கொடியேற்றினார்.

    போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 345-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சர்வதேச தடகள பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி பிரிட்டோ ஜாய் கோப்பைகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளில் நீல நிற அணி அதிக புள்ளிகள் பெற்று ஓவர் ஆல் சாம்பியன் சுழற்கோப்பையினை வென்றது.

    முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்டணி சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர் ஆன்டணி, விளையாட்டு அணி தலைமை மாணவன் ஆதில் பெலிக்ஸ், மாணவிகள் வம்ஷிகா, அதிதி சந்திரசேகர், மெலிட்டா விக்ட்டி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் தலைமையில் நிர்வாக அதிகாரி டெல்பின், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆன்டணி, சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    விழா நிகழ்வுகளை மாணவர்கள் பெரிஸ் மத்தியூ மற்றும் அத்வெய்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • உணவு மற்றும் பொருள் உதவிகள் வழங்கி கொண்டாடுவது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், ரமணிரோஸ், ஏசு ரெத்தி னராஜ், வைகுண்டதாஸ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சசிசுபாசிங் வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். பேரூர் செயலாளர்கள் சேவியர் ஏசுதாஸ், சுஜெய்ஜாக்ஸன், செல்வதாஸ், நிர்வாகிகள் குளச்சல் சபீன், ஜெயவி ஜயன், அருள்பிரபின், ஜெய்வின்ராஜா, சிவகுமார், வில்சன், அசன், ரெஜின் உட்பட பலர் கலந்துகொண்டனர். மகளிர் அணி நிர்வாகி லீமா நன்றி கூறினார்.

    நாளை (27-ந்தேதி) தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது. ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அங்கன்வாடி மையங்கள், முதியோர் இல்லங்கள், மாணவர் காப்பகங்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தொழுநோயாளிகள், புற்றுநோய் மையங்கள், மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு தேவையான உணவு மற்றும் பொருள் உதவிகள் வழங்கி கொண்டாடுவது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • இன்று இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது
    • இணை பங்கு தந்தை அருட்பணியாளர்கள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கடந்த 16-ந்தேதி குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 10-ம் நாள் திருவிழா நடைபெற்றது. காலை ஆயர் நசரேன் சூசை மறை உரையாற்றினார். அருட்தந்தை டோனி ஜெரோம் மற்றும் இணை பங்கு தந்தை அருட்பணியாளர்கள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

    இன்று மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு கிறிஸ்து அரசர் கலைக்குழுவினர் நடத்தும் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 10 நாட்களாக நடைபெற்று வரும் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    • அப்டா திட்டம் மற்றும் மேம்பாடு பொன்னம்பலம் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார்.
    • அப்டா மார்க்கெட் தலைவர் பால்ராஜ் ஏற்புரை வழங்கினார்.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் தேரே கால்புதூர் விவசாய விளைபொருள் உற்பத்தியா ளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் (அப்டா) 2023-2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று அப்டா மார்க்கெட் அலுவலக சங்க கூட்ட அரங்கத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் அப்டா சங்க கவுரவ ஆலோசகர் வர்க்கீஸ் வரவேற்று பேசினார். புதிய தலை வராக பால்ராஜ், பொதுச்செயலாளராக சுதேசன், பொருளாளராக சிவசங்கர், துணை தலை வர்களாக ராதாகிருஷ்ணன், கிருஷ்ணதங்கம், துணை செயலாளர்களாக ராஜா, கர்ணன், செயற்குழு உறுப்பி னர்களாக கோபால கிருஷ்ணன், வைகுண்ட மணி, சுந்தர்ராஜ், அய்யப் பன், செந்தில்குமார், சாகுல்ஹமீது, சண்முக வேல், மணிகண்டன், முருகன், சொர்ணம் பிள்ளை, ராஜேந்திரன், டேவிட், கணேசன், தங்கத்துரை, விஜயகுமார், பாபு, சுயம்புலிங்கம், பொன்லிங்கம் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    பதவி ஏற்ற புதிய நிர்வாகிகளுக்கு வெற்றி சான்றிதழ்களை தேர்தல் குழு தலைமை அதிகாரி வக்கீல் இளம்பரிதி, அப்டா மார்க்கெட் சட்ட ஆலோசகர் வக்கீல் பெறி ஆகியோர் வழங்கினர்.

