மணவாளக்குறிச்சியில் கடைகளில் போலீசார் அதிரடி சோதனை

போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
மணவாளக்குறிச்சியில் கடைகளில் போலீசார் அதிரடி சோதனை
Published on

மணவாளக்குறிச்சி :

மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் நேற்று மணவாளக்குறிச்சி மற்றும் மண்டைக்காடு பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.

மேலும் கடைகளில் போதைப்பொருட்கள் விற்கக்கூடாது. போதைப்பொருள் கேட்டுவரும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் பற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துபவர் பற்றி அறிந்தால் அதுபற்றி தகவலை தெரிவிக்க வேண்டும், தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும் கடைகளில் போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com