அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு

குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்உணவு மற்றும் பொருள் உதவிகள் வழங்கி கொண்டாடுவது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு
Published on

இரணியல் :

குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், ரமணிரோஸ், ஏசு ரெத்தி னராஜ், வைகுண்டதாஸ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சசிசுபாசிங் வரவேற்றார்.

ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். பேரூர் செயலாளர்கள் சேவியர் ஏசுதாஸ், சுஜெய்ஜாக்ஸன், செல்வதாஸ், நிர்வாகிகள் குளச்சல் சபீன், ஜெயவி ஜயன், அருள்பிரபின், ஜெய்வின்ராஜா, சிவகுமார், வில்சன், அசன், ரெஜின் உட்பட பலர் கலந்துகொண்டனர். மகளிர் அணி நிர்வாகி லீமா நன்றி கூறினார்.

நாளை (27-ந்தேதி) தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது. ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அங்கன்வாடி மையங்கள், முதியோர் இல்லங்கள், மாணவர் காப்பகங்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தொழுநோயாளிகள், புற்றுநோய் மையங்கள், மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு தேவையான உணவு மற்றும் பொருள் உதவிகள் வழங்கி கொண்டாடுவது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com