    இவர்களுக்கு அப்டா திட்டம் மற்றும் மேம்பாடு பொன்னம்பலம் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார். அப்டா மார்க்கெட் தலைவர் பால்ராஜ் ஏற்புரை வழங்கினார்.

    தேரேகால்புதூர் பஞ்சா யத்து தலைவர் சோமு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில செயல் தலைவர் டேவிட்சன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ், தேர்தல் குழு தலைமை அதிகாரி இளம்பரிதி, அப்டா மார்க்கெட் சட்ட ஆலோசகர் வக்கீல் பெறி மற்றும் அப்டா பொதுக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள், உற்பத்தி யாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் குடும்பத்தினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் அப்டா துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • பிரபா ராமகிருஷ்ணன் அறிக்கை
    • நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், அறங்காவலர் குழு தலைவரும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைவருமான பிரபா ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை (27-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாளை காலை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அச்சன்குளத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ள வர்களுக்கு காலை உணவு மற்றும் புத்தா டைகள் வழங்கப்படு கிறது. மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவி ல்களில் உதயநிதி ஸ்டாலின் பேரில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது.
    • காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    திசையன்விளையில் நடைபெற்ற திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பாசறை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் கே.பி.கே. ஜெயகுமார், சங்கர பாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், பிரின்ஸ், ராஜேஷ் குமார், ஊர்வசி அமிர்தராஜ், அசோகன், ராதாகிருஷ்ணன், துரை சந்திரசேகர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனுஷ்கோடி ஆதித்தன், ராமசுப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே அமைக்கப்பட உள்ள இரட்டை ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
    • ரெயில்வே கேட்களில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-நெல்லை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தற்பொழுது இரட்டை ரெயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ரெயில்வே கிராசிங் பகுதிகளில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரெயில்வே கேட்டை மூடிவிட்டு தண்டவாளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரெயில்வே கேட் பகுதிகளில் உள்ள தண்டவாள பகுதிகளில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ள இடத்தில் நவீன மயமாக்கப்படும் வகையில் ரப்பர் சீட்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து ரப்பரைஸ்ட் சீட்டுகள் கொண்டு வரப்பட்டன. தற்போது தண்டவாளங்கள் அமைக்கப்படும் பகுதியில் சிமெண்ட் கற்களுக்கு பதிலாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே கேட் பகுதிகளில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகின்றன.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்பொழுது ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட், ராஜாவூர் பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குலசேகரன் புதூர் பகுதியில் ரெயில்வே கேட்டில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு அதற்கான பணியை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    2 நாட்களுக்குள் அந்த பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து கோதைகிராமம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து மற்ற ரெயில்வே கேட்களிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் கன்னியாகுமரி-நாகர்கோவில் பகுதியில் ஏற்கனவே இரட்டை ரெயில் பாதை பணிக்காக பல்வேறு ரெயில்வே கேட்டுகளில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிமெண்ட் கற்களை அப்புறப்படுத்தி விட்டு அந்த பகுதிகளிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் நாகர்கோவில்-திருவனந்த புரம் இடையே அமைக்கப்பட உள்ள இரட்டை ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்களில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி, ராஜாவூர் பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 3-வது கேட்டாக குலசேகரன்புதூர் பகுதியில் இந்த பணி நடந்து வருகிறது. மற்ற ரெயில்வே கேட் பகுதிகளிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படும்.

    ஏற்கனவே அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் அகற்றப்பட்டு ரப்பரைஸ்ட் சீட்டுகள் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கேட்டில் பணி மேற்கொள்வதற்கு 2 நாட்கள் ஆகும். அந்த நேரங்களில் அந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது. ரூ.1.86 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த பணிகளை, மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, மாநகராட்சி தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன்.

    குளச்சல் :

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் மலை சார்ந்த மாவட்டம் ஆகும். இது தமிழ்நாட்டிலேயே சிறிய மாவட்டம். இதன் பரப்பளவு 1672 சதுர கி.மீ. ஆகும். அரசு வனப்பகுதி 504.86 சதுர கி.மீ. இது மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 30.2 சதவீதம் ஆகும். கடற்கரையின் பரப்பளவு 36 சதுர கி.மீ. மீதி சுமார் 1200 சதுர கி.மீ. நிலப்பரப்பாகும். இதில் தான் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு தரப்பு மக்களின் கட்டி டங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. ஆனால் மக்கள் நெருக்கமாக வாழும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக மாவட் டத்தில் ஏழை, எளிய மக்கள் தங்கள் பெண் குழந்தை களின் திருமணம் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய போன்ற கொடிய நோய் தீர்க்க சிகிச்சைக்கு பணம் புரட்ட தங்கள் நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் நிலங்களின் பத்திரப்பதிவின்போது பத்திரப்பதிவு புதிய வழி காட்டுதல்படி 33 அடி இடம் பாதைக்கு விட்டு கொடுக்க வேண்டி உள்ளது.

    பிற மாவட்டங்கள் அதிக நிலப்பரப்பு கொண்டது. அங்கு 33 அடி இடம் விட்டால் பாதிப்பு இல்லை. குமரி மாவட்டம் நிலபரப்பு குறைந்த பகுதியாகும். இப்படி இடம் விடுவதால் குறைந்த அளவு நிலம் வைத்துள்ளவர்கள் இடத்தை விற்க முடியாமல் இருந்து வருகிறார்கள். இத னால் நிலங்களை வாங்கு வதற்கு யாரும் முன்வருவ தில்லை. நிலங்களை வாங்க யாரும் முன்வராத நிலையில் திருமணம், அவசர பணம் தேவை போன்ற காரியங் களுக்கு நிலங்களை விற்ப னை செய்ய முடியாமல் உள்ளது.

    எனவே அரசு ஏழை, எளியவர்களை பாதிக்கும் பத்திரப்பதிவு புதிய நடை முறைகளில் குமரி மாவட் டத்திற்கு விலக்களித்து குமரி மாவட்ட பொது மக்களை பாதுகாத்திட வேண்டும். பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன். இதனை வரும் சட்டமன்ற கூட்டத்திலும் வலியுறுத்தி பேசுவேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 10 மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.
    • 40 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    குளச்சல் :

    குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றார்.

    குளச்சல் மெயின் ரோடு ஒரு தனியார் மருத்துவ மனை அருகில் சாலையில் செல்லும்போது சந்தேகத் திற்கிடமாக ஒரு மூதாட்டி நின்று கொண்டி ருந்தார். போலீசாரை கண்ட தும், அவர் தப்பியோட முயற் சித்தார்.

    போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசா ரணை நடத்தினர். விசார ணையில் அவர் காரங்காடு நுள்ளி விளையை சேர்ந்த பேபி (வயது 70) என தெரியவந்தது. மேலும் அவர் பையில் அனுமதியின்றி 40 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவற்றை பறிமுதல் செய்து மூதாட்டியை கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் ரோந்து செல்லும் போது பாலப் பள்ளம் நீர்வக் குழியை சேர்ந்த செல்வம் (63) அனுமதியின்றி 10 மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் செல்வத்தையும் கைது செய்தனர்.

    • குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
    • ஆத்திரம் அடைந்த கணேசன் சக தொழிலாளி ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    நாகர்கோவில் :

    தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50). இவர் மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    அதே ஓட்டலில் நெல்லை ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) என்பவரும் வேலை பார்த்தார். இருவ ருக்கும் இடையே உணவு சப்ளை செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் சக தொழிலாளி ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக மார்த் தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்த னர்.

    கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயில் அடைக்கப் பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார்.

    இதையடுத்து மார்த் தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் கணேசனை நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங் கோட்டை ஜெயிலில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

    ×